Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

moondru mudichu serial promo update 12-03-26

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வர கல்யாணம் அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார் மேலே சுரேகாவும் ரஞ்சித்தும் ஒரே பத்திரிக்கையை தேர்வு செய்ய குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் அந்த நேரம் பார்த்து கல்யாணம் வந்து போலீஸ் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். குடும்பத்தினர் கீழேவர சுந்தரவல்லி என்ன விஷயம் என்று கேட்கிறார். ஹேமா விஷயம் பற்றி பேசணும் என்று சொல்ல அந்தப் பொண்ணு எரிச்சி குப்பை கிடங்கில் போட்டு இருக்காங்க என்று சொல்ல சுரேகா கதறி அழுகிறார். அந்த பொண்ணு கடைசியாக இங்க இருந்ததால என்கொயரிக்கு வந்து இருக்கும் என்று சொல்ல, சூர்யா வந்து விசாரிக்க சூர்யா அதிர்ச்சி அடைகிறார். நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும் என்று சொல்லுகிறார். பிறகு சுரேகா நடந்த விஷயங்களை போலீசிடன் சொல்ல, அதுக்கப்புறம் நீங்க ஹேமாவ தேடலையா என்று கேட்க அதுக்குள்ளார இந்த டாடி மேல ஒரு ஃபால்ஸ் கம்ப்ளைன்ட் வந்தது அதனால எங்களால கவனிக்க முடியல என்று சொல்ல அதுக்கப்புறம் ஏமாவ யாரும் பாக்கலையா என்று கேட்பார் ரஞ்சித் நான் பார்த்தேன் என்று சொல்லுகிறார்.

அந்தப் பொண்ணு ரூமில் இருந்து கோபமா யார்கிட்டயும் போன்ல பேசிக்கொண்டு வெளியே போச்சு என்று சொல்ல வேறு ஏதாவது நோட் பண்ணிங்களா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார். உடனே போலீஸ் அங்கிருந்து கிளம்பி விட, சூர்யா ரூமில் டென்ஷனாக இருக்க நந்தினி வந்து பேசுகிறார். பாவம் அந்த பொண்ணு ஹேமா அந்தப் பொண்ண துடிக்க துடிக்க கொ* பண்ணி எரிச்சி இருக்காங்க என்று சொல்ல, கண்டிப்பா உங்களை கண்டுபிடிச்சிடலாம் என்று சூர்யா சொல்லுகிறார். அந்தப் பொண்ணோட முகம் என் கண் முன்னால் இருக்கு என்று வருத்தப்பட்டு பேச, உடனே சூர்யா நீ எனக்காக ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சுரேகா ஹேமாவை நினைத்து கண்கலங்கி அழுது கொண்டே இருக்க மாதவியும் அசோகனும் ஆறுதல் சொல்லுகின்றனர். எனக்கு ரொம்ப கில்டா இருக்கு அவளை நான் ரொம்ப கம்பல் பண்ணி வரவைச்சேன் என்று சொல்லி அழுகிறார். மறுநாள் காலையில் நந்தினி கல்யாணத்தை கூட்டிட்டு கொண்டு இருக்க அவர் வெளியில் உட்கார்ந்து இது யாரோட செருப்பாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்க ரஞ்சித் கவனிக்கிறார்.

