Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

moondru mudichu serial promo update 12-10-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுரேகா அம்மாவுக்கு முதல் தண்ணி ஊத்தியாச்சு ரூம் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு அவங்க படுத்துக்கிட்டு இருக்காங்க இப்ப அம்மா போய் பாக்கலாம் என்று சொல்ல நந்தினி கையில் இருக்கும் மஞ்சள் துணியை பார்த்து இது சுரேகாவுக்காக ரெடி பண்ணதில்லம்மா என்று சொல்ல நான் கட்டிவிடலாம் என்று தான் நினைச்சேன் ஆனா அவங்க ஒத்துக்கல என்று சொல்ல சரி நான் பேசுறேன் என சொல்லுகிறார். வேண்டாயா அவங்க வேணான்னு மட்டும் சொல்லல தூக்கி எறிஞ்சிட்டாங்க அதனாலதான் நான் கட்டிக்கிட்டேன் என சொல்லுகிறார். மூணு தண்ணி ஊத்துனதுக்கு அப்புறம் நானே கோவில் உண்டியலில் போட்டு விடுறேன் என்று சொல்ல, இவ கொடுப்பதெல்லாம் நாங்க எதுக்கு கட்டிக்கணும் என்று சுந்தரவல்லி சொல்ல, கரெக்டு தான் உன் பொண்ணு உன்ன மாதிரி தானே இருப்பா என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே சூர்யா வந்து எதுக்காக இவங்களுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க நீயே வாண்டடா செஞ்சு எதுக்கு அசிங்கப்படுற இவங்க யாரும் மத்தவங்கள பத்தி யோசிக்க மாட்டாங்க இப்போ சுரேகாவுக்கு தண்ணி ஊத்துனா போங்க பொண்டாட்டிய போய் ஊத்த சொல்ல வேண்டியது தானே எதுக்கு என் பொண்டாட்டிய ஊத்த சொன்னாங்க அதுக்கு இனிக்குது இதுக்கு கசக்குதா என்று கேட்கிறார்.

நீ இவங்க கிட்ட நூறு வாட்டி இரக்கத்தை காட்டினாலும் அவங்க வன்மத்தை தான் காட்டுவாங்க என்று சொல்லுகிறார். உடனே மாதவி பதற்றமாக ஓடிவந்து சுரேகா கை வலியில் பயங்கரமாக அழுகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்க அனைவரும் பதறிப் போய் ஓட சூர்யா நந்தினியை தடுத்து நிறுத்தி இப்பதானே இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டு இருந்தேன் உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா எனக்கு வந்து காபி போடு என்று சொல்லி கிச்சனுக்கு அழைத்து சென்று விடுகிறார். சுரேகா வலியில் துடிக்க குடும்பத்தினர் என்னாச்சு என்று கேட்க இந்த கை ரொம்ப வலிக்குது என வலியில் துடிக்கிறார். சுந்தரவல்லி வேறு வழி இல்லாமல் டாக்டருக்கு போன் போட்டு வர சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யாவிடம் நந்தினி எதுக்காக சார் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அவ நடந்துக்கிட்டதற்கான பதில் தான் இது என்று சொல்லுகிறார். இப்போ உன் மனசு அங்கேயே இருக்குமே அப்படித்தானே என்று கேட்க, ஆமா சார் உங்களுக்கு ஏன் தோணல என்று கேட்க அவ பண்ண விஷயம் அவளை பாதித்திருக்கு நீ அங்க போகக்கூடாது ரூம்லயே இருக்கணும் என்று சொல்லுகிறார். எனக்கு உன்ன பத்தி தெரியும் ஆனால் நீ ரூம விட்டு வெளியே போகக்கூடாது போன அவ்வளவுதான்னு சொல்லிவிட்டு சூர்யா பாத்ரூமுக்கு போக நந்தினி ரூமில் இருந்து எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருக்க டாக்டர் போகிறார்.

உடனே சூர்யா வரும் சத்தம் கேட்டு தலை வாருவது போல கண்ணாடி முன் நின்று ஆக்சன் கொடுக்க சூர்யா கண்டுபிடித்து விடுகிறார். நீ இப்படியே இருந்தா எங்க அமைதியா இருக்க மாட்ட நீ போய் எனக்கு டிபன் செய் உன் கால் நேரா கிச்சனுக்கு தான் போகணும் என்று சூர்யா நந்தினியை சொல்லி அனுப்ப டாக்டர் சுரேகா கையை செக் பண்ணி பார்க்கிறார். ஆனால் சுரேகா வலியில் அதிகமாக துடிக்க அருணாச்சலம் அம்மா போட்டாள் இது மாதிரி கை வலிக்குமா என்று கேட்க அதனால் தான் இப்படி இருக்காது என்று சொல்லுகிறார். எனக்கே இதுனால எதுக்கு வலிக்குதுன்னு தெரியல. நான் இப்போதைக்கு டேப்லெட் எழுதி கொடுக்கிறேன் அத குடுங்க சரியாகவில்லை என்றால் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.

டாக்டர் போன உடன் மாதவி எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு இது மாதிரி வலிக்குதுன்னு சொல்லி கால் எடுத்துட்டாங்க என்று சொல்ல உடனே சுரேகா அப்போ என்னோட கை போயிடுமா என்று பயப்பட சுந்தரவல்லி மற்றும் அருணாச்சலம் இருவரும் திட்டுகின்றனர். இந்த டேப்லெட் போட்டு பாக்கலாம் கேக்கல நான் வேற ஒரு டாக்டர் கிட்ட போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க நந்தினி வந்து ஒரு விஷயம் சொல்லணும் என சொல்லுகிறார். என்னை யாரும் தப்பா நினைக்க வேண்டாம் இந்த மஞ்ச கயிறு சுரேகா அம்மாவுக்காக தான் ரெடி பண்ணி கட்டுன அதை கட்ட வந்தபோது அவங்க வேணான்னு சொல்லி தூக்கி விசிறி அடிச்சிட்டாங்க இப்போ கை வலிக்கிறதுக்கான காரணம் அதுதான்னு எனக்கு சந்தேகமா இருக்கு என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா தள்ளாடி கொண்டுவர குடிச்சி இருக்கீங்களா என்று நந்தினி கேட்கிறார் இல்லை என்று சொல்ல நான் வேணா ஊதி காட்டவா என்று கூறி விட என்ன வேற வருது என்று கேட்கிறார் உடனே நந்தினிக்கு சாப்பாடு ஊட்டி விட நந்தினிக்கு சந்தேகம் வருகிறது. நந்தினியை ஏமாற்றி எப்படியாவது சரக்கை குடிக்க வேண்டும் என்று சூர்யா பார்த்துக்கொண்டே இருக்கிறார். நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல நீங்க குடிச்சா நானும் குடிப்பேன் என்று சொல்ல இதை சொல்லி சொல்லியே பிளாக்மெயில் பண்றா என சொல்லிவிட்டு சூர்யா தூங்கி விடுகிறார் பிறகு கொஞ்ச நேரத்தில் நந்தினியை கவனித்து விட்டு நந்தினி தூங்கிக் கொண்டிருப்பதால் சூர்யா பாட்டில் பக்கத்தில் போக சூர்யா காலில் துணி கட்டி வைத்திருந்த நந்தினி இழுத்து விடுகிறார் இதனால் சூர்யா அதிர்ச்சி அடைகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 12-10-25

moondru mudichu serial promo update 12-10-25