moondru mudichu serial promo update 12-09-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் இந்த நேரத்துல லேடிஸ் யாராவது இருக்கணும் நான் நந்தினியோட பாட்டியை வர சொல்றேன் என அருணாச்சலம் சொல்லுகிறார் . உடனே வெளியில் வந்து அருணாச்சலம் சிங்காரத்திற்கு போன் போட்டு நலம் விசாரித்து விட்டு நந்தினிக்கு அம்மா போட்டு இருக்கு என்ற விஷயத்தை சொல்லுகிறார். உடனே பதறி போன சிங்காரம் இந்த நேரம் பார்த்து அம்மா வேற ஊருக்கு போயிருக்காங்களே என்று சொல்லுகிறார். பயப்படாத சிங்காரம் நாங்க பார்த்துகிறோம் என்று சொல்ல இருந்தாலும் நான் ஒருவாட்டி வந்து பாத்துக்குறேன் ஐயா என்று சொல்ல சரி வா என்று சொல்லி ஃபோனை வைக்க மறுப்பக்கம் சூர்யா வேப்பிலைகளை ஒரு பையில் எடுத்து வந்து நந்தினியை சுத்தி வைக்கிறார். உடனே நந்தினி நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன் என சொல்ல நீ எனக்கு எத்தனை வாட்டி உடம்புக்கு முடியாத அப்போ பார்த்திருக்க இப்போ நான் பண்ண கூடாதா என்று கேட்கிறார்.
என்னால உங்களை கஷ்டப்படுத்த முடியாது எங்க அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்லுங்க அங்க மூணு தண்ணி முடிஞ்ச உடனே நான் வரேன் என்று சொல்ல, அதெல்லாம் ஒன்னும் வேணாம் அங்க போனா உன்னை யாரு பார்த்துப்பாங்க இங்க நான் ஏதாவது உனக்கு ஒண்ணுன்னா நான் பண்ணுவேன் நீ எதுவும் பேசாமல் படுத்துக்கொள் என மெதுவாக படுக்க வைக்கிறார். அம்மா போட்ட வீட்ல நான் வெஜ் செய்யக்கூடாது, சுத்தபத்தமா இருக்கணும் இல்லன்னா மகமாய்க்கு கோபம் வந்துவிடும் எனக்கு காலத்துக்கும் சரியாகாது என்று சொல்ல சூர்யா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என சொல்லி தூங்க வைத்துவிட்டு வேப்பிலையில் விசிறி விடுகிறார். சிங்காரம் வீட்டுக்கு வர, சுந்தரவல்லி வெளியேவே நிறுத்தி உன் பொண்ணுக்கு அம்மா போட்டு இருந்தா உன் வீட்டுக்கு போக வேண்டியது தானே, எதுக்கு இங்க இருக்கா அவ கூட சேர்ந்து நாங்க பத்திய சாப்பாடு சாப்பிடனுமா எங்களுக்கு என்ன தலை எழுத்தா என்று கேட்கிறார். நீ அவளைப் பார்த்தால் மட்டும் போதாது கையோடு அவளை கூட்டிட்டு போ என்று சொல்லி கோபப்படுகிறார்.
உடனே அருணாச்சலம் வந்து இப்ப எதுக்கு இறக்கமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கா என்று கேட்கிறார். நான் கரெக்டா தான் பேசுறேன் என சொல்லிவிட்டு சிங்காரத்திடம் உன் பொண்ணு மாடில தான் இருக்கா கையோடு பார்த்துவிட்டு அவளை கூட்டிட்டு போ என்று சொல்லி அனுப்புகிறார். இப்ப நான் எடுத்துக்கிறது தான் முடிவு நடுவுல ஏதாவது பேசணும்னா நடக்கிறதே வேற என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். உடனே மேலே வந்த சிங்காரம் நந்தினியை பார்த்து கண்கலங்கி அழுகிறார். சூர்யா நாங்கலாம் இருக்கிற வரைக்கும் நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்லுகிறார். ஆனாலும் சிங்காரம் கண் கலங்க நந்தினி கவலைப்படாதப்பா என்று சொல்ல எனக்கு அதைப் பற்றி கவலை இல்லைம்மா அம்மா போட்டவங்கள வெயில்ல கூட்டிட்டு போகக்கூடாது ஆனா சுந்தரவல்லி அம்மா உன்னை கூட்டிட்டு போக சொல்றாங்க நான் என்னம்மா பண்ணுவேன் என்று சொல்லி அழுகிறார்.
