Moondru Mudichu Serial Promo Update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லியிடம் அருணாச்சலம் கோபமாக பேசிவிட்டு கிளம்புகிறார். நந்தினி சிங்காரத்திடம் என்ன மன்னிச்சிடுப்பா என்னால தான் உனக்கு இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல, இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லம்மா எச்ச இலை எடுத்து எல்லாம் பார்சல் எடுத்துட்டு வருவேன் ஆனால் பார்சல் எதுக்கு வேணும்னா சாப்பிட்டு போ என்று சொல்லுவாங்க என்றெல்லாம் சொல்லி நந்தினியிடம் அழுகிறார். இங்கே இருக்கிறவங்க மனுஷங்களை எல்லாம் பார்க்கலப்பா டிரஸ் தான் பாக்குறாங்க என்று சிங்காரத்திடம் சொல்லி வருத்தப்படுகிறார். உடனே நந்தினி டீயும் பண்ணும் எடுத்துக் கொண்டு வந்து சிங்காரத்திற்கு ஊட்டி விட அவர் போதும் என்று சொல்லிவிடுகிறார். நீ ஒன்னும் கஷ்டப்படாத அப்பா சூர்யா சாரோட கல்யாணம் முடிஞ்ச உடனே நம்போ கிளம்பிடலாம் என்று சொல்ல நானும் அதுக்காக தான்மா காத்துகிட்டு இருக்கேன். பெரிய ஐயாவோட முகத்தில் இருக்கிற சந்தோஷத்தை பாக்கணும் என்று சொல்லிவிட்டு நீ போய் வேலையை பாருமா இப்போ எனக்கு பரவால்ல என்று சொல்லுகிறார்.
பிறகு சுரேகா மற்றும் மாதவி கணவரிடம் பேசுகின்றனர் எதனா ஒரு பிளான் பண்ண சொன்னா எதுவும் பண்ணாம இப்படி சுத்திக்கிட்டு இருக்க என்று சொல்லி திட்டுகிறார். மாதவியின் கணவர் இசை கச்சேரியில் ஏறி நின்று காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என்ற பாடலை பாட அவருக்கு ஒரு லெட்டர் கொடுக்கின்றனர். அதில் உங்கள் பாடலில் நான் மயங்கி விட்டேன் என் பெயர் சொப்பன சுந்தரி என்றும் அதில் நம்பர் இருக்கிறது அதற்கு போன் பண்ணு மாறும் எழுதியிருக்கிறது. உடனே அங்கிருந்து கிளம்பி அந்த நம்பருக்கு போன் பண்ண மாதவியின் கணவர் நந்தினியின் மாமா போனை எடுக்கிறார். அவர்தான் போன் போட்டுள்ளார். மாதவியின் கணவரிடம் லேடிஸ் வாய்ஸில் பேசி அவரை வெளியில் வர வைக்கிறார். நீங்க பாடுன பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது அதுக்காக உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும் வாங்க என்று செல்லமாக கூப்பிட அவரும் படிக்கட்டில் இறங்கி வருகிறார் அப்போது உடனே நில்லுங்க என்று சொல்லி கைக்குட்டையில் கண்ணை கட்ட சொல்லுகிறார்.
ஏன் கண்ண கட்டணும் என்று கேட்க, சர்ப்ரைஸ்னா அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி கீழே வரவைத்து மூன்று தடவை நின்ற இடத்திலிருந்து சுற்ற வைக்கிறார். பிறகு அப்படியே பின்னாடி போங்க என்று சொல்ல அங்கு நாலு பேர் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.அங்கு சென்று வலது புறமாக திரும்பி முத்தம் கொடுங்கள் என்று சொல்ல குடித்து கொண்டிருக்கும் ஒரு நபருக்கு முத்தம் கொடுத்து விடுகிறார் மாதவியின் கணவர். அங்கு இருப்பவர்கள் அவரை போட்டு அடிக்க உடனே நந்தினியின் மாமாவும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து அவரை அடித்து விடுகிறார்.
எல்லாரும் அடித்து விட்டு ஓடி விட மாதவியின் கணவர் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு நிற்கிறார். பிறகு சிறப்பு விருந்தினராக கானா பாலா கலந்துகொண்டு பாட்டு ஒன்றை பாடுகிறார். மண்டபத்தில் இருக்கும் அனைவரும் உற்சாகமாகி பாட்டுக்கு டான்ஸ் ஆடுகின்றனர்.
