தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி இடுப்பில் வெயிட் தூக்கிக்கொண்டு வர கல்யாணம் ஓடி வந்து நீ எதுக்குமா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க மாதவி அம்மா தான் சொன்னாங்க நீ எந்த வெயிட் தூக்கக்கூடாது என்று இந்த வீட்டில நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்லி கண்டிக்கிறார். அதற்கு நந்தினி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லன்ன ஏன் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று எனக்கு தெரியல யாருமே நான் சொல்றத புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க என்று கோபப்பட நீ எதுவுமே பேச வேண்டாம் இந்த வீட்ல நீ எதுவும் செய்யக்கூடாது அப்படியே இருந்தாலும் நானும் ரேணுகாவும் பார்த்துக்கிறோம் என்று சொல்ல நான் சொல்வதை யாரும் புரிஞ்சுக்க மாட்டீங்க என்று சொல்லி கோபப்பட்டு சென்று விடுகிறார்.
உடனே ரேணுகா கல்யாணத்திடம் உங்ககிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே பெரிய வீட்டு மருமகள் எல்லாம் திமிரோட எந்த வேலையும் செய்யாம இருப்பாங்க ஆனால் நந்தினி அக்கா மட்டும் ரெண்டு வேலைக்காரவங்க இருந்தும் அவங்களும் எதுக்கு வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க என்று கேட்க ஏன் எதுவுமே அத நந்தினி கிட்ட கேட்டு இருக்க மாட்டியா என்று சொல்ல கேட்டேன் அவங்க ஏதாவது தோப்புல வேலை செஞ்சதாகவும் ஐயா கல்யாணத்துக்கு வரும்போது தாலி கட்ட தான் சொல்றாங்க என்று சொல்ல அப்படித்தான் நடந்தது வீட்டில் இருந்து துரத்த எல்லாரும் பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க சின்னய்யா பெரியய்யா மட்டும்தான் சப்போட்டா இருக்காங்க என்ன பண்றது என்று சொல்ல அப்போ நந்தினி இந்த வீட்ல இருக்கிறது யாருக்கும் பிடிக்கலையா என்று கேட்க, இந்த சுந்தரவல்லி அம்மா எப்ப நந்தினி வீட்டை விட்டு துரத்தலாம்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க, மாதவி சுரேகா ரெண்டு பேரும் எப்ப பாத்தாலும் நந்தினி கஷ்டப்படுத்திட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சூர்யா ரூமில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்க நந்தினி உங்ககிட்ட ஒன்னு பேசணும் என்று சொல்ல சூர்யாவின் காதில் விழாமல் இருக்கிறது இதனால் காதில் ஹெட்செட் இருப்பதை பார்த்து நந்தினியாக எடுத்துவிட்டு உங்ககிட்ட ஒன்னு பேசணும் என்று சொல்லுகிறார் சொல்லு நந்தினி என்று சொல்ல நீங்க எதுக்கு வீட்ல இருக்குற எல்லார்கிட்டயும் நான் கர்ப்பமாக இருக்கிறதா சொல்லி இருக்கீங்க எல்லாரும் அதை வச்சு என்ன கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார்.
