தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவும் அசோகனும் குடித்துவிட்டு டான்ஸ் ஆடி அலப்பறை செய்கின்றனர். சூர்யா அசோகனை தள்ளிவிட்டு சென்றுவிட மாதவி அசோகனை அழைத்துக் கொண்டு வந்து தலையில் தண்ணீர் ஊற்றுகிறார். பிறகு எதுக்காக உங்கள அனுப்பி வைத்தேன் என்று கோபப்படுகிறார். உடனே அசோகன் நடந்த விஷயங்களை சொல்ல, நான் பார்த்தப்போ விவேக் அப்புறம் அந்த கன்னியப்பன் இவங்க இரண்டு பேரும் தான் இருந்தாங்க என்று சொல்லுகிறார். அப்போ வழியில ஏதாவது இடத்தில் கார் நின்றதா என்று கேட்க, அதையெல்லாம் நான் கவனிக்கவில்லை அதுக்கு அப்புறம் சூர்யா சரக்கு அடிக்க கூப்பிட்டதோ வேண்டான்னு சொல்ல முடியல என்று சொல்லுகிறார் மாதவி கடுப்பாகி அசோகனை அடித்து விட்டு சென்று விடுகிறார்.
ரூமில் சூர்யா பாட்டு வைத்துவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, நந்தினி வந்து பார்த்துவிட்டு பாட்டை ஆஃப் பண்ணுகிறார். இப்ப என்ன சாதித்து விட்டீங்க என்று இந்த ஆட்டம் ஆடுறீங்க என்று கேட்கிறார். எவ்வளவு பெரிய விஷயம் நடந்து இருக்கு என் தாய்குலம் சுந்தரவள்ளியோட ஈகோவா அடிச்சு உடைச்சு கையெழுத்து போட வச்சிருக்கன் என்று சொல்ல, இப்போ கூட அவங்கதான் ஜெயிச்சு இருக்காங்க என்று அவங்க பெருந்தன்மையா நடந்திருக்காங்க. அவங்க உங்களுக்கு பயந்துட்டாங்கன்னு நினைச்சா அது உங்களோட அறியாமை, எந்த இடத்தில் விட்டு தரணும், எந்த இடத்தில் இறுக்கி பிடிக்கணும் என்று அவங்களுக்கு தெரியும். இந்த வீட்டுக்காக அவங்க தான் ஜெயிச்சிருக்காங்க. நீங்க உங்கள மட்டும் யோசிக்கிறீங்க ஆனா உங்க அம்மா இந்த குடும்பத்தை பத்தி யோசிக்கிறாங்க என்று சொல்லுகிறார்.
அதற்கு சூர்யா உன்ன முதல்ல அவங்க இந்த குடும்பத்துல ஒண்ணா பாக்கல அதுக்காக தான் நான் இதை செஞ்சேன், இப்ப சொன்னியே அவங்க தான் விட்டுக் கொடுத்தாங்கன்னு அது கரெக்ட் கிடையாது எனக்கு அவங்கள பத்தி நல்லா தெரியும் சரியான சந்தர்ப்பம் வரும்போது அப்படியே வழி வாங்குவாங்க அவங்கள பத்தி லேசா எடை போடாதே என்று சொல்ல தயவு செஞ்சு ரெண்டு பேரும் இப்போது விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். ஆனால் சூர்யா மறுபடியும் பாட்டு போட்டுவிட்டு குத்தாட்டம் போடுகிறார். சுந்தரவல்லி ரூமில் டென்ஷனாக இருக்க அருணாச்சலம் வருகிறார். அமைதியாக எதுவும் பேச வேண்டாம் என அருணாச்சலம் திரும்பி போக சுந்தரவல்லி கூப்பிட்டு நிற்க வைத்து சண்டை போடுகிறார். இந்த வீட்டில் பிரச்சனை வரும்போது எல்லாம் அவன் பக்கம் தான் சப்போர்ட் பண்ணி பேசுறீங்க என்று சொல்லுகிறார்.
