Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

Moondru Mudichu Serial Today Promo Update 19-08-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் விவேக் சூர்யாவிடம் பதவியை எப்படி உங்க அம்மா நந்தினி கூட ஷேர் பண்ணுவாங்க சண்டை தானே வரும் என்று கேட்க அவங்க என்ன என்ன பண்ணட்டும் எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல நீ எதுவா இருந்தாலும் பிராக்டிக்கலா யோசிச்சு பண்ணு என்று விவேக் சொல்லுகிறார். நந்தினியை நீ கம்பெனிக்கு கூட்டிட்டு போனா கண்டிப்பா உங்களுக்கு கோபம் வரும் இதை நீ லீகளா ஃபாலோ பண்ணனும் என்று சொல்லுகிறார். நான்தான் நந்தினிக்கு தாலி கட்டிருக்கிறேனே என்று சொல்ல அது செல்லுபடி ஆகுமா உன்னோட கல்யாணத்தை நீ ரிஜிஸ்டர் பண்ணனும் என்று சொல்ல அப்படி பண்ணுனா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமா என்று கேட்க ஆமா நந்தினி உன்னோட பொண்டாட்டி ஆயிடுவா அதுக்கப்புறம் யாராலயும் எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிவிட சூரியாவும் முதலில் இதை பண்ணிடனும் என்று முடிவெடுக்கிறார். முதல்ல சூர்யா ரெஜிஸ்ட்ரேஷனுக்கான வேலை எல்லாத்தையும் இன்றைக்கே ஏற்பாடு பண்ணிடனும் என்று முடிவு எடுத்து கிளம்புகின்றன.

அருணாச்சலம் சுந்தரவல்லியிடம் வந்து உன் கிட்ட வந்து ஒன்னு பேசணும் என்று சொல்ல, நந்தினியை வெளியே போ சொன்னது நீதானா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார். அப்போ அந்த அம்மா நந்தினி கூட்டிட்டு வரலைன்னா நந்தினி இங்க இருந்திருக்க மாட்டா அவ்வளவுதானே என்று கேட்க ஆமாம் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். இந்த தாலி கட்டற விஷயமே சூர்யா உயிர்க்கு ஆபத்து இருக்கின்றதால் தான் அதையும் தெரிஞ்சு நீ இப்படி பண்ணி இருக்க, நந்தினி இது ஒத்துக்கொள்ள ஆன கட்டாயப்படுத்தி ஒத்துக்க வச்சேன்னு சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு எப்ப பாத்தாலும் எதுக்கு அவளை தூக்கி வச்சு கொண்டாடிட்டு இருக்கீங்க. சூர்யாவா பெத்தவனா அதன் உயிரை எப்படி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும் நீங்க அதைப்பற்றி கவலைப்படாதீங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் சூர்யா குடித்துக்கொண்டிருக்க நந்தினி வந்து பேச வேண்டும் என சொல்லுகிறார். உங்களுக்கு தான் இப்ப கை சரியாயிடுச்சு இல்ல நீங்களே கையெழுத்து போடுங்க என்று சொல்ல சூர்யா இது தவறான செயல் நீயே சைன் பண்ணு சொல்லுகிறார். எப்பவும் போல நீங்களே கையெழுத்து போடுங்க இதனால தேவையில்லாமல் பிரச்சனை வருகிறது என்று சொல்லுகிறார். எனக்கு நிறைய வேலை இருக்கு நீ தான் கொஞ்ச நாளைக்கு சைனிங் அத்தாரிட்டி என்று சொல்ல, நந்தினி எனக்கு தகுதி இல்லை என சொல்லுகிறார். உங்க குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது உங்க அம்மாவை கடுப்பேத்த எனக்கு அந்த பொறுப்பை கொடுத்திருப்பீங்க இதுல எனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்கிறார். ஆனால் சூர்யா நீ தான் கொஞ்ச நாளைக்கு கையெழுத்து போட்டு ஆகணும் என்று சொல்ல இதே மாதிரி தான் நீங்களும் ஐயாவும் இந்த வீட்ல இருக்கணும்னு சொல்லுங்க ஆனா நான் திருப்பி எப்போ போறதுன்றத பத்தி எதுவும் யோசிக்கக்கூட மாட்டேங்கிறீங்க என்று சொல்ல சூர்யா அதெல்லாம் அப்படித்தான் என சொல்லிவிட்டு முடித்துவிட்டு படுத்து படுத்து விட மீண்டும் எழுந்து வந்து அருணாச்சலத்திடம் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் டாடி என்று சொல்லுகிறார்.

