தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க அருணாச்சலம் வந்து பேசுகிறார். இந்த வீட்டுக்கு நீ வந்ததிலிருந்து நல்லது கெட்டது எல்லாத்துக்கும் சூர்யாவுக்கு ஆதரவா நின்னு இருக்க, அதுக்கு பதிலா இந்த குடும்பம் உனக்கு என்ன செஞ்சு இருக்குன்னு பார்த்தா ஒண்ணுமே இல்ல துன்பத்தை மட்டும் தான் கொடுத்திருக்கு என்று சொல்லுகிறார். இது எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி ஒரு விஷயம் முடிவு பண்ணி இருக்கோம் உனக்கும் சூர்யாவுக்கும் கல்யாணத்தை ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண முடிவு பண்ணி இருக்கோம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என நந்தினி சொல்லுகிறார். திடீர்னு இப்படி சொன்னா எப்படி ஐயா ஏற்கனவே ஒரு வாட்டி பெரிய பிரச்சனையாகிடுச்சு திரும்பவும் அதே மாதிரி பண்ணா எப்படி என்று கேட்க இந்த வாட்டி அது மாதிரி எதுவும் நடக்காது என்று சொல்லுகிறார்.இந்த வீட்ல நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வரணும்னா கண்டிப்பா இந்த ரெஜிஸ்ட்ரேஷன் நடக்கணும் என்று சொல்ல நந்தினியும் வர சம்மதிக்கிறார் பிறகு அருணாச்சலம் சென்று விடுகிறார்.
மறுபக்கம் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர அருணாச்சலம் கூப்பிட்டு உட்கார வைக்கிறார். நீ எடுத்த ரெஜிஸ்ட்ரேஷன் முடிவு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்ல அதே மாதிரி குடியையும் நிறுத்து என்று சொல்லுகிறார் அதெல்லாம் முடியாது டாடி என்று சொல்லுகிறார். குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே என்று சொல்ல எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் இதுதான் என சொல்லுகிறார். நீங்க நந்தினி கிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டீங்களா என்று கேட்க எப்படியோ பேசி வாங்கி இருக்கேன் ஆனா அவ மனசுல நிறைய குழப்பமும் பயமும் இருக்கு என்று சொல்லுகிறார். திடீர்னு நீ நந்தினிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி லீகலா பொண்டாட்டியா யோசிக்கணும்னு எப்படி நினைச்ச என்ன காரணம் என்று கேட்கிறார். அதுக்கு நந்தினி மேல இருக்கிற அன்பு தான் காரணமா என்று கேட்க எனக்கு தெரியல என்று சொல்லுகிறார். ஆனா அவ மேல ஒரு அக்கறையும் பாசமும் இருக்கு அவளை எல்லாரும் கிராமத்தில் இருந்து வந்தவ எஜுகேஷன் இல்லா படிக்க தெரியாததா ஸ்டேட்டஸ் எல்லாம் பேசுவாங்க அப்படியெல்லாம் பேசுறவங்க எல்லார்கிட்டயும் திறமையானவன் நந்தினி என நான் எல்லார்கிட்டயும் காட்டுவேன் அந்த நாள் கண்டிப்பாக வரும் என்று சொல்லுகிறார்.