நந்தினி வெளியில் வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க இந்த செருப்பு யாருடையதாய் இருக்கும் என்று கேட்ட ரஞ்சித் அதிர்ச்சி அடைகிறார். நந்தினி சுத்திப்பார்க்க இன்னொரு செருப்பும் இருக்கிறது என்று சொல்லி காட்டி இந்த செருப்பை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று யோசித்துப் பார்க்க அப்போதுதான் ஹேமாவிடம் பேசியதும் அது ஹேமாவின் செருப்பு என நந்தினிக்கு ஞாபகம் வருகிறது. அந்த நேரம் பார்த்து சூர்யா வர நந்தினி இது ஹேமாவோட செப்பல் என்று சொல்லுகிறார். ரஞ்சித் கோவமா போனதா சொன்னான் ஆனா செப்பல் போடாம எப்படி போயிருக்கும் இந்த செருப்பை கைப்படாமல் ஒரு கேரி பேக்ல போட்டு வைங்க இது ஒரு முக்கியமான எவிடன்ஸ் ஆயிருக்கும் என்று சூர்யா சொல்லுகிறார். மறுபக்கம் ரஞ்சித் ரூமில் டென்ஷன் ஆகி அவருக்கு அவரையே திட்டிக் கொண்டிருக்கிறார். எப்படியாவது அந்த ஆதாரத்தை அழித்துவிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்க, ஹரிதா வந்து நீ அந்த மர்டர் விஷயத்தை கவனிச்சியா அந்த பொண்ணு எரிச்ச இடத்துல நீ வச்சுக்கிட்டு இருக்கிற மாதிரியே ஒரு ட்ராவல் பேக் அதே கலர்ல இருக்கு என்று சொல்ல, அப்போ நான் *லை பண்ணனு சொல்றியா என்று கேட்க உனக்கு கரப்பான் பூச்சியே சாவடிக்க தெரியாது போய் வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி விடுகிறார். மறுபக்கம் நந்தினி இந்த செருப்பை மாடி பக்கம் வச்சு விடலாம் என்று முடிவெடுத்து வைத்துவிட பிறகு ரஞ்சித் வெளியில் வருவதை கவனித்து விட்டு போய் முதல்ல ரஞ்சித் சார் ரூமை துடைத்துவிட்டு வந்துவிடலாம் என செல்ல, மறுபக்கம் ரஞ்சித் வெளியில் அணைத்து இடங்களிலும் செப்பலை தேடுகிறார்.

அந்த நேரம் பார்த்து ரஞ்சித்தின் அப்பா அம்மா வந்து இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க சும்மா தலை வலிக்குது அதனால நின்னுகிட்டு இருக்கேன் என்று சொல்ல, ரூமுக்கு சென்ற நந்தினி துணியெல்லாம் பெட் மாதிரி இருப்பதால் ரஞ்சித்திடம் வந்து அதை எங்கே வைப்பது என்று கேட்க என்னோட ரூமை கிளீன் பண்ண வேணாம் நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி விடுகிறார். உடனே அதே கலர்ல பேக் வாங்கி ஆகணும் என்று முடிவெடுத்து வெளியில் செல்கிறார். சுந்தரவல்லி அருணாச்சலத்தை நினைத்து யோசித்துக் கொண்டிருக்க மேனேஜர் ஃபோன் போட்டு மன்த்லி போர்ட் மீட்டிங் இருக்கு என்று சொல்ல, நீங்களே எல்லாத்தையும் சப்மிட் பண்ணிடுங்க எதுவா இருந்தாலும் நான் அடுத்த மாசம் பேசிக்கிறேன் என்று சொல்ல நாவேனும்னா சூர்யா சாருக்கு போன் பண்ணி வர சொல்லவா என்று சொல்ல சுந்தரவல்லி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை அவனுக்கு வேண்டாம் போன் பண்ணி கேட்டு பாருங்க என்று சொல்லுகிறார். இதையெல்லாம் ஹரிதா கவனித்து விட்டு சுந்தரவல்லி இடம் வந்து பேசுகிறார். மறுபக்கம் சூர்யா விவேக்கை சந்தித்து வீட்டில் நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஆஃபீஸிலிருந்து மேனேஜர் ஃபோன் போர்டி மீட்டிங் இருக்கும் விஷயத்தை சொல்லுகிறார். என்னைக்கு என்று கேட்க இன்னும் அரை மணி நேரத்துல நடக்கப்போகுது என்று சொன்னவுடன் சூர்யா இத மாத்த முடியாதா என்று கேட்க முடியாது என்று சொன்னவுடன் வேறு வழி இல்லாமல் சரி நானே வரேன் என்று சொல்லி காரில் கிளம்புகிறார் அந்த நேரம் பார்த்து எதிரில் பைக்கில் ஒருவர் ஸ்லோவாக போக சூர்யா தொடர்ந்து ஹாரன் நடித்துக் கொண்டே இருக்கிறார். அப்பொழுதும் அந்த நபர் நகராமல் இருக்க சூர்யா ஒரு பக்கம் டென்ஷனில் இருக்க மறுப்பக்கம் விவேக் ரஞ்சித் பையுடன் வெளியில் வருவதை பார்த்து சூர்யாவிடம் சொல்லுகிறார் சூர்யாவும் ரஞ்சித்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial promo update 12-03-26