தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் ரஞ்சிதா மற்றும் நந்தினி தோப்பை பார்க்க சூர்யாவுடன் வர அங்கு சுதாகர் வருகிறார். என்ன இந்த பக்கம் என்று கேட்க தோப்பு பாக்க வந்தோம் என்று சொல்லுகிறார். உடனே சுதாகர் பெரிய பண்ணையாறு தோப்பு தொடர்பை பார்க்க வந்திருக்கா என்று கிண்டல் அடிக்கிறார். உடனே சூர்யாவை கூப்பிட்டுக் கொண்டு போகலாம் சார் என்று சொல்ல ஒரு நிமிஷம் நந்தினி என்று சூர்யா சுதாகரிடம் பேசுகிறார்.
நந்தினி வீட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்க பக்கத்திலிருந்து உட்கார்ந்த அம்மாச்சி கல்யாணம் ஆகி இவ்வளவு நாளாவது ஏதாவது விசேஷம் இருக்காமா என்று கேட்க உடனே கோபப்பட்ட நந்தினி அப்படியே போட்டேன்னுவை மண்ட ரெண்டா உடைஞ்சிடும் என்று சொல்ல சிங்காரம் இதை கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