அதெல்லாம் விடுங்க இப்போ வீடு விக்கிற அளவுக்கு அவன் முடிவெடுத்து இருக்கான் அத பத்தி ஏதாவது அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருப்பீங்களா என்று கோபப்படுகிறார். நீங்களும் அவன் கூட சேர்ந்துக்கிட்டு கூட்டு களவாணி தனம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். இந்த ஈகோ தான் உனக்கு பிரச்சனை என்று சொல்ல, நீங்க கல்யாணம் பண்ணி வந்ததுல இருந்து எனக்கு ஈகோ இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க அது எனக்கு பிரச்சனை இல்ல நான் ஈகோ புடிச்ச பொம்பள தான் நான் சூர்யாவுக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுப்பேன் ஆனா அந்த வேலைக்காரிக்காக எதையும் செய்ய மாட்டேன். உங்க புள்ள சூர்யா அவன் ஆட்டத்தை ஆடி காட்டிவிட்டான் இனிமேல் இந்த சுந்தரவள்ளியோட ஆட்டத்தை அவன் பார்ப்பான் பார்த்துக்கிட்டே இருங்க என்று சொல்லுகிறார். சூர்யா ரூமில் குடிக்க ஆரம்பிக்க, உடம்பு சரியில்ல நாளும் எதுக்கு குடிக்கிறீங்க என்று கேட்க சூர்யா குடிப்பதற்கான காரணத்தை நியாயப்படுத்தி பேசுகிறார்.
ஆனால் நந்தினி குடிச்சு குடிச்சு எத்தனை குடும்பம் சீரழிஞ்சு கிடக்க தெரியுமா என்று கேட்கிறார். பிரச்சனை வந்தால் சரி பண்ண பாக்கணும் அதுக்குன்னு குடிக்க கூடாது என்று சொல்லுகிறார்கள். உடனே நந்தினி இடம் சரக்கு பாட்டிலை ஓபன் பண்ணி கொடுக்கச் சொல்ல நந்தினி அமைதியாக படுத்து விடுகிறார்.
அந்த நேரம் பார்த்து விவேக் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு நீ நம்ம பிரண்டு விஜய் ஷங்கர் பத்தி கேட்டல்ல அவ பெங்களூர்ல ஒரு டெக் கம்பெனியில் வேலை செஞ்சுகிட்டு இருக்கானா என்று சொல்ல சரி அவன் நம்பர் இருக்கா என்று கேட்க இருக்கு என்று சொல்லுகிறார். சரி நீ நம்பர் குடு நான் எழுதுகிறேன் என்று சொல்ல சூர்யாவும் நோட்டில் நம்பர் எழுத நந்தினி கையில் அடிபட்டு இருக்கு இவ்வளவு அழகா எழுதுறாரு என்று வியப்பாக பார்க்கிறார். என்னோட பிரண்டு இவ்வளவு நாளா எங்க போயிருந்தானே தெரியல விவேக் கண்டுபிடித்து விட்டான் அதுதான் நம்பர் வாங்கிட்டேன் என சொல்ல, ஏன் சார் நல்லா எழுதுறிங்க உங்க கை நல்லாயிடுச்சு போல முன்னாடியெல்லாம் பேனா பிடிக்கவே கஷ்டப்படுவீங்க இப்ப எல்லாம் நல்லா எழுதுறிங்க அப்போ நீங்களே சைன் போடலாமே என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யா கைக்கு ஒத்தடம் கொடுத்து சீக்கிரம் சரியாயிடும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருக்க எல்லாரையும் வீட்ல இருக்க சொல்லி இருக்கா அப்படி யார் தான் வராங்க என்று அருணாச்சலம் கேட்கிறார். கொஞ்சம் நேரத்தில் டாக்டர் வந்து சூர்யாவின் எக்ஸ்ரே பார்த்துவிட்டு நீங்க கம்ப்ளீட்டா குணமாயிட்டிங்க என்று சொல்லுகிறார்.
சூர்யா ரூமில் இருக்க நந்தினி வந்தவுடன் இவர் டாக்டர் சொன்னதை கேட்டிருப்பாலோ என்று யோசிக்கிறார். மறுபடியும் கையெழுத்து பிரச்சனையை ஆரம்பிச்சிடுவா என்று நினைக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.