Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா கேட்ட கேள்வி, மாதவி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 19-11-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் விஜி கேட்ட கேள்விக்கு சுந்தரவல்லி கடுப்பாகி திட்டுகிறார். அவ இந்த வீட்டுக்கு மருமகளாய் இருக்க எந்த தகுதியும் கிடையாது. இது என்னோட வீடு என் பையனை யார் பாக்கணும் பார்க்க கூடாது என்று நான் தான் முடிவு பண்ணனும் இங்கிருந்து கிளம்புங்க என்று துரத்தி விட வெளியில் வந்து விடுகின்றனர். வெளியில் வந்த விஜி நந்தினி உடன் அவங்க உங்க ரெண்டு பேரையும் பார்க்க விடாம பண்ணலாம் ஆனால் சூர்யா அண்ணன் மனசுல இருக்குற உன்ன அவங்கள யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மாதவி சுந்தரவள்ளியிடம் விஜிக்கு இந்த விஷயம் எப்படி தெரியும் யார் சொல்லி இருப்பாங்க என்று யோசிக்கின்றனர். உடனே மாதவி அப்பா தான் போன் பண்ணி அவங்கள அனுப்பிவிட்டு இருப்பார் நீங்க அப்பா போன் பண்ணா சூர்யா ரூம்ல தான் நந்தினி இருக்கா நாங்க கூட அந்த பக்கம் போறது இல்ல என்று சொல்லி அடிச்சு பேசி போன வச்சிடுங்க என்று சொல்லுகின்றனர்.

பிறகு அனைவரும் சூர்யாவிடம் வந்து சாப்பாடு கொடுக்க வர வேண்டாம் என சொல்லுகிறார். நான் சாப்பிடணும்னு நீங்க நெனச்சா போய் நந்தினி கூப்பிடுங்க என்று சொல்ல மாதவி அவ வீட்ல இல்லை என்று சொல்லுகிறார். அவ உங்கள பாக்கணும்னு நினைச்சா அது எல்லாரும் சண்டை போட்டு கத்திருக்க மாட்டாளா அவள போய் எங்களால தடுக்க முடியுமா என்றெல்லாம் பேசி சூர்யாவின் மனதை மாற்ற மாற்றி மாற்றி பேசுகின்றனர். உடனே சுந்தரவல்லி எதற்கு கெஞ்சிகிட்டு இருக்கீங்க அவனை எழுப்பி சாப்பாடு கொடுத்துட்டு மாத்திரை கொடுத்த படுக்க வேண்டும் என்று சொல்ல மாதவி சாப்பாடு ஊட்டி விட்டு மாத்திரையை கொடுத்து படுக்க வைக்கின்றன. உடனே சுந்தரவல்லி ரூமை கவனித்து விட்டு இவ பொருள் எதுவுமே இங்க இருக்கக்கூடாது அந்த சாமி போட்டோ முதற் கொண்டு எல்லாத்தையும் காலி பண்ணுங்க அவனுக்கு ஞாபகமே வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றுவிடு அவர்களும் எடுத்து விடுகின்றனர்.

ரூமில் மாதவி நந்தினியை சூர்யா பக்கத்தில் நெருங்க விடாமல் இருந்தாலும், சூர்யா மனசுல இருந்து அவளை நினைக்க விடாமல் பண்ண முடியல என்று சொல்லி கோபப்படுகிறார்.அவல இந்த விட்டு விட்டு துரத்த இதைவிட ஒரு நல்ல டைம் நமளுக்கு கிடைக்கவே கிடைக்காது இதை நம்ம கரெக்டா யூஸ் பண்ணனும், அப்பா வர ஒரு வாரத்துக்குள்ள நந்தினி ஊருக்கு போயிட்டான்னு சூர்யாவை நம்ப வைக்கணும் என்று சொல்ல சுரேகா இன்னும் ஒரு வாரம் இருக்கு இல்ல பாத்துக்கலாம் என்று சொன்ன உடனே மாதவி நீங்க போய் சூர்யா ரூம்ல நைட் டூட்டி பாருங்க என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

நந்தினி வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க கல்யாணம் வந்து காபி கொடுக்கிறார். ஆனால் நந்தினி வேண்டாம் பசிக்கல என்று சொல்ல அது எப்படிமா பசிக்காமல் இருக்கும் காலையையும் சாப்பிடல மதியமும் சாப்பிடல எத பத்தியும் நீ கவலைப்படாதே சின்னையா எப்ப இருந்தாலும் இறங்கி வந்து உன்னை பார்க்க தான் போறாரு என்று சொல்ல எனக்குன்னு இந்த வீட்ல இருக்குறது சூர்யா சார் பெரிய ஐயாவும் தான் அவருக்கு ஒரு உடம்புக்கு சரி இல்லாம இருக்கும்போது என்னால் பார்க்க முடியல அதுவும் இல்லாம விஜி அக்காவையும் திட்டி அனுப்பிட்டாங்க என்று சொல்ல அவங்க தான் வேணும்னே பிரிச்சு வச்சிருக்காங்களே என்று சொல்லுகிறார் அப்படி எல்லாம் இல்லை என்ன நடந்தாலும் இன்னைக்கு நைட்டு நான் பார்த்தே தீரனும் என்று நந்தினி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அசோகனிடம் உனக்கு காது கேட்காதா நந்தினி கூப்பிட சொன்னா உன் பொண்டாட்டிய கூப்பிட்டு கிட்டு இருக்க என்று சொல்லுகிறார். நான்தான் என்ன சொன்னாலும் அவன் நம்ப மாட்டேங்குறானே என்று சுந்தரவல்லி இடம் மாதவி சொல்ல,சொல்ல வேண்டியவங்க சொன்னா நம்பி தான் ஆகணும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார் மறுபக்கம் நந்தினி கல்யாணத்திடம் எப்படியாவது அவர் அங்கிருந்து கூட்டிட்டு போங்க அதுக்குள்ள அஞ்சு நிமிஷம் அவரை பார்த்து பேசிட்டு வந்துடுறேன் என்று சொல்ல கல்யாணமும் அசோகனிடம் வந்து பாலை கொடுத்து விட அவரும் மாதவிக்கு கொடுக்கப் போக பிறகு நின்று யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 19-11-25

moondru mudichu serial promo update 19-11-25