நந்தினி எடுக்கும் முயற்சி,விஜி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா தூங்கி எழுந்திருக்க மாதவி, சுரேகாவும் வந்து விசாரிக்க அந்த நேரம் பார்த்து மீண்டும் சூர்யா நந்தினி என கூப்பிடுகிறார். இவர்கள் மூவரும் அந்த நந்தினி வரமாட்டா என்று சொல்ல, மீண்டும் சூர்யா கூப்பிட்டுக் கொண்டே இருக்க சுந்தரவல்லி வந்து அவ இங்க இல்ல என்கிட்ட சண்டை போட்டுட்டு அவ வீட்டுக்கு போயிட்டா என்று சொல்ல நீங்க அப்படி சொன்னா நான் நம்பிடுவேன்னு நினைச்சீங்களா என் நந்தினி என்ன விட்டு போக மாட்டா நீங்க எவ்வளவு பெரிய கிரிமினல் என்று எனக்கு தெரியும் போய் நந்தினி வர சொல்லுங்க என்று சொல்லுகிறார். இல்ல டாக்டர் ரெண்டு வாரத்துக்கு எழுந்துக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க நீ ரெஸ்ட் எடுத்துட்டு மூணு வாரம் கழிச்சு கூட போய் அவளை ஊர்ல போய் பார்த்து ஏண்டி என்னை விட்டுட்டு போனேன்னு கேளு என்று சொல்ல சூர்யா நான் நம்ப மாட்டேன் நந்தினி இங்கதான் இருக்கா என்று சொல்ல கத்திக்கொண்டே இருக்க நந்தினி எப்படி கத்துறாரு பார்த்தீங்களா என்று சொல்கிறார்.

இன்னைக்கு என்ன ஆனாலும் பரவால்ல நான் போய் அவரை பார்க்கத்தான் போறேன் என படிக்கட்டு ஏறி வர எதிரில் சுந்தரவல்லி வர நந்தினி பின்னாலேயே இறங்குகிறார். வழக்கம்போல் சுந்தரவல்லி நந்தினியை திட்டி விட்டு இவ்வளவு கூப்பிட்டோம் நீ வரலன்னா அவன் இந்த வீட்ல நீ இல்லன்னு நினைப்பா அவன் நினைக்கலனாலும் நாங்க நினைக்க வைப்போம் என்று சொல்லிவிட்டு கல்யாணத்து இடம் சூர்யாவுக்கு புடிச்ச மாதிரி சமை என்று சொல்ல, சின்னையாவுக்கு எப்படி சமைக்கலாம்னு நந்தினிக்கு தான் தெரியும் என்று சொல்ல உன் வேலையை மட்டும் நீ பாரு என்று சொல்ல, கல்யாணம் நந்தினி பேகை எடுத்துக்கொண்டு உள்ளே கொடுத்துவிட்டு நீ உள்ள போமா நான் போய் காய்கறி வாங்கிட்டு வரேன் என்று சொல்ல நந்தினி கல்யாணத்தின் காதில் எதையோ சொல்லி வாங்கிட்டு வரச் சொல்ல அவரும் சரி என சொல்லிவிட்டு செல்கிறார்.

கல்யாணம் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர நந்தினி கிச்சனில் இருக்கிறார். கல்யாணம் உள்ளே வந்தவுடன் சுந்தரவல்லி கூப்பிடுகிறார். பிறகு சுந்தரவல்லி பையை திறந்து பார்க்க அதில் இருக்கும் ஒரு தக்காளியை எடுத்து இப்படி தான் தக்காளி வாங்குவியா என்று கேட்டு திட்டிவிட்டு சென்று விடுகிறார். நல்லவேளை நான் சொன்னதை நீங்க வாங்கிட்டு வரல என்று சொல்லுகிறார். அதுதான் இல்ல நீ சொன்னதை நான் வாங்கிட்டு வந்துட்டேன் என சொல்லி ஸ்லேட் மற்றும் சாக்பீஸ் கொடுக்கிறார். ரொம்ப சந்தோஷம் அண்ணே என்று சொல்ல என்னமா பண்ண போற என்று கேட்க சொல்கிறேன் என சொல்லி நந்தினி ஒரு இடத்தில் உட்கார்ந்து பலகையில் சூர்யா சார் நான் இங்கதான் இருக்கேன் என்று பலகையில் எழுதிவிட்டு நான் எங்கேயும் போகல சார் யார் என்ன சொன்னாலும் எங்கேயும் போக மாட்டேன் என்று சொல்லுகிறார்.

இந்த ஸ்லைட்ல இருக்கிறத நீங்க படிக்கணும் அப்போதான் நீங்க கத்தாம இருப்பீங்க என்று சொல்லிவிட்டு கருப்பனிடம் இதை எப்படியாவது சூர்யா சார் கண்ணில் படுற மாதிரி பண்ணிட என்று சொல்ல கல்யாணம் வந்து எதுக்காக மா இப்படி எழுதி இருக்க என்று கேட்கிறார். இதை எப்படிமா அவர் பார்ப்பாரு அவரு தான் உடம்பு முடியாம படுத்திருக்கிறார் என்று கல்யாணம் கேட்க நந்தினி அமைதியாக இருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யா சாருக்கு நான் எங்க இருக்குன்னு தெரியனும் என்று ஒரு பலகையில் சூர்யா சார் இங்கதான் இருக்கேன் என எழுதி அதை நூலில் கட்டி தொங்க விடுகிறார் இது எப்படியாவது பார்த்தால் நான் இங்கதான் இருக்கேன்னு புரிஞ்சு பாரு என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து விஜியும்,விவேக் வர நந்தினிக்கு ஒரு ஆறுதல் தெரிகிறது நந்தினி விஜய் கட்டி பிடித்து என்னை சூர்யா சாரை பார்க்க விடமாட்டேங்கிறாங்க என்று சொல்ல விஜி சுந்தரவல்லி இடம் சென்று நீங்களே நந்தினி பார்க்க விடமாட்டீங்க என்று கேள்வி கேட்க சுந்தரவல்லி அவரையும் திட்டிய அனுப்பி விட நந்தினி யார் என்ன சொன்னாலும் எவ்வளவு தடை வந்தாலும் நான் சூர்யா சாரை பார்த்தே தீருவேன் என்று முடிவோடு இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 16-11-25
jothika lakshu

Recent Posts

பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…

2 hours ago

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…

2 hours ago

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட்

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…

2 hours ago

KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ?

KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…

2 hours ago

கலெக்டர் ஆபீஸ் வந்து மனு கொடுத்த வாட்டர் மெலன் ஸ்டார்..என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

2 hours ago

‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு – முழு விவரம்

‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…

2 hours ago