Trisha's Special Birthday Wish for Vijay
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தனது 52வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, அவருக்கு சிறப்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பகிரப்பட்ட புகைப்படங்களில், விஜய் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவரது முன்பு பல கேக்குகள் வைக்கப்பட்டிருப்பதும் கவனம் ஈர்த்துள்ளது.
முன்னதாக, விஜய்யின் பிறந்தநாளன்று த்ரிஷா சமூக வலைதளங்களில் எந்தவித வாழ்த்தும் பதிவிடாததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. மேலும், த்ரிஷா விஜய்யை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்ததாகவும் சிலர் கூறினர்.
இந்த நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா, “அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” (Happy Birthday to the person who makes everything meaningful) என பதிவிட்டுள்ளார்.
த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் மற்றும் கருத்துகள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் – த்ரிஷா நட்பு மற்றும் திரை ஜோடி மீண்டும் ஒருமுறை ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…
Slap Video Song - I'm Game (Tamil) | Dulquer Salmaan & Kayadu Lohar | Jakes…
Sooriyan Maraindha Maalai Title Track | Sathya Jyothi Films
Yegandham Lyrical Video | See U | Kishen Das | Sanjana AK | Santhosh Srivatsan…