தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார். என்ன விஷயம் சுதாகர் என்ன ஆச்சு என்று கேட்க ஒரு நல்ல செய்தி சொல்றதுக்காக தான் பண்ணி இருக்கேன் என்று சொல்லுகிறார்.
உடனே அவ ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கிட்டாளா? இந்த ஊரிலேயே இல்லையா? என்று கேட்கிறார் உடனே நந்தினி புனிதாவை வம்பு இழுத்த பையனின் வீட்டிற்கு சென்று இனிமே என் தங்கச்சி பின்னாடி சுத்தி இது மாதிரி பிரச்சனை பண்ணா அவ்வளவுதான் என்று பேசுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.