நம்ம நந்தினி நான் நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போகப் போறேன். அவளை நம்ம கம்பெனிக்கு கூட்டிக்கிட்டு போய் எல்லா ரெஸ்பான்சிபிலிட்டியும் கொடுக்கப் போறேன். அதுக்கு ஒரு மெயின் காரணமாக எனக்கும் நந்தினிக்கும் நடந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண போறேன் என்று சொல்ல அருணாச்சலம் சந்தோஷப்படுகிறார். நந்தினி எனக்கு லீகல் பொண்டாட்டியா ஆயிட்டா அவங்களால எதுவும் பண்ண முடியாது என்று கேட்க அருணாச்சலம் நிஜமாலே அவங்களால ஒண்ணுமே பண்ண முடியாது என்று சந்தோஷப்படுகிறார் நீ நந்தினி கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க அவகிட்ட சொல்லிட்டா ஒத்துக்க மாட்டா என்று நந்தினி சொல்ல, அவள பொய் சொல்லி அவளை காயப்படுத்த வேண்டாம் அவகிட்ட உண்மையை சொல்லு என்று சொல்ல சூர்யா கண்டிப்பா அவ வரமாட்டா என்று சொல்லுகிறார். நீதான் அவகிட்ட பேசி சம்மதிக்க வைக்கணும் என்று சொல்ல, அவ சம்மதிக்க மாட்டா என்ற சூர்யா சொல்ல, சரி நான் நந்தினி கிட்ட பேசிக்கிறேன் யார்கிட்டயும் சொல்லாத எனக்கு சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் விவேக் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு எல்லாமே ஆன்லைன்ல பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாரு என்று சொல்ல, அப்போ என்னைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம் என்று கேட்க கொஞ்சம் டைம் கொடு விசாரிச்சு சொல்றேன்னு சொல்லுகிறார். முதல்ல நீ நந்தினி கிட்ட பேசி சம்மதம் வாங்கு என்று சொல்ல சரி நான் அதை பார்த்துக்கிறேன் என்று சொல்ல ஆனால் இதில் ஒரு விஷயம் இருக்கு, கல்யாண ரிஜிஸ்டர் பண்ணும் போது பண்ணிக்க போறவங்களோட டீடைல்ஸ் நியூஸ் பேப்பர்ல வருமா இது மட்டும் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என்று சொல்ல அப்போ இதுக்கு வேற வழியே இல்லையா என்று கேட்கிறார். நியூஸ் பேப்பர்ல வரத தடுக்க முடியாது ஆனா உங்க அம்மா கண்ணுல படாம பாத்துக்கோ என்று சொல்ல சூர்யாவும் சரி என போனை வைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சூரியாவிடம் நீ நந்தினி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் திடீர்னு நீ இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்று கேட்க அதுதான் நான் முன்னாடியே சொன்னேன் என்று சொல்ல உனக்கு நிஜமாகவே நந்தினி மேல அன்பு இருக்கா என்று கேட்க எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார். எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல ஆனா அவ மேல ஒரு கேர் இருக்கு பாவம் டாடி அவ எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க அவ கிராமத்தில் இருந்து வந்தவ படிக்க தெரியாதவ நாகரிகம் தெரியாது என்று இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க இவங்க முன்னாடி நந்தினி திறமையான ஆள் தானே நான் காட்டுறேன் டாடி என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial  Promo Update 19-08-25
Moondru Mudichu Serial Promo Update 19-08-25