தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் காரில் வரும்போது நந்தினி சூர்யா தூக்கிக்கொண்டு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டு சிரிக்க பிறகு இருவரும் துணி கடைக்கு வருகின்றனர். சரி நந்தினி நீ போய் துணி எடு நான் இங்கேயே வெயிட் பண்றேன் என்று சொல்ல நந்தினி சூர்யாவையும் அழைத்து வருகிறார். நந்தினி வந்தவுடன் வாடாமல்லி கலர் மயில் கலர் என்ற கேட்டு வாங்க இது என்ன வித்தியாசமா கலர் பேர் சொல்ற என்று கேட்க அதெல்லாம் பொண்ணுங்களுக்கு தான் தெரியும் என சொல்லுகிறார். கலர்ல இவ்வளவு இருக்கா என்று சொல்லிவிட்டு நிறைய இருக்கு சார் என சொல்லி மீண்டும் துணியை பார்க்கிறார். பிறகு நந்தினி 2 புடவையை சூஸ் பண்ணி எடுத்துவிட்டு சூர்யாவிடம் காட்ட விஜிக்கு இரண்டு புடவையா என்று கேட்க ஏன் நான் கட்டுவேன் என சொல்லி கேட்க, நானே சொன்னாலும் நீ எடுக்க மாட்ட இப்ப மட்டும் என்ன புதுசா என்று கேட்க அதெல்லாம் நான் கட்டுவேன் என சொல்லிவிட்டு வந்துவிடுகிறார்.பிறகு வேஷ்டி சட்டை பார்க்க வருகின்றனர் நந்தினி ஒரு ஒரு ஷர்ட்டாக எடுத்து சூர்யாவின் மேல் வைத்து பார்க்கிறார்.
பேண்ட் சர்ட் புடவை என அனைத்தையும் எடுத்துவிட்டு பில் கட்டிவிட்டு சென்று விடுகின்றனர். பிறகு ஒரு பழக்கடைக்கு வந்து பழங்களை வாங்கிக் கொண்ட விஜியின் வீட்டிற்கு வருகின்றனர். வந்தவுடன் விஜி விவேக் என கூப்பிட என்ன சர்ப்ரைஸா வந்திருக்கீங்க என்ற விவேக் கேட்கிறார். சொல்லாம வந்ததுனால இப்படித்தான் வாசல்லயே நிக்க வைப்பியா என்று சொல்ல விவேக் இருவரையும் அழைத்து உட்கார வைக்கிறார். பிறகு நந்தினி விஜய்யிடம் தாம்பூல தட்டு எடுத்து வருமாறு சொன்னா அவரும் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டு வந்த பொருட்களை அதில் எடுத்து வைக்கின்றனர். அதிலும் 5001 தாங்க என சூர்யாவிடம் சொல்ல அவரும் வைக்கிறார் இப்போ உங்க கையால நீங்க உங்க தங்கச்சிக்கு அண்ணனோட சீரை கொடுங்க என்று சொல்லுகிறார்.
சூர்யா விஜி இடம் நீ வாய் நிறைய என்னை அண்ணன்னு கூப்பிடுற ஆனா நான் உனக்கு தங்கச்சியா எதுவுமே செஞ்சது கிடையாது இப்ப கூட எனக்கு இதை பத்தி தெரியாது ஆனால் நந்தினி தான் சொன்னா இதுதான் நான் கொடுக்குற தீபாவளி பரிசு உனக்கு என்று சொல்ல விஜி சூர்யாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முதலில் வாங்கி கோங்கம்மா என்று சொல்லிக் கொடுக்கிறார். விஜி கண்கலங்கி அழ நீ இதுக்கப்புறம் எதுக்கும் கஷ்டப்படக்கூடாதுமா இதுக்கு மேல வருஷம் உனக்கு இந்த அண்ணனோட சீர் வரும் என்று சொல்ல விஜி நந்தினியை கட்டிப்பிடித்து அழுகிறார். கஷ்டப்படாதீங்க அக்கா என்று சொல்ல எப்பவுமே எனக்கு என் மனசுக்குள்ள எனக்கு யாரும் இல்லை என்கிற கஷ்டம் இருக்கும் இனிமே அது இருக்காது என சொல்லுகிறார். நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஏதாவது சமைச்சி இருப்பேன் என்று சொன்னால் அதெல்லாம் எதுவும் வேண்டாம் அக்கா காபி மட்டும் போடுங்க என்று சொல்ல விஜி காபி போட்டு கொடுக்கிறார். பிறகு அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்துவிட்டு காபி குடிக்கின்றனர்.
மறுபக்கம் சுந்தரவல்லி இப்பதான் உடம்பு சரியா இருக்கு அதுக்குள்ள எதுக்கு வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிடுற என திட்டி கொண்டு இருக்க அதுக்குள்ள கிளம்பி போயிட்டாளே என்று மாதவி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் சூர்யாவும் நந்தினியும் வீட்டுக்கு வர அருணாச்சலம் கோவிலுக்கு போறேன்னு சொன்ன எவ்வளவு நேரம் ஆயிடுச்சு என்று கேட்க அப்படியே கோயிலுக்கு போயிட்டு கடைக்கு போயிட்டு கொஞ்ச நேரம் அப்படியே பேசிட்டு வந்தோம் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அசோகனிடம் நீ இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்ததிலிருந்து உனக்கு எதுவுமே கொடுத்ததில்லை ஆனா இப்போ உனக்கு நான் தீபாவளி சீர் கொடுக்க வந்திருக்கேன் என சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி அந்த தட்டை வாங்கி விசிறி அடித்து விட்டு யாருக்கு யாரு சீர்வரிசை கொடுக்கிறது என்று சொல்லிவிட்டு கோபமாக சென்று விடுகிறார்.
நீங்க மட்டும் சீர்வரிசை கொடுத்திருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது என்னமோ என்று சொன்ன இப்ப சொல்ற அந்த இனி இந்த வீட்ல நடக்குற எல்லாம் என்ன நடந்தாலும் நீ இல்லாம எதுவும் நடக்காது என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