பிறகு அருணாச்சலமும் கண்டிப்பா நீயும் நந்தினி ஒரு நாள் சேர்ந்து வாழ்வீங்க என்ற நம்பிக்கை இருக்கு சூர்யா என மனதில் நினைக்க, பிறகு சூர்யா கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுக்கு நியூஸ் பேப்பர் வராது என்ற விஷயத்தை சொல்லி விட்டு சூர்யா ரூமுக்கு வருகிறார். எனக்கு நந்தினி கூப்பிட்டு நீ இன்னும் எதுக்கு தூங்காம இருக்க என்று கேட்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லுகிறார். இப்ப எதுக்கு சார் கல்யாணத்தை பதிவு பண்ணனும் என்று கேட்க நீதான் டாடி கிட்ட ஓகே சொல்லிட்ட இல்ல என்று கேட்க ஏற்கனவே வரலட்சுமி நோன்பு அன்னைக்கி தாலி கட்டினது இன்னும் பிரச்சனை தீரல இதுல இது வேறயா என்று கேட்க, நீ எப்பவுமே ஏதாவது குழப்பமா இருந்தா சீட்டு போட்டு பாப்ப இல்ல அதே மாதிரி போய் போட்டு பாரு என்று சொல்லி அனுப்ப நந்தினியும் சரியென சொல்லுகிறார். பிறகு சாமி போட்டோ முன் வந்து நின்ற நந்தினி யோசிக்க எதுக்கு அமைதியா இருக்க என்று கேட்க எனக்கு இதுல ஏதோ ஒரு சந்தேகம் இருக்கு என்று சொல்லி பேப்பரை பிரித்துப் பார்க்கிறார்.
பிறகு இரண்டிலும் குங்குமம் இருக்கிறது. இது உங்க வேலை தானே என்று கேட்க அதுதான் கண்டுபிடிச்சிட்ட இல்ல நீயே போட்டு பாரு என்று சொல்ல நந்தினி சூர்யாவை திரும்பச் சொல்லிவிட்டு இரண்டு பேப்பரிலும் விபூதி போட்டு மடிக்கிறார். பிறகு திரும்பிய சூர்யா இப்போ இதுல எனக்கு ஒரு டவுட் இருக்கு என்று சொல்லி பேப்பரை திறந்து பார்க்க நீ கருப்பனுக்கே பெயிண்ட் அடிக்க பாக்குறியா என்று சொல்லி பிறகு ஒரு குங்குமம் ஒரு விபூதி கொடுத்து இப்ப போடு என்ன வருது பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.
நந்தினியும் குலுக்கி போட்டு பார்க்க குங்குமம் வந்துவிடுகிறது. உடனே சூர்யா சந்தோஷப்பட்டு இப்ப போய் நிம்மதியா தூங்கு இதை நான் சொல்லல கருப்பு ப்ரோ சொல்றாரு என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் சுந்தரவல்லி வெளியில் டென்ஷனாக இருக்க அருணாச்சலம் என்ன விஷயம் என்று கேட்கிறார். இந்த பேப்பர்காரன் எட்டு மணி ஆகுது இன்னும் பேப்பர் போடல, போன் பண்ணாலும் எடுக்கல என்று கோபப்பட, அருணாச்சலம் நான் தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் அவங்க வீட்ல ஒரு கல்யாணம் அதனால மூணு நாளைக்கு பேப்பர் வராதுன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். அதனாலதான் நான் கல்யாணத்தை பேப்பர் வாங்க அனுப்பி இருக்கேன் என்று சொல்ல அருணாச்சலம் பதற்றம் ஆவதை சுந்தரவல்லி கவனிக்கிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ரிஜிஸ்டர் ஆபீஸில் சூர்யா மற்றும் விவேக்கிடம் நியூஸ் பேப்பர்ல போட்டாச்சு இதுவரைக்கும் யாரும் அப்ஜக்ஷன் பண்ணல என சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா நந்தினிக்கு பொட்டு வைத்து விடுகிறார். பிறகு சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யா அருணாச்சலத்திடம் எனக்கு நந்தினிக்கு ரிஜிஸ்டர் பண்ணி அதை எல்லாருக்கும் தெரிகிற மாதிரி இந்த நடு வீட்டுல மாட்டி வைப்பேன் என சொல்ல கடுப்பாகி சென்று விடுகிறார். பிறகு அசோகன் நியூஸ் பேப்பர் உடன் வீட்டுக்கு வந்து சுந்தரவள்ளியிடம் கொடுக்க சூர்யா மற்றும் அருணாச்சலம் இருவரும் அதிர்ச்சியாகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
