Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டுக்கு வந்த சாமியார், நந்தினியின் உடல் நிலை என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 17-09-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் விஜி நந்தினி இடம் கல்யாணத்திற்கு சாமி வந்த விஷயத்தை சொல்லுகிறார். அவங்க வாங்கிட்டு வந்த சிக்கனை விசிறி அடிச்சுட்டு நான் போற வரைக்கும் யாரும் இந்த வீட்ல நான் வெஜ் சாப்பிடக்கூடாது என்று கோபமாக சொல்ல எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு சென்றதாக சொல்லுகிறார். உன்கிட்ட தான் யாரும் பேசல ஆனா என்கிட்ட கூட உனக்கு எப்படி இருக்குன்னு கேட்கல என்று சொல்லி கோபப்படுகிறார். விடுங்க அக்கா இப்படியும் சில பேர் இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே சூர்யா வீட்டுக்கு வர டைனிங் டேபிளில் கல்யாணம் படுத்திருப்பதை கவனித்து எழுப்பி விடுகிறார். எல்லாரும் போயிட்டாங்களா என்று சூர்யாவிடம் கேட்டுவிட்டு உங்களுக்கு தெரியாம ஒரு விஷயம் நான் பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார். அவங்க சிக்கன் வாங்கி சாப்பிட்டாங்க சொல் பேச்சை கேட்காமல் சாப்பிட பார்த்தாங்க அதனால சாமி வந்தது போல அவங்களை மிரட்டி விட்டேன் என்று சொன்ன சூப்பர் கல்யாணம் இது மாதிரி ஏதாவது நான் என்கிட்ட சொல்லு என்று சொல்லிவிட்டு சூர்யா ரூமுக்குள் வருகிறார்.

வரும்போது ஷூவை வெளியில் கழட்டி விட்டு உள்ளே வந்து நந்தினியை உட்கார வைத்து விபூதி வைத்து விடுகிறார். உடனே நந்தினி ரூமுக்கு வரும்போது சரக்கு பாட்டிலோட வருவீங்க இப்போ அர்ச்சனை பையோட வந்து இருக்கீங்க அருணாச்சலம் ஐயா கோவிலுக்கு போனாரா என்று கேட்க அப்போ கடைசி வரைக்கும் என்ன அந்த லிஸ்டில் சேர்க்க மாட்டியா என்று கேட்கிறார். திடீர்னு கோவிலுக்கு போனோம்னு தோணுச்சு ஏன்னா நம்ம வீட்டுல இருக்குறவங்களுக்கு யாராவது உடம்பு சரியில்லன்னா கோவிலுக்கு போய் வேண்டி போல அதனால தான் என்று சொல்லி கோவிலில் நடந்த விஷயங்களை சொல்லுகிறார். நந்தினி சூர்யாவை வியப்பாக பார்க்கிறார் நீங்க இதுவரைக்கும் தனியா போனது இல்லல்ல என்று சொல்லுகிறார். கம்ப்ளிட்டா உனக்காக மட்டும் தான் நான் கோவிலுக்கு போனேன் என்று சொல்லுகிறார். கல்யாணம் கொடுத்த ஆக்டிங்கில் மூவரும் பயத்தில் நடுங்கி உட்கார்ந்து இருக்கின்றனர்.

உடனே மாதவி, சுரேகா இருவரும் கல்யாணம் நடந்து கொண்ட விஷயத்தை போனில் சொல்லி, எங்களுக்கு ரொம்ப பசிக்குது மா என்று சொல்ல நான் வரும்போது மட்டன் பிரியாணி வாங்கிட்டு வரேன் அவனுக்கு எப்படி சாமி வருதுன்னு நான் பாக்குறேன் என சொல்ல மூவரும் சந்தோஷப்பட்டு கீழே இறங்கி வருகின்றனர். டைனிங் டேபிளில் மூவரும் உட்காந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்ட என்று கேட்க நான் எப்படி நடந்துக்கிட்டேன் நீங்க உங்களுக்கு முதலாளி நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து தானே நடந்துக்கிறேன் என்று எதுவும் தெரியாததுபோல் பேசுகிறார். நீ எங்கள சிக்கன் சாப்பிட விடாமல் தான தடுத்த, இப்போ என்னோட அத்தை மட்டன் பிரியாணி வாங்கிட்டு வராங்க நீ அதை எப்படி தடுக்கறன்னு பாக்குறேன் என சொல்லுகிறார். சிக்கன் பிரியாணிக்கு வந்த சாமி மட்டன் பிரியாணிக்கு வருமா வராதா என்று சுரேகா கேட்டுக்கொண்டு இருக்க சுந்தரவல்லி பிரியாணியுடன் வருகிறார்.

வந்தவுடன் கல்யாணத்திடம் போய் தட்டு எடுத்துக்கிட்டு வா என்று சொல்லி அனைவரிடமும் பிரியாணி எடுத்துக் கொடுக்கிறார். உடனே சுந்தரவல்லி கல்யாணம் கையாலேயே பரிமாற சொல்ல அவரும் அனைவருக்கும் பரிமாறுகிறார். உடனே கல்யாணத்திடம் வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலையை பாரு தேவையில்லாத வேலையை பார்க்காதே என்று சொல்லி அனுப்ப சூர்யா அறிவாலுடன் வந்து யாரும் சாப்பாட்டில் கை வைக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்.

உடனே மனுஷங்களா நீங்க எல்லாம், உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா நீங்க எல்லாம் ஒரு தாய்க்குலமா என்று திட்டுகிறார். அங்க ஒருத்தி அம்மா போட்டு வலியில் துடிச்சுக்கிட்டு இருக்கா, ஆனால் நீங்க கொஞ்சம் கூட அறிவில்லாம பிரியாணி சாப்பிடுறீங்க. இதே மாதிரி உங்க பொண்ணுக்கு வந்தா இப்படித்தான் சாப்பிடுவீங்களா இது தப்புன்னு உங்களுக்கு தோணலையா என்று திட்டி விட்டு சூர்யா சென்று விடுகிறார். ஆனாலும் சுந்தரவல்லி சூர்யா பேச்சை கேட்காமல் சாப்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் வழக்கமாக வீட்டுக்கு வரும் சாமியாரை அழைத்து நந்தினிக்கு முடியாமல் இருப்பதை சொல்லி அழைத்து வந்து காட்டுகிறார். அவரும் நந்தினியை செக் பண்ணி பார்த்துவிட்டு விஜியுடன் சில விஷயங்களை கேட்கிறார்.

என்னாச்சு என சூரியா கேட்க நீங்க இங்கேயே இருங்க என்று சொல்லிவிட்டு அருணாச்சலத்தை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேச வேண்டும் என செல்கிறார். நந்தினிக்கு என்ன ஆனது? சாமியார் என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 17-09-25
moondru mudichu serial promo update 17-09-25