Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினிக்காக அசிங்கப்படும் சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 18-09-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா அவ்வளவு திட்டியும் மீண்டும் சுந்தரவல்லியும் மற்றவர்களும் பிரியாணி சாப்பிட கொஞ்ச நேரத்தில் அருணாச்சலம் வந்து எதுக்கு இப்போ பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க அவளுக்கு சரியாக பிறகு கூட சாப்பிடலாமே என்று சொல்ல அவளுக்கு என்ன ஆனாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று அருணாச்சலம் என்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் நந்தினுக்கு உடம்பு முழுக்க அம்மை அதிகமாகி எரியுது எரியுது என வலியில் துடிக்க விஜி கொஞ்சம் கொஞ்சமாக குறையுன்னு பார்த்தா அதிகமாயிட்டே இருக்கே என்று வருத்தப்படுகிறார். மறுபக்கம் சூர்யா விவேக்கிடம் குடும்பத்தினர் நடந்து கொண்ட விஷயத்தை பற்றி சொல்லி கோபமாக பேசுகிறார். உங்க அக்காவும் தங்கச்சியும் பண்ணதுக்கு உங்க அம்மா தடுக்கலையா என்று கேட்க பிளான் பண்ணதே அவங்கதான் என்று சொல்லுகிறார். உடனே விஜி சூர்யாவுக்கு போன் போட்டு, நந்தினிக்கு குறையும் என்று பார்த்தா ரொம்ப அதிகமாயிக்கிட்டே இருக்கு அவ வழியில் துடிக்கிறா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்ன பண்றது என்று தெரியல என்று சொல்ல சரி நான் உடனே வரேன் என சொல்லி போனை வைத்துவிட்டு, சிங்காரத்திற்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி நீங்க வீட்டுக்கு வாங்க நந்தினிக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் என சொல்லிப் போனே வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார்.

உடனே விஜி இந்த வீட்டில அம்மா போட்ட வீட்ல எப்படி இருக்க கூடாதோ அப்படி எல்லாம் இருக்காங்க, அந்தப் கோபத்தை எல்லாம் அம்மா உன் மேல காட்டிகிட்டு இருக்கா பார்க்கிற என்னால தாங்க முடியல நீ எப்படி தாங்கிக்கிட்டு இருக்க என்று கண்கலங்குகிறார். உடனே அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் பேசிக்கொண்டிருக்க விஜி வந்து நந்தினிக்கு ரொம்ப அதிகமாயிடுச்சு அவ வலிகள் துடிக்கிறார் என்று சொல்ல சொல்ற நீ தப்பா நினைச்சுக்காதீங்க அம்மா போட்டோ வீட்டுல கவுச்சி சாப்பிடக்கூடாது அது சாப்பிட்டதனால கூட இப்படி ஆகி இருக்கும் என்று சொல்ல சுந்தரவல்லி என் வீட்ல வந்து என்கிட்ட எதிர்த்து பேசுறியா என்று சொல்ல அருணாச்சலம் அவ பேசுனதுல என்ன தப்பு இருக்கு, எனக்கும் சூர்யாவுகோ இது மாதிரி ஆயிருந்தா நீ இது மாதிரி பண்ணி இருப்பியா அப்ப நந்தினிக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தானே நீ இப்படி பண்ண என்று கேட்க, ஆமா அவ யாரு அவளை இந்த வீட்டை விட்டு அனுப்புங்க என்று கோபப்பட உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என சென்று விடுகிறார்.

உடனே அழுது கொண்டே கல்யாணம் வாழை இலை எடுத்துக் கொண்டு வருகிறார் இதில் படுக்க வைத்தால் நல்லது என சொன்ன அவர்களும் எடுத்துக் கொண்டு வந்து படுக்க வைக்க சூர்யா வருகிறார். எதுக்காக இப்போ வாழை இலையில் படுக்க வச்சிருக்கீங்க என்று கேட்க அளவுக்கு அதிகமாக அம்மை போட்டால் எங்க ஊர்ல இது மாதிரி பண்ணுவாங்க அந்த ஆத்தாவுக்கு என் புள்ளையை இலையில் படையல் போட்டு இருக்கேன் அந்த அம்மா எடுத்தா எடுத்துக்கட்டும் இல்ல திருப்பிக் கொடுத்து விடட்டும் என்று சொல்லி அழ என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சூர்யா சொல்லுகிறார். உங்களுக்கே இப்படி இருக்கும் போது அவளை பெத்த அப்பனா எனக்கு எப்படி இருக்கும்யா? என்று சொல்லி அழுகிறார். வாடி வதங்கி போய் இருக்கு என்னோட புல்ல, நம்ம பேசறது கூட அவளுக்கு கேக்கல சுயநினைவு இல்லாமல் படுத்துக்கிட்டு இருக்கா என்று சொல்லி கலங்குகிறார்.

விஜி அவ்வளவு சொல்லியும் அவங்க நான்வெஜ் சாப்பிட்டாங்க அதனால தான் இப்படி உக்கிரமா ஆயிட்டா என்று சொல்ல, சிங்காரம் அது எப்படி ஐயா இவங்களுக்கு இப்படி முடியுது சாப்பிட என்று சொல்லுகிறார். உடனே விஜி டயர்ட் ஆக இருக்க சூர்யா எல்லோரையும் ரெஸ்ட் எடுக்க அனுப்பிவிட்டு நந்தினி பக்கத்தில் உட்கார்ந்து வேப்பிலையில் விசிறிகிறார். சூர்யா மறுநாள் காலை வரை தூங்காமல் தூக்கத்திலேயே விசிறி கொண்டு இருக்கிறார். விஜி வந்து நைட் ஃபுல்லா தூங்காம இப்படியே தான் விசிறிகிட்டு இருந்தீங்களா என்ன கூப்பிட்டு இருக்கலாம் என்று சொல்ல நீயும் டயர்டாதான் இருந்திருப்ப பரவால்ல விஜி என்று சொல்ல சரி நான் விசுறுகிறேன் என கையில் வேப்பிலையை வாங்கி விசிறி விடுகிறார்.

வழக்கமாக வீட்டுக்கு வரும் சாமியார் வர அருணாச்சலம் அவரை அழைத்து வந்து நந்தினியை காட்டுகிறார். அவரும் நந்தினியை செக் பண்ணி பார்த்துவிட்டு விஜியுடன் சில விஷயங்களை கேட்க சூர்யா என்னாச்சு என கேட்கிறார்.ஆனால் அவர் இங்கேயே இருங்க என சொல்லிவிட்டு அருணாச்சலத்தை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேசப் போகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நீ எப்படிடா அங்க போய் பண்ணுவ என்று கேட்க விஜி சூர்யா அண்ணா கோவில் வாசல்ல என்று கேட்கிறார். அருணாச்சலம் நம்ம வீட்டுக்கு வந்து சாமியார் அப்படிதான் சொன்னாரு என்று சொல்லுகிறார். என்னோட நந்தினிக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்னு அந்த கடவுளுக்கே தெரியணும் என்று சூர்யா முடிவெடுத்துவிட்டு கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறார். உடனே ஒரு நபர் கை காலில் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிட வேண்டியது தானே எதுக்குடா இப்படி பிச்சை எடுக்கிற என்று கேட்டு அசிங்கப்படுத்த சூர்யாவின் முகம் மாறுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 18-09-25
moondru mudichu serial promo update 18-09-25