சூர்யா கேட்ட கேள்வி,ரஞ்சிதா சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் நந்தினி குடும்பத்துடன் சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்க சூர்யா அம்மாச்சியிடம் இங்கே சமைக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் டெய்லியும் கறி விருந்துன்னு சமைத்து நீங்கதான் கொடுக்கணும் அதுவும் கஞ்சி வெங்காயம் எல்லாம் தரணும் என்று சொல்ல கண்டிப்பா தம்பி என்று அம்மாச்சி சொல்லுகிறார். பிறகு சூர்யாவும் அருணாச்சலமும் அங்கிருந்து கிளம்ப நந்தினி நான் ரெண்டு நாளைக்கு தங்கிட்டு வருவா ஐயா நீங்க சம்மதிச்சா இருக்கேன் என்று சொல்ல அதுக்கு என்னமா தாராளமா இருந்துட்டு வா என்று சொல்லுகிறார். அதே மாதிரி நான் சொல்றத நீயும் சரின்னு சொல்லணும் என்று சொல்ல என்ன விஷயம் ஐயா என்று கேட்க நீ இங்க இருக்கிற ரெண்டு நாளும் சூர்யாவும் இங்கே இருக்கட்டும் என்று சொல்லுகிறார். இவர்களை வெளியே எங்கேயாவது கூட்டிட்டு போ வீட்டுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடு சூர்யா என்று சொல்ல நான் பாத்துக்குறேன் டாடி என்று சொல்ல, அருணாச்சலம் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சுந்தரவல்லி கோபமாக வெளியில் நின்று கொண்டிருக்க மாதவி சுரேகா அசோகன் மூவரும் என்ன விஷயமா இருக்கும் என்று யோசித்து சுந்தரவல்லி இடம் வந்து என்னாச்சும்மா என்று கேட்க, என்னைக்கு அவ இந்த வீட்டுக்குள்ள வந்தாலோ அப்போலிருந்தே என் நிம்மதிt போச்சு அவ ஒன்னும் தனியா செய்யல உங்க அப்பா அவளுக்கு புல் சப்போர்ட் பண்ணி கிட்டு இருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் வந்து இறங்குகிறார். அந்த வீட்ல கிரகப்பிரவேசம் பால் காய்ச்சுவதெல்லாம் முடிஞ்சிருச்சா என்று கேட்க, எல்லாமே சிறப்பா முடிஞ்சது என்று அருணாச்சலம் சொல்லுகிறார். என்ன விட உங்களுக்கு அந்தத் தோட்டக்காரங்க குடும்பம் தான் உங்களுக்கு முக்கியமா போயிடுச்சா என்று கேட்கிறார். அவங்க உழைச்சு சாப்பிடுறாங்க நீங்க ஒன்னும் பிச்ச போடலையே என்று கேட்கிறார். இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் தெரியாது ஆனால் இப்போ அவங்க நம்மளோட சொந்தக்காரங்க அத நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும் என்று சொல்கிறார்.

நீங்க போனது இல்லாம சூர்யாவும் விட்டுட்டு வந்து இருக்கீங்க என்று கோபப்படுகிறார். உடனே மாதவியும் அம்மாவை எதுக்கு அசிங்க படுத்துறீங்க அம்மா பேச்சை கேட்க மாற்றிங்க என்று கேட்க, அப்ப எதுக்கு இங்க வந்தீங்க அங்கே இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல, அருணாச்சலம் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். நாய குளிப்பாட்டி நடு வீட்ல வைக்கணும்னு நினைக்கிறாரு உங்க அப்பா கூடிய சீக்கிரம் எல்லாமே புரியும் என்று சொல்ல ரேணுகா இதை கவனித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் ரஞ்சிதா ரூமுக்கு சண்டை போட புனிதா நம்ம என்ன பிரச்சனையோடு வந்தோம் இவன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கா பாரு என்று சொல்லுகிறார். சூர்யா எல்லாருக்கும் ரூம் பிடிச்சிருக்கா என்று கேட்க ரஞ்சிதா அம்மாச்சி வம்பு இழுக்கிறார். பிறகு சூர்யா குடும்பத்தினர் அனைவரையும் துணி கடைக்கு அழைத்து வந்து என்ன துணி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க என்று சொல்ல அனைவரும் துணைகளை தேடி வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். உடனே ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு அம்மாச்சி இங்க என்ன இவ்வளவு ஐட்டம் இருக்கு என்று கேட்கிறார். இன்னும் எவ்ளோ டிஷ் இருக்கு பாட்டி என்று சூர்யா சொல்லுகிறார்.

