தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சூர்யா ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து அதில் நந்தினி கையை வைக்க நந்தினி அலறி எழுந்து கொள்கிறார். என்ன சார் பண்றீங்க என்று கேட்க, கைக்கு ஒத்தடம் கொடுக்கிறேன் என்று சொல்ல நந்தினி வேண்டாம் என்ற கத்துவதை அசோகன் சந்தோஷமா இருக்கியா மாப்பிள்ளை என்று நினைத்துக் கொள்கிறார். சூர்யா நந்தினிக்கு கையில் ஐஸ் வைத்து பொறுமையாக தேய்த்து ஒத்தடம் கொடுக்கிறார். மறுநாள் காலையில் அருணாச்சலம் சுந்தரவல்லி கல்யாணம் மூவரும் வீட்டுக்கு வர வெளியில இவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்து வந்து எழுப்பி விடுகிறார். எதுக்கு வெளிய படுத்து இருக்கீங்க என்று கேட்க அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை வச்சு செஞ்சுட்டாங்க என்ற சொல்லுகிறார்.
சுந்தரவல்லி மாதவி இடம் என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு என்று சொன்ன மாதவி நடந்த விஷயங்களை சுந்தரவல்லி இடம் சொல்லிக் கொண்டிருக்க சிங்காரமும் குல்லாவை கழட்டி விட்டு வந்து நிற்க அருணாச்சலம் நீ எதுக்கு இங்க செக்யூரிட்டியா இருக்க என்று கேட்கிறார். நான் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன் அவங்க இங்க எடுத்து வந்து விட்டுட்டாங்க ஒரு வாரமா இங்கேதான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா என்று அருணாச்சலம் கேட்க, மறுபக்கம் நந்தினி தூங்கி எழுந்து கதவைத் திறந்து விடலாம் என நினைக்கிறார்.
ஆனால் அதற்குள் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் கோபப்படுகிறார். இதுக்கெல்லாம் காரணம் நீதான் நந்தினிய வெளிய நிக்க வைக்க சொல்லி இருக்க என்று கேட்க இந்த நேரத்துல கூட என்னை தான் திட்டிக்கிட்டு இருப்பீங்களா என் பொண்ணுங்களே வெளியே நிக்க வச்சுட்டாளா எவ்வளவு தைரியம் இருக்குமோ அவளுக்கு இப்ப இருக்குது என்று கோபமாக காலிங் பெல் அடித்துக் கொண்டே இருக்கிறார். நந்தினி கதவை திறக்க என் பொண்ணுங்க கொசுக்கடியில் தூங்குவாங்க உனக்கு மாடி மெத்த கேக்குதா நீ யாருடி இதை செய்யறதுக்கு என்று நந்தினியை அறைகிறார். யார் கொடுத்த தைரியம் என்ற கேட்க சூர்யா சார் என ஆரம்பிக்க, அவனே சொல்லியிருந்தாலும் உனக்கு எங்க போச்சு அறிவு, எவ்வளவு பெரிய குடும்பம் என் பொண்ணுங்க இந்த குடும்பத்தோட வாரிசு கொசு கடியில தூங்கணும் உனக்கு ஏசி ரூம் கேட்குதா இதுக்கு இப்பவே ஒரு முடிவு கற்றேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லுகிறார். நந்தினி மேலே பார்க்க என்னடி அவனுக்கு சைக காமிக்கிறியா இன்னைக்கு யார் வந்தாலும் இந்த சுந்தரவல்லி கிட்ட ஒன்னும் நடக்காது என்று சொல்லிவிட்டு மீண்டும் அறைய போக சூர்யா வந்து நிற்கிறார்.
அவ மேல ஒரு அடி பட்டது நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்று சொல்ல உன்னால என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார். நீங்க பண்ற கேவலமான வேலையெல்லாம் பொறுத்துக்கிட்டு அவ அமைதியா இருக்கான்னா இந்த குடும்பத்து மேல இருக்குற மரியாதை தான் ஆனா அதை நீங்க ஒவ்வொரு நாளா கெடுத்துக்குறீங்க, உங்க பொண்ணுங்கள ஒரு நாளைக்கு வெளிய நிக்க வைக்க உங்களுக்கு கோவம் வருதே அப்ப என் பொண்டாட்டிய நிக்க வச்சா எனக்கு கோபம் வராதா என்று கேட்கிறார். ஒருத்தர் கிட்ட மரியாதை எதிர்பார்த்தால் அது மாதிரி முதலில் நம்ப நடந்துக்கணும் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி இடம் போய் உங்க அப்பா கிட்ட சூர்யா இருக்கிற வரைக்கும் இந்த வீட்ல இருந்து என்னை அனுப்ப முடியாதுன்னு போய் சொல்லிட்டு வா என்று அனுப்ப சூர்யா வீட்டில் இருப்பவர்களுக்கு வார்னிங் கொடுக்கிறார்.
