அருணாச்சலம் கொடுத்த ஷாக், சுந்தரவல்லி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவை காணாமல் குடும்பத்தினர் பதற்றத்துடன் இருக்க,மினிஸ்டர் குடும்பம் காரில் வந்து இறங்குகிறது. சூர்யா எங்கே என்று கேட்க இங்கதான் பிரண்ட்ஸ் கூட போயிருப்பான் என்று சொல்லி சமாளிக்க, உடனே மினிஸ்டர் மனைவி நான் தான் அப்பவே சொன்னேனே இவன் வேணான்னு அப்பவே கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு சொன்னா, கட்சி மீட்டிங்ல வந்து பிரச்சனை பண்ணா அப்பவே நிறுத்திருக்கலாம். என்று சொல்ல உடனே சுந்தரவல்லி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க என்று சொல்லுகிறார்.

உடனே மினிஸ்டர் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் தெரியுது சூர்யாவிற்கு என் பொண்ணெல்லாம் பிடிக்காமல் கிடையாது ஆனால் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என்று மினிஸ்டர் சொல்லுகிறார்.இது மட்டும் இல்லாமல் உங்க பின்னாடி இருக்கிற மேடை வெறும் கல்யாண மேடை கிடையாது என்னோட அரசியல் மேடை தொடங்குற இடம் அதுதான் அதற்கு ஏதாவது மானம், மரியாதை, கௌரவம் போச்சுன்னா அவ்வளவுதான் என்று மிரட்டும் தோனியில் பேசுகிறார். உடனே அருணாச்சலம் என்ன சம்மந்தி மிரட்டரிங்களா என்று கேட்க அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லுகிறார். உடனே மாதவி இவங்க என்னப்பா சொல்றது நம்மளே இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று சொல்ல உடனே மினிஸ்டர் மனைவி பாருங்க எப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசுறாங்க என்று சொல்லுகிறார். உடனே மினிஸ்டர் நான் என்னைக்கு பத்திரிக்கை திருப்பி வாங்க உங்க வீட்டுக்கு வந்தேனோ அன்னையிலிருந்து இந்த கல்யாணத்தை நிறுத்த நல்லா பேசுறமா பேசாம என் கட்சில வந்து சேர்ந்திரும். என்று என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். சூர்யா உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான் என்று உறுதி அளிக்கிறார்.

அர்ச்சனா சூர்யாவின் கண்ணைக்கட்டி காரில் சர்ப்ரைஸ் என கூட்டி செல்கிறார். எங்கே போறோம் என்று வற்புறுத்தி கேட்டும் சர்ப்ரைஸ் என்று சொல்லி சூர்யாவை அர்ச்சனாவின் வீட்டிற்கு கூட்டி வருகிறார். கண்ணை கட்டிக்கொண்டேன் மேலே கூட்டிச்செல்ல மொட்டை மாடியில் டெக்கரேஷன் செய்து கேக் ஒன்று இருக்கிறது. சூர்யாவின் கண்ணை அவிழ்த்து உடனே சூர்யா எங்க இருக்கோ ஏதோ வீட்டோட மெட்டமாடி மாதிரி இருக்கு என்று சொல்ல உன்னோட மாமியார் வீடு தான் என் வீடு தான் சூர்யா என்று சொல்லுகிறார். உடனே கேக்கை பார்க்க அர்ச்சனாவின் பிறந்தநாள் என தெரிகிறது.

சூர்யா அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இதுக்கு முன்னாடி எல்லாம் என் பிறந்தநாளை ஒரு கூட்டத்த வரவச்சி எங்க அப்பா பிரம்மாண்டமா கொண்டாடுவாரு ஆனா இந்த வாட்டி வேண்டாம் என்று சொல்லிட்டேன் இந்த பிறந்தநாள் நீயும் நானும் மட்டும் தான் இருக்கணும் என்று ஆசைப்பட்டேன் என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க சரி வா கேக் வெட்டலாம் என்று கூட்டிச் செல்கிறார். சூர்யா மெழுகுவர்த்தி ஏத்த அர்ச்சனா கேக் வெட்டி சூர்யாவிற்கு ஊட்டி விடுகிறார் சூர்யாவும் அர்ச்சனாவுக்கு ஊட்டி விடுகிறார். அர்ச்சனா சூர்யாவிடம் நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க சூர்யா உன்ன மாதிரி ஒரு பையன கல்யாணம் பண்ணனும்னு தான் நான் நினைச்சேன் எனக்கு சின்ன வயசுல இருந்து ஆசைப்பட்டது எல்லாமே கிடைச்சிருக்கு அது மாதிரி தான் நீயும், நீயும் எனக்கு கிடைச்சிட்டேன் லவ் யூ சூர்யா என்று கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

மண்டபத்தில் மினிஸ்டர் உட்கார்ந்து கொண்டிருக்க போலீஸ்கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் அவங்க உங்க பையன கொண்டு வந்து விட்டுருவாங்க ஆனா என்னோட மானம் காத்துல பறந்துரும் என்று சொல்ல அவர் கூட இருந்த ஒருவர் நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க தலைவரே அவன் எங்க இருந்தாலும் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல அவனை மினிஸ்டர் அறைந்து அவன் இவனு பேசுற சூர்யா என்னோட மாப்பிள்ளை என்று மிரட்டுகிறார்.