சிங்காரம் நம்ம ஊர்ல 50 ரூபாய்க்கு சாப்பிட்டாலே வயிறு ரொம்ப போயிடும் இவ்வளவு காசு கொடுத்து சாப்பிட்டோம் வயிறு ஃபுல்லா ஆன மாதிரியே தெரியல யாரும் வீட்ல சமைக்கவே மாட்டாங்க போல எல்லாரும் வெயிட் பண்ணி சாப்பிட்டு போறாங்க என்று சொல்லுகிறார். எங்க ஊர்ல திணை சாமைனு செய்வோம் நம்ம உடம்புக்கு ஹெல்த்தியானது தான் சாப்பிடணும் அப்படி இருந்தா சரி என்று சொல்ல சூர்யாவும் அதுவும் கரெக்ட் தான் என்று சொல்லி அனைவரையும் அழைத்துச் செல்கிறார். உடனே அனைவரையும் சூப்பர் மார்க்கெட்டுக்கு கூட்டிக் கொண்டு வர இவ்வளவு பெரிய மளிகை கடையா? என்று அம்மாச்சி கேட்கிறார். ரஞ்சிதா பொருட்களை எடுத்துப் போட நீயே ஏண்டி எடுத்து போடுற கடைக்காரங்க கிட்ட சொல்லு என்று சொல்ல நந்தினி நாம தான் எல்லாத்தையும் எடுத்துட்டு கடைக்காரர் கிட்ட தேடி போகணும் என்று சொல்ல, சூர்யா என்னென்ன தேவையோ எல்லாத்தையும் வாங்கிக்கோங்க என்று சொல்லி அனுப்புகிறார். அனைவரும் மளிகை பொருட்களை வாங்க அம்மாச்சி எல்லா பொருளும் எடுத்தாச்சு பில் போட்றலாம் தம்பி என்று சொல்லுகிறார்.

பிறகு நந்தினி குடும்பத்தினருடன் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க சூர்யா என்னது இது என்று கேட்டு உட்காருகிறார். அதற்கு நந்தினி இதுக்கு பேரு ஆடுபுலி ஆட்டம்னு சொல்லுவாங்க சார் என்று சொல்லுகிறார். உடனே சூர்யா இதுல யாரு ஆடு யாரு புலி என்று கேட்க அப்பா ஆடு அக்கா புலி என்று சொல்லுகிறார் புனிதா உங்களுக்கு இந்த கேம் பத்தி தெரியாதா சார் என்று கேட்க கேள்விப்பட்டிருக்க ஆனால் விளையாட்டோட ரூல்ஸ் தெரியாது என்று சொல்ல சூப்பரா இருக்கும் சார் அப்பாவும் நந்தினியும் இப்பதான் மோதிக்கிட்டு இருக்காங்க உட்காருங்கள் என்று சொல்லி பக்கத்தில் உட்கார வைக்கிறார். ரஞ்சிதா எப்பவுமே அக்கா தான் ஜெயிக்கும் என்று சொல்ல புனிதா இன்னைக்கு அப்பா தான் ஜெயிப்பார் நான் அப்பாவுக்கு சப்போர்ட் என்று சொல்ல அம்மாச்சி நந்தினி தான் ஜெயிப்பா என்று சொல்லுகிறார். நந்தனி அக்காவை பார்க்கணும் கூட்டிட்டு போன்னு சொன்னா இந்த அம்மாச்சி முடியாதுன்னு சொல்லுது ஆனா இப்ப எப்படி ஐஸ் வைக்குது பாரு என்று ரஞ்சிதா சொன்ன சூர்யா நம்ம யாருக்கு சப்போர்ட் பண்றது என்று கேட்கிறார்.