அருணாச்சலம் அவர்களை அனுப்பிவிட்டு சூர்யாவை தனியாக அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி,மாதவி,சுரேகா மற்றும் அசோகனிடம் நீங்க வெளிய அவ்வளவு நேரம் இருந்திருக்கீங்க கதவை உடைத்துவிட்டு உள்ள போகாம இப்படி இருக்கீங்க என்று சொல்லிவிட்டு அது மட்டும் இல்லாம இந்த ஆள் எப்படி இந்த வேலைக்கு வந்தான் இன்று சுந்தரவல்லி கேட்கிறார். சுரேகா அவங்க அப்பன வேலைக்கு வர வச்சி இங்க இருக்கிற நகை பணத்தை எல்லாம் திருட பிளான் போட்டுருப்பா என்று சொல்லுகிறார்.மாதவி இதுக்கு மேல அவள இங்க விட்டு வைக்க கூடாது அவள துரத்தி விட்ரனும் என்று சொல்ல சுந்தரவல்லி அப்படியா என்று கேட்கிறார் மறுபக்கம் நந்தினி வெளியில் வர சிங்காரம் கண் கலங்கி அழுகிறார். நீ எதுக்குப்பா இங்க வேலைக்கு வந்த என்று கேட்டு கண்கலங்க இந்த வீட்டை பார்த்த உடனே தயவு செய்து மாற்றி விட்டிருந்தாலும் கெஞ்சினேன் என்று சொல்லி அழுகிறார். இந்த விஷயத்தை உன்கிட்ட சொன்னா நீ மனசு கஷ்டப்படுவேன் என்று தான் நான் சொல்லல என்று சொல்லுகிறார்.
உன்ன இப்படி பார்க்கும்போது எனக்கு எவ்வளவு மனசு கஷ்டமா ஆயிடுச்சு தெரியுமா ஏற்கனவே மதிக்க மாட்டாங்க இப்போ செக்யூரிட்டி வேலை பார்த்தா இன்னும் கேவலமா தான் பேசுவாங்க என்று சொல்ல அப்பா உனக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டாமா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லப்பா நம்ம நிலைமை அப்படி இருக்கு, உடனே சிங்காரம் இன்னையோட அடுத்த வாரத்தில் இருந்து வேற இடத்துல மாத்திடுவாங்க அம்மா என்று சொல்லி கண்கலங்க கை காலில் விழுந்தாவது நீ வேற இடத்தில மாத்திக்கோபா உன்னை இப்படி பார்க்க முடியல என்று கண்கலங்கி அழுகிறார். பணத்துல மலை அளவுல இருக்கறவங்க குணத்துல கீழ இருக்காங்க என்று சொல்ல நந்தினி இதையெல்லாம் வீட்ல சொல்லாதீங்க என்று சொல்ல, சொல்லமாட்டேன்மா இதுக்கு கிராமத்திலேயே இருந்து இருக்கலாம்னு தோணுது ஒன்னு நல்லா வாழனும் இல்லனா செத்து போயிடனும் இந்த அழுதுகிட்டே வாழற கொடுமை இருக்கே என்று நந்தினி இடம் பேசி கண்கலங்க நந்தினியும் சிங்காரம் மீது சாய்ந்து அழ மேலே இருந்து சுந்தரவல்லி பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அவ அப்பன் அவ முன்னாடி அவமானப்பட அதை பார்த்து அவ நொந்து போகணும் என்று சுந்தரவல்லி மாதவியிடம் சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா நந்தினி இடம் உங்க அப்பாவ செக்யூரிட்டியா இங்க வர வச்சது தாய்க்குலத்தோட பிளானா தான் இருக்கும் என சொல்லுகிறார்.
நீ கேள்வி கேட்க வேண்டிய ஆள் சூர்யா தான் ஆனால் உன்னால அவன எதிர்த்து ஒன்னும் பண்ண முடியல அதனால யாரு எலச்சவங்களோ அவங்க மேல பாய வேண்டியது என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
