Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருணாச்சலம் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 13-08-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி யாரோ பெரிய ஆள் நம்ம வீட்டுக்கு வர போறாங்க போல என்று கேட்க இரண்டு பேரும் வரும்போது பாத்துக்கோங்க என்று சொல்லி விட்டு, டைனிங் டேபிள் ஏரியாவுல தான் சாமி கும்பிடுற ஏற்பாடு பண்ணனும் அதை எல்லாம் கிளீன் பண்ணி சுத்தம் பண்ணுங்க என்று சொல்லி அனுப்புகிறார். மறுபக்கம் நந்தினி மற்றும் கல்யாணம் இருவரும் வரலட்சுமி பூஜைக்கான ஏற்பாடுகளையும் டெக்ரேசன் களையும் செய்து கொண்டு இருக்க இருவரும் வந்து பார்த்து இவ பண்ணதே சந்தோஷம் இல்லன்னா நம்மதா செஞ்சி இருக்கணும் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி வந்து நீங்க செய்யாம எதுக்கு வேலைக்காரிய செய்ய சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறார். நீ எங்க வெளிய போற என்று சுரேகாவை கேட்க சினிமாவுக்கு போகப் போகும் விஷயத்தை சொல்ல எங்கேயும் போகக்கூடாது என சுந்தரவல்லி சொல்லி விடுகிறார்.

மறுபக்கம் சுரேகா மாதவியிடம் நாம வேணா ஏதாவது செஞ்சு இதை நடக்க விடாமல் பண்ணலாமா என்று கேட்க பண்ணலாம்னு தான் ஆனால் தேவை இல்லாமல் சூர்யா கிட்ட மாட்டிக்க கூடாது என்று சொல்லி விட்டு இந்த தடவை ஐடியாவை பக்காவா போடலாம் என்று சொல்லி செல்கின்றனர். சுந்தரவல்லி இருவரையும் தூங்க போக சொல்ல சூர்யா வந்து எதுக்காக இவ்வளவு டெக்கரேஷன் பண்ணி இருக்கீங்க என்று கேட்க அருணாச்சலம் வரலட்சுமி நோன்பு பண்ண போறோம் என்று சொல்ல எனக்கு தெரியாது டாடி என்று சொல்ல, அருணாச்சலம் வரலட்சுமி நோன்பு கும்பிடுவதற்கான காரணத்தை சொல்லுகிறார். சரி சந்தோஷமா கும்பிடுங்க என்று சொல்லிவிட்டு போக அருணாச்சலம் நீயும் இருக்கனும் என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா பூஜை எல்லாம் போர் டாடி என்று சொல்ல, அதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும் அதுவும் இல்லாம நீ நாளைக்கு குடிக்க கூடாது என்று சொல்ல அதெல்லாம் முடியாது என்று சூர்யா போக உடனே சுந்தரவல்லி அவன் தான் போறான்ல விடுங்க என்று சொல்லுகிறார்.

மீண்டும் வந்த சூர்யா நான் இருந்தா தாய்குலத்துக்கு சந்தோஷம் இல்லனா நான் கண்டிப்பா வருவேன் என சொல்லி விட்டு வந்து விடுகிறார்.சூர்யா சந்தோஷமாக இருக்க என்ன விஷயம் என்று நந்தினி கேட்கிறார்.டாடி முதல்ல வரலட்சுமி நோன்பு வீட்ல இருக்கணும்னு சொன்னாரு ஆனால் அத பத்தி பெருசா எடுத்துக்கல ஆனா தாய் குலம் டாடி கிட்ட அவன் இங்க இருக்கக்கூடாது என்று பேசியதை கேட்ட பிறகு நான் எப்படி இல்லாம இருக்க முடியும் என்று சொல்ல வரலட்சுமி நோன்பு நான் உனக்கு என்னனு தெரியுமா நந்தினி என்று கேட்க உங்களுக்கு தெரியாதா சார் என்று கேட்கிறார். சுமங்கலிகள் ஒன்று சேர்ந்து புருஷனோட உடல் ஆரோக்கியத்திற்காகவும் பணம், செல்வாக்கோட வாழ வேண்டிக் கொள்வார்கள் என்று சொல்லுகிறார். உனக்கு இதெல்லாம் தெரியுமா நந்தினி என்று சொல்ல எனக்கே முதல்ல தெரியாது எங்க ஊர்ல பேங்க்ல வேலை செய்ற ஒருத்தவங்க இதை பண்ணி நான் பார்த்திருக்க என்று சொல்லுகிறார். நீ சொல்றத பார்த்தா இது லேடிஸ் விஷயமா இருக்கு இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு எப்படி தோணுச்சு என்று சொல்ல இப்படி எல்லாம் சொல்லாதீங்க சார் உங்களுக்கு விஷயம் தெரியாதா உங்க வீட்டுக்கு ஒரு முருகர் கோவில் சாமியார் வருவார்ல்ல அவர்தான் இந்த நோன்பை செய்ய சொல்லி இருக்கிறார் என்று சொல்லுகிறார்.

