moondru mudichu serial promo update 16-10-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் சுரேகா அம்மாவை கோவிலுக்கு கூட்டிட்டு போகணும் என்று சொல்ல அதெல்லாம் எதுக்கு உனக்கு தேவை இல்லாத வேலை என்று சொல்லுகிறார் நான் போய் கூப்பிட்டா வருவாங்க என்று சொல்லிவிட்டு நந்தினி சுரேகா ரூமுக்கு வருகிறார். எதுக்கு இப்படி வர என்று கேட்க தயங்கி கொண்டே இருக்க நான் உங்களுக்கு உடம்பு சரியில்லாததனால நான் வேண்டிக்கிட்டு இருக்கேன் நீங்க என் கூட கோவிலுக்கு வரணும் என்று சொல்ல என் ரூமுக்கு வந்து என்னை கோவிலுக்கு வா ன்னு சொல்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா என்று கேட்கிறார். என்ன கோவிலுக்கு போக பார்க்கl போக கடைக்கு போகனு எதுக்கும் என்ன கூப்பிடாத எனக்கு எப்போ எங்க போனும்னு எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். நம்ம சாமி கும்பிட்டுட்டு அந்த கயிற மட்டும் உண்டியலில் போட்டு விடுங்க போதும் என்று சொல்ல இதெல்லாம் உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கானே அவன் கிட்ட போய் சொல்லு என்று சொல்லிவிட்டு தெய்வகுத்தம் ஆயிடும் என நந்தினி சொல்ல சுரேகா கயிறை கழட்டி கொடுத்துவிட்டு நீயே போய் உண்டியல்ல போடு என சொல்லி அனுப்புகிறார்.
நந்தினி வெளியில் வந்தவுடன் சூர்யா அவ தான் வரமாட்டான்னு சொன்னேன்ல என்று சொல்ல பரவால்ல சார் அவங்க தான் கயிறு கொடுத்துட்டாங்களா நான் உண்டியல்ல போட்டுட்டு வந்துடுறேன் என சொல்லுகிறார். ஒரு நிமிஷம் நின்னு நந்தினி அவ பேசிக்கிட்டு இருந்தது எல்லாமே எனக்கு கேட்டுக்கிட்டு தான் இருந்தது ஏமாளி புருஷனை கூட்டிட்டு போனு சொன்னாங்க அவ நினைக்கிற ஆள நான் உன்னை எங்கேயும் கூட்டிட்டு போகமாட்டேன்னு இதுக்காகவே நாளைக்கு நம்ம கோயிலுக்கு போறோம் என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி தூங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய உங்களுக்கு தூக்கம் வரலையா என சூர்யாவை கேட்கிறார். நந்தினி நீங்க முதல்ல தூங்குங்க என சொல்லிவிட்டு போனை பார்த்து கொண்டு இருக்க நீ முதல்ல தூங்கு நந்தினி என்று சொல்லுகிறார் என் மனசுல ஏதாவது திட்டம் இருக்கா என நந்தினி கேட்க சூர்யா தடுமாறுகிறார். என்ன தூங்க வச்சுட்டு நீங்க குடிக்கலாம்னு பாக்குறீங்களா திருப்பியும் அதே தான் சொல்றேன் நீங்க குடிச்சீங்கன்னா நானும் குடிப்பேன் என சொல்ல இன்னைக்கு விட்றதா இல்ல கொஞ்ச நேரம் தூங்குற மாதிரி நடிப்போம் என சொல்லி தூங்குகிறார்.