நந்தினி சிங்காரத்திடம் அவங்க ரெண்டு பேரும் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு இல்லப்பா என்று சொல்ல, ஜோடி பொருத்தம் எல்லாம் நல்லாதாம்மா இருக்கு ஆனா நான் நினைக்கிறது வேற, என்று சொல்ல நந்தினி என்னப்பா என்று கேட்கிறார். சம்பந்தம் கலக்காம பண்றதுதாமா சொல்றேன். சம்பந்தம் கலக்குறதுனா பொன்னோட அப்பாவும், பையனோட அப்பாவும் ஒக்காந்து என்னோட பொன்னுக்கும் உங்களோட பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் என்று சொல்லி அனைவர் முன்னிலையிலும் செய்வதுதான் சம்பந்தம் கலப்பது என்று சொல்லுவாங்க. நம்ம ஊர்ல இப்படித்தான் பண்ணுவாங்க. ஐயாவும் நம்ம ஊரு, மினிஸ்டர் ஐயா விசாரிச்சு பார்த்தாலும் பூர்வீகம் நம்ம ஊரு சைடு தான் இருக்கு ஆனா இவங்க இது மாதிரி பண்ணல இதே நம்ம ஊர்ல நடந்து இருந்தா வெட்டுக்குத்து ஆயிருக்கும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க இதனை மாதவி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
நந்தினி கிச்சனில் வேலை இருக்குப்பா நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லி கிளம்பியவுடன் உடனே மாதவி சிங்காரத்திடம் வந்து என்னமோ பேசிகிட்டு இருந்தீங்களே என்ன என்று கேட்க அதற்கு நான் ஒன்னும் பேசலாமா என்று சொல்லுகிறார்.அதற்கு சம்பந்தம் பேசினீங்களே என்று கேட்க அதுவா? சம்பந்தம் கலக்குறதுன்னு சொல்லுவாங்கம்மா என்று மாதவி இடம் விளக்கம் கொடுக்கிறார். உடனே மாதவி இதெல்லாம் உங்களை மாதிரி கிராமத்துல இருந்து வந்தவங்களுக்கு தான் தெரியும் எங்களுக்கெல்லாம் எப்படி தெரியும் இத பத்தி தெரியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனா இதெல்லாம் சாங்கியம் சம்பிரதாயம் எல்லாம் செஞ்சா தானே இந்த ஃபங்ஷன் நிறைவாக இருக்கும் என்று சொல்லுகிறார்.
ஆமாமா இதெல்லாம் நம்மளோட கலாச்சாரம் அதை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சிங்காரம் சொல்லுகிறார். உடனே சுரேகாவும் சரி என்று சொல்லுகிறார். அப்படின்னா இது அப்பா கிட்ட சொல்லிடலாம் என்று சொல்ல நானே ஐயா கிட்ட சொல்றேன் எங்க இருக்காரு என்று கேட்க திரும்பி பார்த்தால் அவர் ஸ்டேஜ்ஜில் நின்று கொண்டிருக்கிறார்.
உடனே மாதவி திட்டம் போட்டு அப்பா கிட்ட நாங்க சொல்லிக்கிறோம் ஆனா பொண்ணு விட்டு சைடுலையும் இது மாதிரி தெரியாது நீங்க யாராவது சொன்னாதான் தெரியும் என்று சொல்ல நான் சொல்றமா என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மினிஸ்டர் வருகிறார். அவரிடம் அய்யானா அருணாச்சலம் ஐயா தோட்டத்துல வேல பாக்குறதா என்று சொல்ல அங்க சாப்பிடற இடம் இருக்கு சாப்பிட்டு சேர்ல போய் உட்காரு என்று சொல்லுகிறார். அது இல்லையா இன்னொரு விஷயம் பேசணும் என்று சொல்லி சம்பந்தம் கலப்பது குறித்து பேசுகிறார் அதனை காதில் வாங்காத மினிஸ்டர் நகர்ந்து செல்ல சிங்காரம் அவரின் கையை பிடித்து நிற்க வைக்கிறார் இதனால் கடுப்பான மினிஸ்டர் சிங்காரத்தை கன்னத்தில் அறைய அவர் கீழே விழுந்து விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் என் தம்பி உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டான் என்று மினிஸ்டர் இடம் சண்டை போடுகிறார் மாதவி. மினிஸ்டரின் மனைவி ஏய் என மிரட்ட, தெரியாம பண்ணிட்டாங்க மாமா மன்னிச்சிடுங்க என்று நந்தினி மன்னிப்பு கேட்கிறார்.
இப்ப எதுக்கு நீ தேவை இல்லாம நடுவுல வர, என்று மாதவியின் நந்தினியை கேட்க, என் சம்பந்தி கிட்ட உனக்கு என்னையா பேச்சு என்று சுந்தரவல்லி கோபமாக சிங்காரத்திடம் கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…