உடனே சுந்தரவல்லி இடம் இதுவரைக்கும் என் பொண்ணு ஆசைப்பட்ட விஷயம் எதுவுமே நான் வாங்கிக் கொடுக்காமல் இருந்தது கிடையாது. இப்போ என் பொண்ணு ஒரு காஸ்ட்லியான பொருள் மேல ஆசைப்பட்டு இருக்கா அதுதான் உங்க பையன் சூர்யா அவன் அவனுக்கு கிடைக்கலன்னா அவ மனசு உடைஞ்சு போயிடுவா, அவ மனசு உடைஞ்சு போனா என்னால தாங்க முடியாது, என்னால தாங்க முடியலன்னா இங்கே நடக்க போறத உங்களால தாங்க முடியாது என்று மீண்டும் மிரட்டும்படி பேசுகிறார். அந்த நேரம் பார்த்து கார் வந்து நிற்க அதில் சூர்யா மற்றும் அர்ச்சனா இறங்கி வருகிறார்கள்.

உள்ளே வந்தால் சூர்யாவிடம் மாதவி என்னடா வந்துட்ட என்று கேட்க மறுபடியும் அச்சச்சோ என்று சொல்லிவிட்டு எங்கடா போயிருந்த என்று கேட்கிறார்கள். உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு போகும்போது உங்க அப்பா கிட்ட சொல்லிட்டு போக மாட்டியா என்று திட்ட அதற்கு அர்ச்சனா ஒரு நிமிஷம் ஆன்ட்டி சூர்யா மேல எந்த தப்பும் இல்லை, தூங்கிக்கிட்டு இருந்த சூர்யாவை நான் தான் வெளிய கூட்டிட்டு போனேன் ஒரு ஸ்பெஷல் செலிப்ரேஷனுக்காக தான் நான் கூட்டிட்டு போனேன் என்று சொல்லி இன்னிக்கு என்னோட பிறந்த நாள் என்றும் சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி சரியென சொல்லிவிட்டு அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறார். சூர்யா சரி நான் போய் என்னோட ஃப்ரெண்ட்ஸ பாக்க போறேன் என்று சொல்ல அர்ச்சனா எனக்கும் இண்ட்ரடியூஸ் பண்ணுங்க என்று கேட்கிறார் சரி வா என்று கூட்டிச் செல்கிறான். உடனே மினிஸ்டர் சுந்தரவல்லி இடம் சாரி சம்மந்தி மன்னிச்சிடுங்க எப்பவுமே அரசியல்ல நான்தான் டுவிஸ்ட் வைப்பேன், ஆனா இன்னைக்கு என் பொண்ணு டுவிஸ்ட் வச்சுட்டா என்று சொல்லிவிட்டு எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க என்று மினிஸ்டரும் மனைவியும் சுந்தரவல்லி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கின்றனர். சுந்தரவள்ளியும் எதுவும் சொல்லாமல் அனைவரும் அங்கிருந்து கிளம்ப மாதவி எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இந்த கல்யாணத்தை நடக்கணும்னு நினைக்கிறீங்களா ஆனால் இந்த மாதவி இருக்கிற வரைக்கும் அது நடக்காது என்று சொல்லுகிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் இவ ஒரு முடிவோட தான் வரா எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி ஆகணும் என்று மாதவி சுரேகாவிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். மேலே போன் பேசிக் கொண்டிருக்கும் அர்ச்சனா இவர்களைப் பார்த்து கீழே வருகிறார்.

எங்க அப்பா உங்க வீட்டு வேலைக்காரங்க கிட்ட மன்னிப்பு கேட்கணுமா எவ்வளவு திமிரு இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் என்று பேச, மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட் ஆவா தெரியவில்லை என்று சுந்தரவல்லி இடம் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update
jothika lakshu

Recent Posts

“நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?” – விமர்சனங்களுக்கு தனுஷின் பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…

2 days ago

ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்னை திரும்பிய அஜித் குமார்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…

2 days ago

இந்த வாரம் OTT-யில் ‘ஹேப்பி ராஜ்’ வெளியீடு!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…

2 days ago

Amarkalam Re-Release Official Trailer

Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas

2 days ago

Breakfast Trailer

Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…

2 days ago

கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’29’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…

2 days ago