தூங்கிக் கொண்டிருந்த சூர்யா திடீரென்று எழுந்து சரக்கு பக்கத்தில் போக நந்தினி காலில் புடவையை கட்டி நந்தினி கையில் கட்டி வைத்திருக்க நான் நெனச்ச மாதிரியே பண்ணிட்டீங்க இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்ல எனக்கும் கொஞ்சம் ஊத்தி கொடுங்க என்று சொல்ல சூர்யா கட்டிலில் உட்கார்ந்து புடவை அவிழ்க்க பார்க்க முடியாமல் இருக்கிறார். நீங்க நைட்டெல்லாம் ட்ரை பண்ணாலும் அது அவிழ்க்க முடியாது அது உடும்பு முடிச்சி என்று சொல்லுவாங்க என்று சொல்லுகிறார். பேசாம படுங்க நாளைக்கு நானே கழட்டி விடுவேன் என சொல்லிவிட்டு தூங்கச் சொல்கிறார். மறுநாள் காலையில் மாதவி சுரேகா இருவரும் பசி அதிகமாக இருக்கு சாப்பிட வேண்டும் என வர டைனிங் டேபிளில் சாப்பாடு இல்லாமல் இருக்கிறது உடனே கிச்சனுக்கு வந்து நம்ம எடுத்துக்கலாம் என வருகின்றனர். கிச்சன் இல் சமையல் இல்லாமல் இருப்பதால் இவர்கள் டென்ஷன் ஆகி இருக்க அந்த நேரம் பார்த்து நந்தினி வருகிறார்.
எதுக்கு சமைக்கல என்று கேட்க, இந்தக் கயிறு கோவில்ல போய் உண்டியல்ல போடறதுனால சீக்கிரமாகவே போனோம்னு சூர்யா சார் சொன்னாரு அதனாலதான் சமைக்க டைம் இல்லை என சொல்ல இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லம்மா ஒரு பத்து நிமிஷம் இருங்க நான் சீக்கிரம் பண்ணி கொடுக்கிறேன் என சொல்லி நந்தினி கிச்சனுக்கு சென்று தோசை ஊத்துகிறார். உடனே சூர்யா நந்தினி கூப்பிட்டுக் கொண்டு கீழே இறங்கி வர கிச்சனில் இருப்பதை கவனிக்கிறார். பிறகு கோபமாக வந்து நீ எதுக்கு இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க நான் தான் வெளியில் சாப்பிட்டுக்கலாம் என்று சொன்ன இல்ல என்று சொல்ல இவங்களுக்காக பண்ணிக்கிட்டு இருக்கியா என்று கேட்டுவிட்டு மிக்ஸியை ஆஃப் பண்ணிவிட்டு அவங்க செய்ய சொன்னாங்களா என்று கோபப்படுகிறார். அவங்க சமைச்சுக்கட்டும் நீ வா என்று வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அருணாச்சலத்திடம் கோவிலுக்கு போகும் விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.
பிறகு காரில் சூர்யாவிடம் பத்து நிமிஷம் இருந்திருந்தால் நான் மீதியும் சமச்சிட்டு வந்திருப்பேன் என சொல்லுகிறார். நான்தான் வெளிய சாப்பிடலாம்னு சொன்னேன்ல என்று சொல்ல நானும் சமைக்காம தான் இருந்தேன் அவங்க பசிக்குதுன்னு சொன்னாங்க அப்புறம் எப்படி செஞ்சு கொடுக்காம இருக்க முடியும் என்று கேட்க பசிக்குது நான் அவங்க சமைச்சு சாப்பிடட்டும் என்று சொல்கிறார். இவகிட்ட எப்போ என்ன கேட்டாலும் சமைச்சு கொடுப்பான்னு நீ பழகி வச்சிருக்க அதனால வந்த விளைவு தான் இதெல்லாம் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் கோவிலுக்கு வர அங்கிருக்கும் பெண்மணி சூர்யாவை நந்தினிக்கு குங்குமம் வைத்து விட சொல்லுகிறார் பிறகு வெளியில் வந்த உடன் பிச்சைக்காரர்கள் நந்தினியிடம் உங்க மேல அவ்வளவு அன்பும் பாசமும் வச்சிருக்காங்க சார் விட்டு பிரிஞ்சு போய்டாதீங்க என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா நந்தினிக்கு செல்ல காரில் வரும்போது சூர்யா நந்தினி இடம் என் பக்கம் மட்டும் உன் பார்வை அப்படியே இருக்கே ஏன் எனக்கே எனக்கே தெரியல என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…