Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி விட்ட சவால், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 17-07-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் இந்த வீட்டை வாங்க நானும் உன் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வீட்டை வாங்கி கட்டி இருக்கும் தெரியுமா? இது வெறும் கட்டிடம் கிடையாது கோவில் இதெல்லாம் உனக்கு எங்க புரியும். இப்போ சொல்றேன் உன்னால முடிஞ்சா வீடு இல்ல சின்னதா ஒரு இடம் வாங்கி கட்டி பாரு அப்போ தெரியும் இதோட வலி என்னன்னு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே சூர்யா நந்தினியை கூப்பிட்டு கையெழுத்து போடச் சொல்ல நந்தினியும் கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் கன்னியப்பன் மற்றும் விவேக் இருவரும் காரை ஒரு இடத்தில் நிறுத்தி கெட்டப்பை கலைக்க சூர்யாவும் வந்து நிற்கிறார். கன்னியப்பன் இடம் அமைதியா இருக்க சொன்னா நீ பாட்டு ஓவரா பேசிகிட்டு இருக்க என்று கேட்கிறார். கன்னியப்பன் மற்றும் விவேக் இருவரும் டிரஸ் மாத்தி கொண்டு வர கிளம்ப, சூர்யா புரோக்கர் ஆக நடித்தவரை அனுப்பி வைக்கிறார்.

பிறகு இவர்கள் இருவரும் வந்துவிட டிக்கியின் தட்டும் சத்தம் கேட்க சூர்யா திறந்து பார்க்கிறார். நீ எங்க என பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க அசோகன் எதையோ சொல்லி சமாளிக்கிறார். பிறகு அந்த பிசினஸ் மேக்னெட் எங்கே என்று கேட்க , கரெக்டு தான் மாமா நீ சொல்றதெல்லாம் பார்த்தா பேய் பிசாசாக தான் இருக்கும் என்று சொல்லி அசோகனை பயமுறுத்துகிறார். உடனே நம்ம குடிச்சிகிட்டே பேசலாம் என்று சொல்லி அசோகனை அழைத்துச் சென்று நாள் வரும் குடிக்கின்றனர். ஆனால் அசோகன் அளவுக்கு அதிகமாக குடித்து விடுகிறார். கிச்சனில் கல்யாணம் நந்தினி இடம் கையெழுத்து போட்ட விஷயம் குறித்து பெருமையாக பேசுகிறார்.

நீங்க வேற நானே பயந்துகிட்டு இருக்கேன் என்று சொல்ல, நம்மெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதிக்கிற குடும்பத்திலிருந்து வந்தவங்க நீங்க எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க கையெழுத்து கேக்குறாங்க பாக்கவே பதட்டமா இருக்கு என்று சொல்ல,அதெல்லாம் நீ கவலைப்படாத சூர்யா சார் எப்படி சம்மதிக்க வச்சாரு பாத்தியா என்று சொல்ல, சுந்தரவல்லி வந்து மறைந்து நிற்க சின்னையா போட்ட போடல அலறி அடிச்சு கிட்டு கையெழுத்து போட்டாங்கல்ல அதுதான் சின்னையா. செக்கு வெச்ச சுந்தரவல்லி அம்மாவுக்கு செக்கு வச்சாரு இல்ல என்று சொல்ல நந்தினி எல்லாம் கவனித்து கல்யாணத்திற்கு சைகை காட்டுகிறார். அதையும் மீறி கல்யாணம் பேசிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் திரும்பிப் பார்த்து சுந்தரவல்லி பார்த்து நடுங்கிக் கொண்டு வந்து நிற்க சுந்தரவல்லி அறைந்து விட்டு சென்று விடுகிறார்.

கண்ணை காட்டியதற்கு பதிலாக நீ வாயைத் திறந்து சொல்லி இருக்கலாமே என்று சொல்லிவிட்டு துணியை எடுக்க மேல செல்கிறார். பிறகு சூர்யா காரில் வந்து இறங்க புல் போதையில் அசோகன் தள்ளாட சத்தம் கேட்டு கல்யாணமும் நந்தினியும் வெளியில் வருகின்றனர். அசோகனை பிடிக்க முடியாததால் சூர்யா காரில் இருந்து துணியை எடுத்து அசோகனை முதுகில் கட்டி டான்ஸ் ஆடிக் கொண்டே இழுத்து வர மாதவி வந்து கழட்ட வேண்டும் என்று சொல்ல கழட்டாமல் இருக்க அசோகன் வந்தவுடன் கழட்டுகின்றனர். பிறகு கம்பெனி விஷயத்தில் எடுத்த முடிவுக்கு கோஆப்ரேட் பண்ண எல்லாருக்கும் தேங்க்ஸ் என்று சொல்லுகிறார்.

என்னடா ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க நான் தோத்துட்டேன்னு சொல்றியா நான் எப்பவுமே தோற்க மாட்டேன். இந்த கம்பெனியை எப்படி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும். இது கஷ்டப்பட்டு நான் உன்னோட தாத்தா உன்னோட அப்பா சேர்ந்து கஷ்டப்பட்டு உருவாக்கின வீடு அதை உன் காலடியில் உடைக்க மாட்டோம். இதற்கு அப்புறம் ஏதாவது இப்படி பண்ணினா என் முடிவு வேற மாதிரி இருக்கும் என்று சொல்லுகிறார். உடனே அசோகன் சூர்யா இருவரும் மீண்டும் டான்ஸ் ஆடுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா ரூமில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க நந்தினி வந்து இந்தக் குடும்பத்தோட மானம் மரியாதைக்கும் முன்னாடி என்னோட ஈகோ ஒன்னும் பெருசு கிடையாது என்று விட்டுக் கொடுத்திருக்காங்க உண்மையிலேயே ஜெயிச்சது நீங்க கிடையாது அவங்கதான் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி அவனோட ஆட்டத்த ஆடி காமிச்சிட்டான் ஆனா இந்த சுந்தரவல்லி ஓட ஆட்டத்தை இனிமேதான் பார்க்கப் போறான் என்று சொல்லுகிறார்.

தாய் குலம் இருக்காங்கல்ல சுந்தரவல்லி அவங்கள பத்தி எல்லாம் லேசா எடை போடாத என்று நந்தினி இடம் சூர்யா சொல்லுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 17-07-25
Moondru Mudichu Serial PromoMoondru Mudichu Serial Promo Update 17-07-25 Update 17-07-25