Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 16-09-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்க அவரது காலேஜ் நண்பரை சந்திக்கிறார் அப்போது அவர் மனைவியின் அருமை பெருமையை பற்றி பேச சூர்யா வியந்து பார்க்கிறார். இப்போ அவளுக்கு உடம்பு சரியில்ல இந்த ஒரு வாரமா தான் அவளோட அருமை எனக்கு தெரியுது என்று சொல்லிவிட்டு கடையிலிருந்து சென்று விடுகிறார். உடனே சூர்யா கோவிலுக்கு வந்து நந்தினி பெயரில் அர்ச்சனை என்று சொல்ல ராசி நட்சத்திரம் கேட்கிறார். எனக்குத் தெரியாது என்று சொல்ல அப்போ சாமி பேரில் அர்ச்சனை பண்ணி விடுகிறேன் என சொல்லுகிறார். சூர்யாவும் நந்தினியை எப்படியாவது குணமாக்கி கொடுத்தது என்று வேண்டிக் கொள்கிறார். பிறகு கோவிலை விட்டு வெளியில் வந்து பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்துவிட்டு எல்லாரும் என் பொண்டாட்டி நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க என்று சொல்லுகிறார். கல்யாணம் ரூமுக்கு வந்து பார்க்க எந்த பழமும் சாப்பிடலையா என்று கேட்கிறார்.

நான் கஞ்சி வேற எடுத்துக்கிட்டு வந்து இருக்கேன் என சொல்லி குடிக்கச் சொல்ல எனக்கு வேண்டாம் என நந்தினி சொல்லுகிறார் ஆனால் கல்யாணம் கட்டாயப்படுத்தி குடிக்க வேண்டும் என சொல்ல, விஜியும் எழுப்பி உட்கார வைத்து கஞ்சி கொடுக்கிறார். மறுபக்கம் ரூமில் சுரேகா மாதவி அசோகன் மூவரும் தந்தூரி சிக்கனக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு சுரேகா பண்ண ஆர்டர் வாசலில் வந்து நின்று விட, கல்யாணம் இந்த வீட்டில் யாரும் ஆர்டர் பண்ணி இருக்க மாட்டாங்க என்று சொல்ல இந்த அட்ரஸ் தான் என சொல்லி டெலிவரி பாய் சொல்லிவிட்டு, சுரேகாவிற்கு ஃபோன் போடுகிறார்.

சுரேகா வெளியில் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, கல்யாணம் இந்த வீட்ல யாரும் கவுச்சி சாப்பிடக்கூடாது என்று சொல்ல சாப்டா அவ செத்துடுவாளா சாகட்டும் அவளுக்காக எல்லாம் யாரும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்ல கல்யாணம் சுரேகாவிடம் இது மாதிரி பண்ணக்கூடாது வேண்டாமா என்று கெஞ்ச சுரேகா அறைந்து விடுகிறார். நீ எங்க வீட்டுக்கு வேலை பாக்கறியா இல்ல நந்தினிகா நான் சொல்ற வேலைய மட்டும் செஞ்சுட்டு அமைதியா இரு என்று சொல்லி திட்டிவிட்டு சென்று விடுகிறார்.

உடனே டைனிங் டேபிளுக்கு வந்து உட்கார்ந்துவிட்டு சாப்பிட வந்திருக்கேன் இல்ல தட்டு எடுத்துக்கிட்டு வா என்று கல்யாணத்திடம் சொல்ல மாதவி அசோகன் இருவரும் சாப்பிட வருகின்றனர். ஆவலோடு எல்லாத்தையும் எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிற கிச்சனுக்கு போன கல்யாணம் வராமல் இருக்கிறார். இவர்கள் கூப்பிட்டுக் கொண்டே இருக்க கல்யாணம் நின்ற இடத்தில் இருந்து சாமி வந்தது போல் ஆடிக்கொண்டு இருக்க இவர்கள் மூவரும் என்ன பேசிக்கிட்டு இருந்தா அமைதியா இருக்க என்றும் மிரட்ட உடனே கல்யாணத்திற்கு சாமி வந்தது போல் கையில் அருவாளுடன் மூவரையும் துரத்த அலறி அடித்து ஓடுகின்றனர். உடனே நான் வீட்டுக்கு வந்தது தெரிஞ்சும் இது மாதிரி பண்ணீங்கன்னா உங்களுக்கு பயம் இல்லாமல் போயிடுச்சா என்று கோபமாக பேசுகிறார்.

டைனிங் டேபிள் மேல் ஏறி நின்று என்னை மதிக்காமல் போனீங்கன்னா ஒன்னும் இல்லாம ஆகிடுவேன் என்று மிரட்டுகிறார். நான் இங்கே தான் கொஞ்ச நாள் இருப்பேன் நான் இருக்கிற வரைக்கும் யாரும் கவுச்சி சாப்பிடக்கூடாது சுத்தபத்தமா இருக்கணும் என சொல்ல விஜி இதை கவனித்து விட்டு நந்தினியிடம் செல்கிறார். பிறகு கல்யாணம் வாங்கிட்டு வந்த பொருட்களை தூக்கி விசிறி அடித்து விட்டு டைனிங் டேபிளில் மயங்கி விடுகிறார். பிறகு நந்தினி இடம் வந்து கல்யாணத்திற்கு சாமி வந்த விஷயத்தை விஜி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுரேகா சுந்தரவல்லிக்கு போன் போட்டு வாங்கிட்டு வந்து சிக்கனை எல்லாம் தூக்கி வீசி அடிச்சிட்டான் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் சூர்யா வந்து உங்க பொண்ணுக்கு இது மாதிரி வந்து இருந்தா நீங்க இப்படித்தான் பண்ணுவீங்களா உங்களுக்கு இது தப்புன்னு தோணலையா என்று கோபப்படுகிறார். பிறகு நந்தினி இடம் செல்ல உள்ள வரும்போது சரக்கு பாட்டில் ஓட வருவீங்க இப்போ அர்ச்சனா பேகோட வந்திருக்கீங்க என்று சொன்ன எல்லாரும் எப்போதுமே ஒரே மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்ல இல்ல இன்று சொல்ல நந்தினி சந்தோஷப்படுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 16-09-25
moondru mudichu serial promo update 16-09-25