தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் விவேக் மற்றும் விஜி இருவரும் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இருக்க, சூர்யா போன் போட்டு நந்தினிக்கு அம்மா போட்டு இருக்கும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே விஜி போன் வாங்கி எப்போ இருந்து என்று கேட்கிறார். காலையில இருந்து தான் என்று சொல்ல இந்த நேரத்துல கூட யாராவது இருக்கணும் நான் வந்துவிடுகிறேன் என சொல்லி அதுக்கு முன்னாடி வீடு சுத்த பத்தமா இருக்கணும் நான்வெஜ் சாப்பிடக்கூடாது குளிர்ச்சியான பொருள் சாப்பிட கொடுங்க. அடிக்கடி இளநீர் கொடுங்க என்று சொல்ல, எந்த நேரத்திலும் நீங்களும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் கோபப்பட்டு எல்லார் மேலயும் வந்துடும் என்று சொல்ல சரி நீ வீட்டுக்கு போமா நான் தேவைப்படுற திங்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன் என சொல்லி போனை வைக்கிறார். மறுபக்கம் ரூமில் மாதவி,சுரேகா இருவரும் அவளை இந்த வீட்ல இருந்து அனுப்பிடுங்க என்று சொல்ல இதெல்லாம் நான் சொல்லாமையா இருப்பேன் அதுதான் நம்ம வீட்ல ஒருத்தன் இருக்கானே அவனால் தான் எல்லாமே அவளை இங்கே ஏதாவது பார்த்துப்பேன்னு சொல்றா அப்படி புடிக்கலனா போய் ஹோட்டல்ல தங்கிக்கோனு சொல்றான் என்று சொல்லுகிறார். என்னால நான் வெஜ் சாப்பிடாம இருக்க முடியாது நான் ஆர்டர் பண்ணியாவது சாப்பிட தான் போறேன் என சுரேகா சொல்லுகிறார்.
அதற்குள் விஜியும் வந்துவிட, சூர்யா நந்தினிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார். விஜி நந்தினியை பார்க்க மேலே போக சூர்யா வாங்கிக் கொண்டு வந்திருக்கும் பழ வகைகளை சுந்தரவல்லி கவனிக்கிறார். உடனே கல்யாணத்திடம் வேப்பிலையை கொடுத்து சணல் கட்டி எல்லா வாசலிலும் கட்டிவிட வேண்டும் என சொல்லுகிறார். பிறகு இதில் இருக்கும் பழங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாட்டி ஜூஸ் போட்டு கொடுக்கணும் என்று சொல்லுகிறார். உடனே சிங்காரம் நான் கிளம்புகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு கிளம்ப, சுந்தரவல்லி இடம் நீங்க சொன்ன மாதிரி நான் கூட்டிட்டு போக தான் பேசினேன் என்று ஆரம்பிக்க சூர்யா சிங்காரத்தை இழுத்து நீங்க யாருக்கும் எதையும் சொல்ல வேணாம் நீங்க தைரியமா போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். விஜி வேப்பிலையில் விசிறி விட, சூர்யா இளநீர் வெட்டி நந்தினியை எழுப்பி கொடுக்கிறார்.
நந்தினி இளநீர் குடிக்கவே கஷ்டப்பட, அம்மா போட்டா இப்படித்தான் அண்ணா இருக்கும். போகப்போக சரியாகிவிடும் என்று சொல்ல விஜி இடம் நான் என்ன பண்ணனும் என்று சூர்யா கேட்க, சிகரெட் பிடிக்க கூடாது சரக்கு அடிக்க கூடாது என்று சொல்ல சூர்யா அதிர்ச்சி அடைகிறார். அதற்கு சூர்யாவும் நந்தினிக்கு சரியாகணும்னா நான் கொஞ்ச நாளைக்கு எல்லாமே விட்டுடுறேன். அவளுக்கு சரியான போதும் என சொல்லுகிறார். கிச்சனில் கல்யாணம் சமைத்துக் கொண்டு இருக்க விஜி வருகிறார். அம்மா போட்ட வீட்ல தாளிப்பு போடக்கூடாது அண்ணா என்று விஜி சொல்ல நானும் கிராமத்திலிருந்து வந்தவன்தான் எனக்கும் அத பத்தி நல்லா தெரியும் என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா நந்தினியை அடித்த விஷயத்தையும் அதற்கான காரணத்தையும் விஜியிடம் சொல்லுகிறார்.
அந்த அதிர்ச்சியில் தான் நந்தினிக்கு அம்மா போட்டு இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் வருகிறார். நந்தினிக்கு இப்ப எப்படி இருக்கு என்று கேட்க இப்பதானே ஆரம்பிச்சுருக்கு கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு தான் குறையும் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் என்னமா இப்படி பயமுறுத்துகிறாய் என்று கேட்க, பயப்பட ஒன்றும் இல்லை சார் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடும் என்று சொல்ல, சரி நீ பாத்துக்கோமா என சொல்லி விட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் நந்தினி எழுந்து உட்கார்ந்து நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன் என சொல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்ல என சூர்யா சொல்லுகிறார். நீங்க இப்ப குடிக்காம இருக்கிற மாதிரி எப்பவுமே குடிக்காம இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி என்னோட தங்கச்சிங்களுக்கு அம்மா போட்டு இருந்த அப்போ அம்மன் துதி பாடினேன். சீக்கிரமா சரியாயிடுச்சு என்று சொல்ல விஜியும் வந்து அந்த புக் பற்றி சொல்லுகிறார். உடனே ரொம்ப நேரம் முழிச்சுக்கிட்டு இருக்காத கொஞ்ச நேரம் படுத்துக்கோ என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினிக்காக அம்மன் துதி பாட மாதவி சுந்தரவல்லி இடம் அவன் இன்னைக்கு பாடுன பாட்ட பார்த்த பாட்டா அவள இந்த வீட்டை விட்டு துரத்துவது ரொம்ப கஷ்டமா தோணுது என்று சொல்லுகிறார் மறுபக்கம் சுந்தரவல்லி இந்த வீட்ல என்ன செய்யணும் செய்யக்கூடாது என்று நான் தான் சொல்லணும் சொல்லுகிறார். நந்தினி நல்லா பாடு நீங்க சார் என்று சொல்ல விஜி இந்த மாதிரி ஒரு அன்பான ஆள் பக்கத்துல இருக்கும்போது நந்தினிக்கு என்ன கவலை என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