ஓ இதுதான் விஷயமா? இதுக்கு தான் தாய்க்குலம் என்ன வீட்ல இருக்க வேண்டான்னு சொன்னாங்களா என்று கேட்ட, அப்போ அருணாச்சலம் ஐயா சொன்னா நீங்க பூஜையில் இருப்பீங்களா? என்று கேட்க கண்டிப்பா இதுல என்ன சந்தேகம் என்று சூர்யா சொல்லிவிட்டு செல்கிறார். உடனே நந்தினி நாளைக்கு என்ன நடக்கப்போகுதோ தெரியலையே என்று யோசித்து விட்டு கீழே இறங்கி வர சுந்தரவல்லி கூப்பிடுகிறார். என்கிட்ட எத்தனையோ வாட்டி இந்த வீட்டை விட்டு போனு சொல்லிட்ட நீ கேட்கவே மாட்டேங்குற என்று சொல்ல நந்தினி பேச வரும்போது நான் பேசி முடிக்கிற வரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என்று சொல்லுகிறார். நாளைக்கு இந்த வீட்ல என்ன நடக்கப் போகுதுன்னு உனக்கு தெரியுமா? சுமங்கலிகள் பண்ண போற பூஜை இது, நல்ல நேரம் பார்த்து அருந்ததி பார்த்து அம்மி மிதிச்சு கல்யாணம் பண்ணவங்கதான் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

நானும் என்னோட பொண்ணும்தான் கலந்து கொள்ள வேண்டும்.உனக்கு தகுதி இருக்கா இது சொன்னா என் பையன் புரிஞ்சுக்க மாட்டான் என் பொண்டாட்டியும் சுமங்கலி தான் சொல்லுவா என்று சொல்ல நந்தினி கண்கலங்குகிறார். எத்தனை வாட்டி இந்த வீட்ல எனக்கும் என் புள்ளைக்கும் சண்டை வரும் என்று கோபப்பட அழாத நடிச்சு நடிச்சு தான் என் பையனை ஏமாத்தி இருக்க இப்போ என்னையும் ஏமாற்ற பார்க்கிறாயா? இந்த வீட்டை விட்டு ஒழிஞ்சு போ. நாளைக்கு ஒரு நாள் ஆவது என் மூஞ்சில முழிக்காமல் எங்கேயாவது போய் தொலை என்று திட்டி அனுப்புகிறார். ரூமுக்கு வந்த நந்தினி சுந்தரவல்லி பேசியதை நினைத்து பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு நந்தினி ரூம்ல இருக்கலா என்று கேட்க கிச்சன்ல இருப்பா என்று சொல்லுகிறார் அவ இல்ல போன் போட்டாலும் சுவிட்ச் ஆப்னு வருது என்று சொல்ல சூர்யா அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் நந்தினியை ரவுடிகள் துரத்திக் கொண்டு வர நந்தினி ஒரு கடையில் உள்ளே வந்து என்னை துரத்திகிட்டு வராங்க என்று சொல்லுகிறார். அசோகன் நந்தினியை சத்தமில்லாமல் துரத்தி விட்டுட்டீங்க போல என்று சொல்ல சுரேகா எங்களுக்கு தெரியும் இது உங்க வேலை தானே என்று சுந்தரவல்லியை கேட்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 13-08-25
Moondru Mudichu Serial Promo Update 13-08-25