Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினியை பார்த்து கடுப்பான குடும்பத்தினர், சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

moondru mudichu serial promo update 14-08-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சொன்ன வார்த்தைகளை நந்தினி யோசித்து இருக்க, மறுநாள் காலையில் சுந்தரவல்லி கோலம் அழகா இருக்கு யார் போட்டது என்று கேட்க நந்தினி போட்டதுதான் சொல்லுகிறார். உடனே மாதவி,சுரேகா அசோகன் மூவரும் வந்துவிட கெஸ்ட் வர்ற நேரம் ஆயிடுச்சு என்று சுந்தரவல்லி சொல்ல நந்தினி மட்டும் காணம் என்று அசோகன் சொல்ல அருணாச்சலம் கல்யாணத்தை கூப்பிட்டு நந்தினி எங்கே எனக்கேட்க கானம் என்று சொல்ல தேடிப்பார் என சொல்லுகிறார். போன் போட சுவிட்ச் ஆப் என்று வர சுந்தரவல்லி நாம பேசினது வேலைக்கு ஆயிடுச்சி போல என்று நினைக்கிறார். உடனே அருணாச்சலம் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு நந்தினி ரூம்ல இருக்கலா என்று கேட்க,இல்லை என்று சொல்ல அவ வீட்ல இல்ல போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது என்று சொல்ல சரி நான் வரேன்னு என போனை வைக்கிறார். பிறகு நந்தினி கோவிலுக்கு வர அங்கு வரலட்சுமி நோன்பு நடத்தப்படுகிறது ஒரு பெண்மணி நந்தினியை கூப்பிட்டு உட்கார வைத்து வேண்டிக்கோ உன்னுடைய வேண்டுதல் நடக்கும் என சொல்ல நந்தினி வேண்டிக் கொள்கிறார்.

அங்கு இருக்கும் பெண்மணி ஒருவர் பக்கத்தில் இருக்கும் பர்சை பார்த்துக் கொண்டே இருக்க நந்தினி கவனிக்கிறார். பிறகு சூர்யா நல்லா இருக்கணும் அவரு நல்லபடியாக வாழனும் என்று வேண்டிக்கொண்டு எழுந்திருக்கும் போது அந்த பெண்மணி பர்ஸ் திருடிக் கொண்டு ஓடி விடுகிறார். நந்தினி உடனே கவனித்து பின்னாலே துரத்தி வந்து அந்தப் பெண்மணியை நிறுத்தி பர்சை கொடு என்று கேட்கிறார். இப்படிதான் கோவில்ல வந்து திருடுவியா என்று கண்டிக்க தெரியாம பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டு நந்தினியிடம் நீங்களே கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு போக மறுபக்கம் பர்ஸ் காணாமல் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறனர். நந்தினி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தவுடன் அவர்கள் நன்றி சொல்லுகின்றனர்.

காரில் சுந்தரவல்லி வீட்டிற்கு வரப்போகும் கெஸ்ட் கோவிலுக்கு வந்து மாலையும் பூவும் வாங்க சொல்லி கார் டிரைவரிடம் சொல்ல அவரும் வாங்கி கொண்டு வர வழியில் கார் டிரைவர் சாவியை டிரைனேஜ்குள் போட்டுவிடுகிறார் உடனே வந்து என்ன ஆட்சி என்று கேட்க, கைத்தவறி உள்ளே விழுந்திடுச்சு என்று சொல்ல, சுற்றி இருப்பவர்கள் எடுக்க முடியாது என்று சொல்ல நந்தினி வந்து என்னாச்சு என்று கேட்க சாவி விழுந்த விஷயத்தை சொல்லுகின்றனர். பிறகு ஒரு நிமிஷம் நான் வரேன் என்று சொல்லிவிட்டு பழைய பொருள் வாங்குபவர் அந்த இடத்தில் இருக்க நந்தினி அவரிடம் சென்று காந்தகம் கேட்டு வாங்கி வருகிறார். அதனை ஒரு கயிறு கட்டி உள்ளே விட்டு எடுக்க சாவி வந்துவிட அவரும் நந்தினியை பாராட்டி விட்டு சென்று விடுகிறார். அங்கிருந்து நந்தினி கிளம்பி வர கோவிலில் பர்ஸ் திருடிய பெண்மணி இரண்டு ஆட்களுடன் வந்து நந்தினியை மிரட்டி விட்டு துரத்தி வருகின்றனர். நந்தினி ஒரு கடையில் நுழைந்து விட அவர்களும் உள்ளே நுழைந்து துரத்துகின்றனர்.

அதே கடையில் சுந்தரவல்லி வீட்டுக்கு வர போகும் கெஸ்ட் இருக்க, என்னை மூணு பேர் துரத்திட்டு வராங்க என்று சொல்ல, ஏன் நந்தினி என்று கேட்கிறார் பிறகு நந்தினி நடந்த விஷயங்களை அவரிடம் சொல்லுகிறார். நீ யார் வந்தாலும் கவலைப்படாத நான் பார்த்துக்கிறேன் என்று நந்தினி அழைத்துக் கொண்டு வருகிறார். சரி நான் போறேன் என்று நந்தினி சொல்ல,அது எப்படி உன்ன தனியா விட்டுட்டு போக முடியும் நான் உன்னோட வீட்டில் விடுகிறேன் என சொல்லி காரில் அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருக்க அசோகன் மாதவி சுரேகா வந்து எங்களுக்கு நல்லா தெரியும் இது உங்களுடைய வேலைதானே என்று கேட்கின்றனர்.இத்துடன் எபிசோட் முடிகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி குடும்பத்தினருடன் வெளியில் காத்துக் கொண்டிருக்க, முதலில் கெஸ்ட் வந்து இறங்க பிறகு அவர் நந்தினி கூப்பிடுகிறார். நந்தினியும் வந்து இறங்க குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீ வீட்டு வேலை செய்றேன்னு சொன்னியே அது இந்த வீடு தானா என்று கேட்க உடனே சூர்யா நந்தினி, இந்த வீட்டு வேலைக்காரி இல்லை இந்த வீட்டோட வீட்டுக்காரி என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 14-08-25