சூர்யா கேட்ட கேள்வி,நந்தினி பதில் என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அசோகன் மாதவி சுரேகா மூவரும் நந்தினி இந்த வீட்ல இல்லாம இருக்குறதுக்கு நீங்கதானே காரணம் எங்களுக்கு தெரியும் என பேசிக்கொண்டு இருக்க அருணாச்சலம் வருகிறார். சூர்யா வந்து ஏதாவது தெரிஞ்சுதா டாடி என்று கேட்க எதுவும் தெரியல என்று சொல்ல நானும் விசாரிச்சேன் எதுவும் தெரியல என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி அதுவே ஒரு தகர டப்பா அது காணாம போச்சுன்னா தூக்கி போடுறத விட்டுட்டு துக்க வீடு மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்துல போன் பண்ணி என்ன கடத்திட்டாங்க என்ன காப்பாத்துங்கன்னு சொல்லுவா என்று சொல்ல, எனக்கு இதுவரைக்கும் சந்தேகமும் இல்ல ஆனால் இப்போ இவங்க சொல்றத வச்சு பார்த்தா இவங்களுக்கு அவ வெளியே போனதுல ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு என்று சொல்லுகிறார்.

நீங்க நந்தினிக்கு பண்ணதுக்கு எல்லாத்துக்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும் என்று கோபப்பட, சுந்தரவல்லி இன்னைக்கு வீட்ல பூஜை இருக்கு நிறைய வேலை இருக்கு இவன் கிட்ட எதுக்கு பேசிகிட்டு வாங்க என்று அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் நந்தினி காரில் வந்து கொண்டிருக்க எந்த ஏரியாவில் இருக்க என கெஸ்ட் கேட்க, உங்க வீடு எங்க இருக்கு என்று கேட்ட நான் பட்டுக்கோட்டையில் இருந்து இங்க வந்து ஒரு வீட்ல வேலை செய்றேன் என சொல்ல எத்தனை குழந்தை இருக்கு என்று கேட்க அதெல்லாம் இல்லை என நந்தினி சொல்லுகிறார். பிறகு நான் இங்கேயே இறங்குகிறேன் என சொல்லி நந்தினி காரிலிருந்து இறங்கி கொள்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி வீட்டுக்கு பூஜைக்கு ஆட்கள் வந்து கொண்டு இருக்க சூர்யா மற்றும் அருணாச்சலம் இருவரும் நந்தினி எங்க போயிருப்பா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிறகு சூர்யா நான் வேணும்னா நந்தினி வீட்டுக்கு போய் பாக்கவா என்று சொல்ல அப்படித்தான் போய் பாரு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வீட்டுக்கு கெஸ்ட் கார் வர குடும்பத்துடன் வந்து சுந்தரவல்லி வரவேற்க வருகிறார். பிறகு சுந்தரவல்லி அவரைப் பாராட்டிப் பேச, என்னை புகழ்ந்தது போதும் என சொல்லுகிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். நானும் உங்க அம்மா மாதிரி சாதாரண ஒரு பிசினஸ் உமன் தான் என்று சொல்ல சரி உள்ளே போகலாம் என்று சுந்தரவல்லி கூப்பிட, கொஞ்ச நேரம் இரு என்று சொல்லி காருக்கு பக்கத்தில் வர நந்தினி உள்ளே இருக்கிறார். அவரை அழைக்க நந்தினி வேண்டாம் என சொல்லியும் வலுக்கட்டாயமாக கூப்பிட சுந்தரவல்லி அதிர்ச்சி அடைகிறார்.

இந்த பொண்ண எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னு பாக்குறீங்களா என்று கேட்கிறார். பிறகு கார் சாவி எடுத்துக் கொடுத்த விஷயத்தையும் திருடர்கள் துரத்திக் கொண்டு வந்த விஷயத்தையும் சொல்லுகிறார். அதுக்கப்புறம் நான் இறக்கி விட்டுட்டேன் ஆனா கண்ணாடில இறக்கி விட்டுட்டு பார்த்ததுக்கு அப்புறம் என சொல்ல, மீண்டும் அந்த திருடர்கள் நந்தினியை துரத்தி வருவதால் காரை நிறுத்தி மீண்டும் நந்தினி காரில் ஏற்றி கொள்கிறார். இந்த விஷயத்தை அவர்களிடம் சொல்லிவிட்டு உன் பெயர் என்னமோ சொன்னியே என்று கேட்க எனக்கு தெரியும் அவங்க பேரு நந்தினி என சூர்யா சொல்லுகிறார். எனக்கு மட்டும் இல்ல என்னோட அம்மாவுக்கும் தெரியும் என சொல்லி கோர்த்து விடுகிறார்.

உடனே நந்தினியிடம் நீ இந்த வீட்ல தான் வேலை பார்க்கிறதா சொன்னியா என்று கேட்க சூர்யா அவ இந்த வீட்டு வேலைக்காரி இல்லை இந்த வீட்டோட வீட்டுக்காரி என்று சொல்லுகிறார். லவ் மேரேஜ் என்று கேட்க சூர்யா எங்க அம்மா பார்த்து பார்த்து பண்ண கல்யாணம் என்று சொல்ல வந்திருக்கும் கெஸ்ட் சுந்தரவல்லிக்கு அட்வைஸ் கொடுக்கிறார். உடனே நந்தினிக்கு சப்போர்ட் பண்ணி பேச, மாமியார் மருமகள் சண்டைக்கு இப்படி பண்ணுவியா என்று கேட்க எப்படி கரெக்டா சொன்னீங்க என்று சூர்யா சொல்ல எல்லாமே பேசி தீர்த்துக்கலாம் வாங்க என்று உள்ளே அழைத்துச் செல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி வீட்டுக்கு கெஸ்ட் ஆக வந்திருக்கும் வடிவுக்கரசி தாலி எடுத்துக் கொடுத்து சூர்யாவும் நந்தினி கழுத்தில் தாலி கட்ட சுந்தரவல்லி கடுப்பாகி நிற்கிறார். கல்யாணம் முடிந்த உடன் சுந்தரவல்லி இடம் வடிவுக்கரசி நான் உன்கிட்ட ஒன்னு உறுதியா சொல்றேன் ஒரு காலத்துல நீயே அனாந்து பார்த்து பெருமைப்படுற அளவுக்கு அவ நிலைமை உயர்ந்து நிற்கும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் சூர்யாவும் இல்ல நந்தினி விடாமல் சரின்னு ஒரு விஷயத்தை சொல்லி அதுல இருந்து பின்வாங்குற ஆள் கிடையாது ஆனால் திடீர்னு ஏன் இப்படி பண்ண என்று கேட்க நந்தினி சுந்தரவல்லி அம்மா தான் இதுக்கு காரணம்னு நான் எப்படி சொல்ல முடியும் என்று யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial promo update 16-08-25
jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

2 days ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

2 days ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

2 days ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

2 days ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

2 days ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

2 days ago