Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,நந்தியின் பதில் என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 15-11-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இடம் அருணாச்சலம் நந்தினி எங்கே என்று கேட்க வீடியோ கால் பண்ணி நந்தினி உட்கார்ந்து இருப்பதை காட்டுகிறார் இப்போ நம்புறீங்களா இங்கதான் இருக்கா என்று சொல்ல அருணாச்சலம் போனை வைத்துவிடுகிறார். நந்தினி கண்கலங்கி உட்கார, கல்யாணம் ஆறுதல் சொல்லுகிறார். என்னால சூர்யா சார் பார்க்கவே முடியாதா என்று கேட்க கல்யாணம் அது எப்படிமா விட முடியும் கண்டிப்பா நீ பார்பா இந்த அண்ணன் எதுக்கு இருக்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல மறுபக்கம் சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டு தூங்கிக் கொண்டு இருக்க மாதவி எழுப்ப நீங்க போய் படுங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் பாத்துக்கிறேன் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். இப்ப நான் போன கூட நான் தூங்க மாட்டேன் அவளை வீட்டை விட்டு அனுப்புற வரைக்கும் நான் தூங்க மாட்டேன் என்று சொல்ல சரி நான் போய் படுக்கிறேன் என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார்.

அசோகன் தூங்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க மாதவி வந்து திட்டி விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் கல்யாணம் இப்போ எல்லாரும் தூங்குற டைம் ஆயிருக்கும் நான் போயிட்டு யாரெல்லாம் என்ன பண்றாங்கன்னு உள்ள போய் பார்த்துட்டு வரேன் அதுக்கப்புறம் நீ போய் சின்னையாவ பாரு என்று சொல்லிவிட்டு கல்யாணம் பதுங்கிக் கொண்டு உள்ளே வருகிறார். மேலே வந்தவுடன் அசோகன் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து கல்யாணம் உள்ளே வரப் பார்க்க அசோகன் மாறி மாறி படுத்து கொண்டே இருக்கிறார். என்ன செய்வது என புரியாமல் கல்யாணம் முழித்துக் கொண்டிருக்க அசோகன் எழுந்திருத்து உட்கார்ந்து இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க ஒரு வழியாக கல்யாணம் அசோகனை சமாளித்துவிட்டு வெளியில் வந்து விடுகிறார்.

நந்தினி என்னாச்சு அண்ணா என்று கேட்க, கல்யாணம் நடந்த விஷயத்தை சொல்ல சரி பார்த்துக்கலாம் என்று நந்தினி சொல்லுகிறார் அப்படியெல்லாம் விடமாட்டோம் மூணுல இருந்து அஞ்சு மணி வரைக்கும் நல்லா கண் அசந்து தூங்குவாங்க அந்த நேரம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கல்யாணம் தூங்கி விட நந்தினி தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உடனே நந்தினி இந்த நேரத்தில் போனா எல்லாரும் தூங்கிருப்பாங்க கண்டிப்பா நம்ம சூர்யா சாரை பார்த்திடலாம் என்று சொல்லி படிக்கட்டில் காலை வைத்து ஏறி போக சுந்தரவல்லி கூப்பிட்டு திட்டுகிறார். நந்தினி சூர்யா சாரை ஒரு தடவை பார்த்துவிட்டு வருகிறேன் என கெஞ்சி கேட்டும் சுந்தரவல்லி வழக்கம் போல் நந்தினியை திட்டிய அசிங்கப்படுத்தி வெளியில் அனுப்பி விடுகிறார்.

மறுநாள் காலையில் நந்தினி உட்கார்ந்து கொண்டே இருக்க கல்யாணம் எழுந்து நைட் ஃபுல்லா நீ தூங்கவே இல்லையாம்மா என்று கேட்க அது எப்படி அண்ணா தூக்கம் வரும் என்று கேட்கிறார். எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு அண்ணா என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி உள்ளே போக முயற்சி செய்த விஷயத்தை கல்யாணத்திடம் சொல்லுகிறார். உடனே நான் எப்படியாவது சூர்யா சரக்கு பாக்கணும் நீங்க ஏதாவது முயற்சி பண்ணி கொஞ்சம் பார்க்க வைங்க என்று சொல்லி அழ கல்யாணம் எனக்கு இந்த வீட்ல வேலையே போனாலும் சரி இன்னைக்கு பொழுது முடியறதுக்குள்ள சூர்யா சார் உன்ன பாக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு அழாத என்று ஆறுதல் சொல்லுகிறார். மீண்டும் சூரியா நந்தினி கூப்பிடும் குரல் கேட்டு நந்தினி தவிப்பில் பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா என்ன விட்டு நந்தினி போக மாட்டா நீங்க என்கிட்ட பொய் சொல்லி ஏமாத்துறீங்க என்று சொல்லுகிறார். அதையும் மீறி நீ வரலனா அவன் இங்கே இல்லை என்று நம்புவான் அவன் நம்பளனாலும் நாங்க நம்ப வைப்போம் என்று சுந்தரவல்லி நந்தினி இடம் சொல்ல பிறகு மொட்டை மாடியில் தனியாக உட்கார்ந்திருந்த நந்தினி எனக்கு ஈரக்குலை நடுங்குது என்ன இருந்தாலும் நான் இங்க இருப்பேன் என்ற நம்பிக்கையில் தானே நீங்க கூப்பிடுறீங்க என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 15-11-25