நந்தினியும் சுந்தரவல்லி அம்மா சொன்ன மாதிரி நாங்க கிளம்புறோம் என்று சொல்லுகிறார். நீங்க போய் ஒரு ஆட்டோ புடிங்கப்பா நம்ப போகலாம் என்று சொல்ல சூர்யா நான் பேசிக்கிட்டு தானே இருக்கேன் அதுக்குள்ள நீ ஆட்டோ புடின்னு சொல்ற என்று சொல்லி கோபப்படுகிறார். அவ எங்கேயும் போகக்கூடாது இங்கே தான் இருக்கணும் எனக்கு இருக்கிற உரிமை அவளுக்கும் இருக்கு என்று சொல்லுகிறார். நீ ஒன்னும் இந்த வீட்ல யாரோ கிடையாது என்னோட பொண்டாட்டி உன்னை யாரும் எதுவும் சொல்ல விட மாட்டேன் என்று சொல்லுகிறார். உடனே சிங்காரத்திடம் என்னோட தாய்க்குலத்தை பத்தி கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கீழே வருகிறார். டாடி ஒரு முக்கியமான விஷயம் நந்தினிக்கு அம்மா போட்ட விஷயம் எல்லாருக்கும் தெரியும் அவளை கூட்டிட்டு போனும்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்.
நந்தினிக்கு உடம்பு சரி ஆகற வரைக்கும் இங்கதான் இருப்பா, அத சொல்றதுக்கு இந்த வீட்ல யாருக்கும் உரிமை கிடையாது என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி கோபப்பட்டு ஃபர்ஸ்ட் ஃப்ளோர் என்ன வாடகை விட்டு இருக்கேனா நோயாளிகளை வச்சுக்கிட்டு ஆட்டம் போட்டு கிட்டு இருக்கான் என்று கோபப்பட, உடனே சூர்யா நந்தினி இங்கதான் இருப்பா அவளுக்கு நான் தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கப் போறேன் இந்த வீட்ல யாரும் நான் வெஜ் சாப்பிடக்கூடாது எல்லாரும் சுத்த பத்தமா இருக்கணும் என்று சொல்லுகிறார். அப்படி நான்வெஜ் சாப்பிடாம இருக்க முடியாதுன்னா அவங்கள போய் நந்தினிக்கு சரியாகிற வரைக்கும் லாட்ஜ்ல போய் தங்க சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட, சுந்தரவல்லியும் கோபமாக சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினியை பார்க்க வந்த விஜி சூர்யா விடம் அசைவம் சமைக்கவும் சாப்பிடவும் கூடாது என்று சொல்லுகிறார். சூர்யா அப்புறம் என கேட்க குடியை தொட கூடாது என்று சொன்னவுடன் அதிர்ச்சி அடைகிறார். அவளுக்குதான் அம்மா போட்டுருக்குன்னு தெரியுது இல்ல அப்புறம் எதுக்கு அவளை இந்த வீட்ல வெச்சி இருக்கனும் என மாதவி கேட்கிறார்.
இதுக்காகவாவது நீங்க குடிக்காம இருக்கீங்களே முடிஞ்சா மொத்தமாவும் குடிக்காம இருங்க என்று நந்தினி சொல்ல,சூர்யா யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது?என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…