அப்படியெல்லாம் அவசரப்பட கூடாது நான் கமெண்ட்ரி சொல்ற நீங்க கை தட்டுங்க என்று சொல்ல, சிங்காரமும் நந்தினியும் விளையாடிக் கொண்டிருக்க ரஞ்சிதா சூர்யாவிடம் கொஞ்ச நேரம் ரெண்டு பேருக்கும் கை தட்டுங்க அப்புறம் யார் வின் பண்ற மாதிரி இருக்காங்களோ அவங்க கூட சேர்ந்துப்போம் என்று சொல்ல நந்தினி அதற்கு முதலில் விளையாட தெரிஞ்சுருக்கணும் என்று சொல்லுகிறார்.அதுக்கு என்ன நான் சொல்லி தரேன் என்று சிங்காரம் சூர்யாவிற்கு விளையாட சொல்லிக் கொடுக்க சூர்யாவும் புரிந்து கொள்கிறார். மறுபக்கம் ரேணுகா அர்ச்சனாக்கு போன் போட்டு நந்தினி குடும்பம் சென்னைக்கு வந்த விஷயத்தை சுந்தரவல்லி அம்மா தான் நந்தினி பிரிக்க இது மாதிரி பிளான் போட்டு இருக்காங்க என்று சொல்ல ஆமாமா சூரியா சாரும் அங்க தான் இருக்காரு என்று சொல்ல அர்ச்சனா சூர்யாவும் அங்கதான் இருக்கானா என்று கேட்டு ஷாக் ஆகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க அம்மாச்சி தோசை எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறார். இது என்ன தோசை என்று கேட்க கம்பு தோசை என்று சொல்ல, கம்பு தோசையா என சொல்லி வாயில் வைக்க அம்மாச்சி நல்லா இருக்கா தம்பி என்று கேட்க நல்லா இருக்கு என்று இழுக்க அப்ப இது உங்களுக்கு புடிக்கல இனிமேல் இதை செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். உடனே ரஞ்சிதா நான் சொன்னா கேக்கறியா அம்மாச்சி நீ சூர்யா சார் சொன்னா மட்டும் கேட்கிற என்று சொல்ல சூர்யா இனிமே உனக்கு என்ன புடிக்கலைன்னாலும் என்கிட்ட சொல்லு நான் சொல்லிட்டேன் என்ன சொல்ல சிங்காரம் இந்த மாதிரி ஒன்னு மன்னா உட்கார்ந்து சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகுது என்று சொல்லுகிறார்.

ஆமாம்பா ஊர்ல பிரச்சனைன்னு சொல்லி சொல்லும்போது என் மனசே கலங்கி போச்சு இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு என்று சொல்லுகிறார். அப்புறம் நந்தினி உனக்கு ஒன்னு சொல்றேன் வீடு பக்கத்துல இருக்குன்னு வந்துட கூடாது தம்பியோட வாழற அதுதான் உன் வீடு என்று சொன்னால் பாருபா அம்மாச்சி வீட்டுக்கு வர கூடாது என்று சொல்லுது அவர்கள் அப்படி சொல்லலாமா அவங்க சொல்றதும் சரிதானே சும்மா சும்மா வந்தா புகுந்து வீட்ல எப்படி வாழ்ந்த மாதிரி இருக்கும் என்று சொல்ல அதற்கு ரஞ்சிதா இப்படி எல்லாம் சொல்லி அக்காவ வர விடாம பண்ண போறீங்களா என்று சொல்ல அதற்கு நந்தினி யார் என்ன சொன்னாலும் நான் வந்து தான் போவேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

PEDDI Trailer Tamil

PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…

15 hours ago

Habeebi Official Trailer

Habeebi Official Trailer | Kasthoori Raja, Malavika Manoj | Meera Kathiravan | Sam C.S

15 hours ago

Ego Raman Official Teaser

Ego Raman Official Teaser | Robo Shankar | Ciby chandran | Ganesan Nachimuthu | Reymen…

15 hours ago

Blast Official Trailer

Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…

2 days ago

Kannamma En Kannamma Video Song

Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…

3 days ago

Reengara Lyric Video

Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…

3 days ago