அதுவும் ரெசார்ட் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் இது மாதிரி சொன்னதுனால எல்லாரும் நம்புறாங்க எதுக்கு சார் இப்படி பண்றீங்க உங்களுக்கு குழந்தை வேணும்னா அனாதை ஆசிரமத்தில் இருந்து தத்தெடுக்க வேண்டியது தானே என்று சொல்ல எனக்கு குழந்தை எல்லாம் வேணாம் என வாயிலிருந்து வர மாதவியின் நிழல் சூர்யா பார்த்துவிட்டு எனக்கு குழந்தை வேணும் இப்பவே வேணும் என்று சொல்ல எனக்கு வேணாம் என நந்தினி சொல்லுகிறார். எங்க மம்மி டாடிய சந்தோஷமா வச்சுக்கணும்னா குழந்தை வேணும் அது இந்த வீட்ல ராஜாவோ ராணியாகவோ விளையாடுறத பார்த்து நான் நிறைய குடிக்கணும் என்று சொல்லுகிறார் எங்க அக்கா அத்தை ஆயிடும் எங்க மாமா எனக்கும் குழந்தைக்கு சேர்த்து மாமா என்று சொல்ல எனக்கு தேவையே இல்லை என நந்தினி சொல்லுகிறார் உடனே மாதவி அங்கிருந்து போக நிழல் மறைந்த உடன் சூர்யா எனக்கும் குழந்தை வேண்டாம் என சொல்லி விடுகிறார். உடனே நந்தினி இது மாதிரி வெளியே எங்கேயோ சொல்லிட்டு இருக்காதீங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
அர்ச்சனா ரேணுகாவை வரவைத்து அங்கு நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்கிறார் அதில் முதலில் சுந்தரவல்லி அம்மாவை பொறுத்த வரைக்கும் நந்தினி வீட்டை விட்டு துரத்தனும் நினைக்கிறாங்க என்று சொல்ல அப்போ அவங்க என்னோட லிஸ்ட் அப்புறம் என்று மாதவி பற்றி கேட்க அவங்களுக்கு நந்தினி வேலைக்காரியா இருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்ல மருமகளான பிரச்சனை அவங்களுக்கு சுரேகாவும் அசோகனும் மாதவி எடுக்கிற முடிவுக்கு தலையாட்டிக் கிட்டே இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனா அருணாச்சலத்தை பத்தி எனக்கு தெரியும் நந்தினி ஓட ஜால்ரா என்று சொல்லி அப்போ அந்த வீட்டில நந்தினிக்கு ஆதரவா அசோகன் மாதவி சுரேகா அருணாச்சலம் என்ற நாலு பில்லர் இருக்கு இதனாலயும் அடிச்சு நொறுக்கி காலி பண்ணிட்டா அந்த நந்தினியை ஈசியா துரத்தி விட்டுடலாம் என்று பிளான் போடுகிறார். நீங்க நினைச்சா நாளைக்கே அதை செய்யலாம் என்று சொல்ல நான் உனக்கு சொல்றேன் ஒரு ஒரு அடியும் நந்தினி தலையில இடி மாரி இறங்கணும் அவளுக்கு யாரும் சப்போர்ட்டுக்கு வந்து நிக்க கூடாது நான் சொல்ற வரைக்கும் நீ உஷாரா இரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
வீட்டில் அசோகன் மசாலா பால் குடித்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி வந்து ரெண்டு நாளா மாடில துணி காஞ்சிக்கிட்டு இருக்கு எடுக்கலையா என்று கேட்க மாதவி ரேணுகாவிடம் சொன்னதாக சொல்லுகிறார் ரேணுகா நந்தினி அக்கா கிட்ட சொல்லி இருக்கேன் என சொல்ல நந்தினி மேலிருந்து துணியை எடுத்து வருகிறார் உடனே சுந்தரவல்லி இரண்டு நாளா காய வச்சிட்டு இப்படி எடுத்தா என்ன பிரயோஜனம் என்று சொல்ல அது நேத்தோட துணி நான் நேற்று எடுத்துட்டமா இது இன்னைக்கு காலைல போட்டது என்று சொல்ல அருணாச்சலம் இனிமே என்னைக்கு துணி துவைச்சு போட்டேன்றதை எழுதி போட்டு என்று சொல்லிவிட்டு நீ போய் வைமா என்று அனுப்பி வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் சூர்யா சந்தோஷமாக வர ஒரு குட் நியூஸ் டாடி என்று சொல்லுகிறார். என்ன விஷயம் என்று அருணாச்சலம் கேட்க வருஷம் வருஷம் நம்ம ஒரு மெட்டல் காண்ட்ராக்ட் எடுப்போம் இல்ல அது இந்த வருஷம் வருது அந்த காண்ட்ராக்ட் இந்த வருஷம் நான் எடுக்கலான்னு பிளான் பண்ணி இருக்கேன் என்று சொல்ல அருணாச்சலம் சூர்யாவை பாராட்டுகிறார். நாலு வருஷத்துக்கு முன்னாடி நீ பிஸ்னஸ்ல இன்ட்ரஸ்டா இருக்கும்போது தொடர்ந்து நம்ப தான் அந்த காண்ட்ராக்ட் எடுத்து இருந்தோம் என்று சொல்ல இந்த வார்த்தை நான் கண்டிப்பா எடுத்துருவேன் டாடி என்று சொல்லுகிறார் சுந்தரவல்லி எதுவும் பேசாமல் இருக்க அது நல்ல கான்ட்ராக்ட் தான் ஆனா நம்ம கைக்கு வருவது கஷ்டம் என சொல்லி சூர்யாவால் முடியாது என்று சொல்லுகிறார்.
