Moondru Mudichu Serial Promo Update 19-07-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் இப்போ எல்லாம் எந்த கஷ்டமும் இல்லாம எழுதுறீங்க உங்க கையெழுத்த நீங்களே போடலாமே என்று கேட்க உடனே சூர்யா ரொம்ப வலிக்குது என்று நடிக்கிறார். பொய் சொல்லாதீங்க நான் நம்ப மாட்டேன் என்று சொல்ல, ஒரு வழியாக பேசி நந்தினி தான் கை வலிக்குது என்று நம்ப வைக்க சரி கஷ்டப்படாதீங்க என்று சொல்லி நந்தினி கைக்கு சொடுக்கு எடுத்துவிட்டு முந்தானையை வாயில் ஊதி கைமீது ஒத்தடம் வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரூமில் சுந்தரவல்லி யாரிடமும் போனில் டென்ஷனாக பேசிக் கொண்டிருக்க மறுநாள் காலையில் நந்தினியும் கல்யாணமும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நந்தினிக்கு கல்யாணம் நெளிவு சுளிவு இருந்தா தான் வாழ்க்கை அதை நல்லபடியா ஏத்துக்கிட்டு வாழறது தான் வாழ்க்கை என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
எங்க சின்னையா உன்னை எவ்வளவு நல்லா பாத்துக்கிறாரு நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற என்று சொல்ல, உங்க சின்னையா தானே அவருக்கு கையெல்லாம் நல்லா ஆகிடுச்சு நேத்து வேக வேகமா நம்பர் எழுதுறாரு ஆனா கேட்டவுடனே கை வலிக்குது என்று பொய் சொல்றாரு என்று சொல்ல சின்னையா பண்றது ஏதாவது ஒரு விதத்துல நல்லதா தான் இருக்கும் அவர நம்பி போன நா கண்டிப்பா உன் வாழ்க்கை இல்ல முன்னேறி தான் போவேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்டு நந்தினி வந்து பார்க்க டாக்டரும் நர்சும் வருகின்றனர் உடனே நந்தினி அவர்களை வரவேற்க சூரியா சாரோட ஹெல்த் செக் பண்ண வந்திருக்கோம் என்று சொல்ல மேல தான் இருக்காரு நீங்க போங்க என்று சொல்லி அனுப்பிவிட்டு நந்தினி அவர்களுக்காக டீ போட்டு எடுத்துச் செல்கிறார்.
டாக்டர் சூர்யா ரூமுக்கு வந்து செக் பண்ணி பார்க்க எனக்கு நல்லா ஆயிடுச்சு டாக்டர் என்னால கையை நல்லா மடக்க நீட்ட முடியுது என்று சொன்னவுடன் டாக்டர் ரிப்போர்ட் பார்த்துவிட்டு உங்க கை நல்லா ஆயிடுச்சு நீங்க என்ன வேணா பண்ணலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க நந்தினி வந்து நிற்பதை பார்த்த சூர்யா உடனே இவ வேற எப்ப வந்தாலும் தெரியலையே உடனே கையெழுத்து போட சொல்லி ஆரம்பிச்சுடுவா என்று நினைத்து விட்டு டாக்டரிடம் இங்கிலீஷில் கை கை சரியாகவில்லை என்று சொல்லுமாறு சொல்ல டாக்டரும் கையை அசைக்காதீர்கள் சூர்யா என்று சொல்லுகிறார். எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு நான் எக்ஸ்ரேல சரியா பாக்கலன்னு நினைக்கிறேன் என்று சொல்லி மீண்டும் எக்ஸ்ரேவை பார்க்கிறார்.
உங்களுக்கு இன்னும் கை சரியாகவில்லை. இன்னும் கொஞ்ச நாள் கட்டு போட வேண்டும் என்று சொல்ல நந்தினி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றார். நான் கையெழுத்து கூட போடக்கூடாதா என்று கேட்க போடக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டு இந்த மாத்திரையை போடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். முதல்ல அந்த டாக்டரை மாத்துங்க என்று சொல்ல ஏன் என்று சூர்யா கேட்கிறார். எக்ஸ்ரேவை கூட ஒழுங்கா பார்க்க தெரியல என்று சொல்ல டாக்டருக்கு எடுத்துக் கொண்டு வந்த காபியை நந்தினியே குடித்து விடுகிறார். சுந்தரவள்ளி கிச்சனுக்கு வந்து கல்யாணத்திடம் வீட்டுக்கு விருந்தாளி வராங்க அதனால சாப்பாடு விருந்து சமைக்கிற மாதிரி செஞ்சிடு என்று சொல்லிவிட்டு அருணாச்சலத்தை வீட்டுக்கு கூப்பிடுகிறார்.
சுரேகா காலேஜுக்கு கிளம்பி வர, இன்னைக்கு போக வேண்டாம் முக்கியமான கெஸ்ட் வராங்க என்று சொல்ல யார் என்று கேட்க சொன்னாதான் போகாம இருப்பியா என்று சொல்ல அசோகன் ஆபீசுக்கு கிளம்ப அவரையும் வீட்டில் இருக்க சொல்லுகிறார். யாரும் எங்கேயும் போக வேண்டாம் முக்கியமான கெஸ்ட் வீட்டுக்கு வராங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் அருணாச்சலமும் வந்துவிட யாரு தான் வரப் போறா என்று கேட்க எதுக்கு அவசரப்படுறீங்க வரும்போது தெரிஞ்சுக்கோங்க என்று சொல்லுகிறார். சூர்யா ரூமில் ரெடியாகி சென்ட் அடிக்க, நந்தினியை கூப்பிட்டு இந்த சென்ட் புதுசா வாங்கி இருக்க எப்படி இருக்கு ஸ்மெல் பண்ணி பாரு என்று சொல்ல நல்லாதான் இருக்கு என்று இழுத்து சொல்ல, என்ன இப்படி சொல்ற என்று கேட்க மாதவி அம்மா சுரேகா அம்மா போடுறதெல்லாம் நல்லா இருக்கும் என்று சொல்ல அது லேடிஸ் போடுறது இது ஜென்ஸ் போடுவது இப்படித்தான் இருக்கும் என சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிற்கு பட்டன் தைத்து விட, சுரேகா வந்து சுந்தரவல்லி கூப்பிட்டதாக சொல்லி கீழே வரச் சொல்லுகிறார். சுரேகா சுந்தரவல்லி இடம் அப்ப அந்த பவரை யாருக்கு கொடுக்கப் போறீங்க என்று கேட்கிறார்.
உங்க மூணு பேருக்கும் கொடுக்க போறது கிடையாது என்னுடைய இடத்தில் இருந்து என்னோட சைனிங் அத்தாரிட்டிய அர்ச்சனா தான் போட போற என்று சொல்ல சூர்யா விவேகிடம் ஏண்டா ஆஃபீஸ்க்கு வந்தோம் என்று கதறனும் அந்த அளவுக்கு சம்பவம் செஞ்சு விடனும் என்று ஒரு ஐடியாவை சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Dude Trailer Tamil | Pradeep Ranganathan | Mamitha Baiju | Keerthiswaran | Sai Abhyankkar
Brahmakalasha Tamil Song | Kantara Chapter 1 | Rishab Shetty | Rukmini Vasanth | Hombale…
Pani Kaatrin Video Song | Cold Call | Sai Vignesh | Thambidurai | Pranav Giridharan
Kambi Katna Kathai Official Trailer | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini, Mukesh Ravi
Aththaan Video Song | Aan Paavam Pollathathu | Rio Raj, Malavika | Kalai | Siddhu…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…