Jason Sanjay Attends Lyca Productions Family Wedding Ceremony
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும், இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் குடும்பத் திருமண விழாவில் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்த ஜேசன் சஞ்சய், மணமக்களை வாழ்த்தியதோடு லைகா நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார். ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக லைகா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படமான ‘சிக்மா’ குறித்த புதிய அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் இம்மாதம் 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆக்ஷன், காமெடி, ட்ரெஷர் ஹன்ட் மற்றும் ஹைஸ்ட் அம்சங்கள் கலந்த கமர்ஷியல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், அம்புதாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் அடுத்தடுத்த புரொமோஷன் அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…