உடனே அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் அவனே ரொம்ப நாள் கழிச்சு பிசினஸ் குள்ள வந்திருக்கான் இப்படித்தான் நெகட்டிவா பேசுவியா என்று சொல்ல நான் அதுக்காக சொல்லல இவ்வளவு நாளா நான் தான் பிசினஸ் பாத்துட்டு இருந்தேன் லாபம் எப்படி வரும் நஷ்டம் எப்படி வரும்னு எனக்கு தெரியும் அந்த டெண்டர் கிடைச்சாலும் நமக்கு லாபம் வராது அதனால தேவையில்லன்னு சொல்லுங்க என்று சொல்ல அப்பனா கண்டிப்பா நான் அந்த டெண்டர் எடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விடுகிறார். உடனே சுந்தரவள்ளியும் வாய்சவடால் விட்டால் எதையும் செஞ்சற முடியாது என்று சொல்லிவிட்டு அவரும் சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினியை தேடி வந்த அருணாச்சலம் எனக்கு நாளைக்கு நல்ல ஸ்வீட்டா பண்ணிக் கொடும்மா என்று கேட்க என்ன விஷயம் ஐயா ஏதாவது நல்ல விஷயமா என்று கேட்க நான் இன்னைக்கு தான் பழைய சூர்யாவை பார்த்தேன் அவன் எப்பவுமே ஆக்டிவா எனர்ஜியா பிசினஸ்ல இருப்பான் எல்லாத்துலயும் பக்காவா இருப்பான் எடுத்த வேலையை கரெக்டா முடிப்பான் அதே மாதிரி அவன் ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ இப்படி பாக்குறேன் அதுக்கு ஒரு வகையில நீயும் காரணம் என்று சொல்ல நான் எப்படி ஐயா காரணமாக முடியும் என்று சொல்லுகிறார். ரெசார்டுக்கு போயிட்டு வந்ததுக்கப்புறம் சூர்யா கிட்ட ஒரு மாற்றம் தெரியுது என்று சொல்ல அங்கேயும் அவர் குடித்துக்கொண்டு தான் இருந்தாரு என்று சொல்ல அதற்கு அருணாச்சலம் மனசுல இருக்குற பாரம் குறையும்போது வேலையை செய்ய தோனிடும் அதுக்கு நீ தான் காரணம் என்று சொல்லுகிறார்.அதற்கு நந்தினி ஆனால் அம்மா இதெல்லாம் நஷ்டம் வரும்னு சொல்றாங்களே என்று கேட்க நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை அவன் பிசினஸ்ல ஆக்டிவாகனும் எனக்கு அது போதும் என்று சொல்ல, சரிங்க ஐயா உங்களுக்கு காலைல பண்ணி தரேன் என்று சொல்லி சென்று விடுகிறார். மறுபக்கம் மினிஸ்டரை பிசினஸ்மேன் ஒருத்தர் சந்தித்து நீங்கதான் என்னோட பிசினஸ் ஸ்டார்ட் பண்ணீங்க இப்ப நல்லபடியா ஓடிக்கிட்டு இருக்கு என்று சொல்லும்போது அர்ச்சனாவும் வருகிறார் அவரும் வந்து உட்கார்ந்தவுடன் இப்போ ஒரு பிரச்சனை என்று சொல்ல என்ன பிரச்சனை என்று மினிஸ்டர் கேட்க சுந்தரவள்ளியோட சன் சூர்யா தான் பிரச்சனை என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி இவர் டெண்டரில் ஜெயிக்கணும் என்று சொல்ல, அருணாச்சலம் அவருக்கு விபூதி வைத்து விடுகிறார். மறுபக்கம் மினிஸ்டரை சந்தித்த பிசினஸ் மேன் மாதவி மற்றும் அசோகனை சந்தித்து உங்க தம்பி சூர்யா டெண்டர் கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் கோட் பண்ணிருக்காரு என்று எங்களுக்கு தெரியணும் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சுந்தரவள்ளி மொத்தத்துல அவன் ஜெயிக்கணும் நான் தோக்கணும் அதுதானே உங்களுக்கு என்று சொல்லி போட்டி அவ்வளவு கடுமையா இருக்கும் என்று சுந்தரவல்லி சொல்ல அதற்கு சூர்யா போட்டி இருந்தா தானே ஒரு கிக்கே, என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
