Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த டாக்டர்,அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 10-09-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கல்யாணத்தையும் திட்டம் போட்டு வெளியில் அனுப்பி விடுகிறார். பிறகு டைனிங் டேபிளில் சாம்பாரை கொட்டி விட்டு வந்து உட்கார்ந்து விடுகிறார். பிறகு நந்தினி வந்து கவனித்து விட்டு கல்யாணத்தை கூப்பிட அவர் வராமல் இருக்க நந்தினி சூர்யாவின் சட்டையை எடுத்துக்கொண்டு வந்து சாம்பார் துடைக்கிறார். சூர்யா இதை கவனித்து விட்டு சட்டையை கோபமாக வாங்கி பார்த்துவிட்டு நந்தினியை வேகமாக கன்னத்தில் அறைய நந்தினி கீழே விழுந்து மயங்கி விட குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர் சூர்யா எதுவும் பேசாமல் சென்றுவிட அருணாச்சலம் நந்தினியை தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். எதுக்காக சூர்யா அடிச்சான் என்று கேட்க சாம்பார் கொட்டியிருந்தது தொடச்சேன் அதுக்காக அடிச்சுட்டாரு என்று சொல்ல, நீ கவலைப்படாதம்மா கண்டிப்பா நான் அவன கேட்பேன் என சொல்ல சுந்தரவல்லி சுரேகா என அனைவரும் சிரிக்கின்றனர்.

மறுபக்கம் சூர்யா பீச்சுக்கு சென்று தனியாக நின்று நந்தினியை அடித்ததை நினைத்து யோசித்துக் கொண்டிருக்க பிறகு சூர்யா அந்த சட்டையை எடுத்துப் பார்க்க அவரது காதலி அந்த சட்டையை போட்டிருந்ததும் காதலியுடன் சந்தோஷமான இருந்த நாட்களையும் நினைத்துப் பார்த்து குடித்துக் கொண்டிருக்கிறார். அருணாச்சலம் சூர்யாவிற்காக காத்திருக்க கொஞ்ச நேரத்தில் சூர்யாவும் வீட்டுக்கு வருகிறார். நீ எதுக்காக நந்தினியை அடிச்ச என்ன பழக்கம் இது, இந்த வீட்டில உன்ன தவிர அவளுக்கு வேற நாதியில்லை எந்த உரிமைல அவளை அடித்த, இத்தனை வருஷமா நீ என்ன பாத்துக்கிட்டு இருக்க ஒரு நாளாவது நான் உங்க அம்மாவை அடிச்சிருக்கேனா, அவளை அடிக்க உனக்கு எப்படி மனசு வந்தது என்று கேட்கிறார். அது என்னோட காதலியோட ஞாபகமா வச்சிருந்தா சட்டை அவ ஞாபகமா எனக்கு அது மட்டும் தான் இருந்தது அதை எடுத்ததனால் தான் எனக்கு கோபம் வந்துடுச்சு என்று சொல்லுகிறார். உன்ன பொறுத்த வரைக்கும் தான் அது காதல் ஆனா அதுல பொருத்தவரைக்கும் அது சாதாரண பழைய சட்டை அவ்வளவுதான் என சொல்லுகிறார்.

நீ பண்ணது ரொம்ப தப்பு சூர்யா என்று சொல்ல, சாரி டாடி என்று சூர்யா சொல்ல, என்கிட்ட சொல்லாத அவகிட்ட போய் சொல்லு என்று சொல்லி அனுப்புகிறார். சூர்யா ரூமில் வந்து நந்தினி தேட இல்லாததால் வெளியில் மாடியில் வந்து பார்க்கிறார். நந்தினி மாடியில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்க சூர்யா வந்தவுடன் மறைந்து கொள்கிறார். பிறகு சூர்யா கவனித்து விட்டு மேலே ஏறி வர பக்கத்துல வராதீங்க வராதீங்க என்று பயப்படுகிறார். நான் எந்த தப்பும் பண்ணல வராதீங்க வராதீங்க என்று சொல்ல நான் உன்னை அடிக்க வரல நான் எந்த தப்பும் பண்ணல, நான் இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டேன் அடிக்காதீங்க என்று சொல்ல நான் உன்கிட்ட பேச தான் வந்தேன் என உட்காருகிறார்.

நான் உன்ன வேணும்னு அடிக்க வரல, நீ தொடச்ச சட்டை, என்னோட காதலியோடது அவளோட பாசம் அதில் இருக்கு. அதை பார்க்கும்போது என்னோட பழைய காதல் ஞாபகம் வரும் அதில் நீ தொடச்சிக்கிட்டு இருக்கும்போது எனக்கு கோபம் வந்துடுச்சு என்னை மன்னிச்சுடு நந்தினி என்று சொல்லுகிறார். அந்த சட்டையை பத்தி எனக்கு எப்படி சார் தெரியும் என்று கேட்க கரெக்ட் தான் நந்தினி நான் உன்கிட்ட சொல்லி இருக்கணும் என்ன மன்னிச்சிடு திடீர்னு கோபத்துல இப்படி பண்ணிட்ட நான் இப்படி பண்ற ஆள் கிடையாது என்று உனக்கு தெரியும் இல்ல உன் மேல ஏதாவது கோபப்பட்டு அடிச்சு பேசி இருக்கேனா என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி நான் இப்ப என்ன பண்ணனும் என்று கேட்க நாளைக்கு காலைல எங்க அப்பா வீட்ல எடுத்துட்டு போய் விடனும் என்று சொல்ல சூர்யாவின் முகம் மாறுகிறது. கல்யாணம் அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க நந்தினி எங்கே என கேட்கிறார் காலையில் சீக்கிரமா எழுந்து வேலைய பாத்துட்டு இருக்கோம் ஆனா ஆளைக் காணோம் என்று சொல்லுகிறார். டாக்டர் சூர்யாவின் வீட்டுக்கு வர சுந்தரவல்லி திடீர்னு வந்து இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்க போன் பண்ணி வர சொன்னாரு என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 10-09-25
moondru mudichu serial promo update 10-09-25