சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த நந்தினி, அருணாச்சலம் கேட்ட கேள்வி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் வந்தா பணத்தோட தான் வருவேன்னு ஐயா கிட்ட சொல்லிடுங்க என்ன சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறார் நந்தினி.கல்யாணம் அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க அதெல்லாம் வேண்டாம் என சொல்லுகிறார்.சூர்யா இன்னும் கொஞ்ச நேரத்துல நந்தினியை கூட்டிட்டு வந்துருவான் என்று சொல்ல பணத்தை ரெடி பண்ணிட்டாங்களா என்று கேட்கிறார் ஆமா ரெடி பண்ணிட்டாங்க அது கொடுக்க தான் வராங்க என்று சொல்ல என்ன வராங்கன்னு சொல்றீங்க கார் வந்துருச்சு பாருங்க என்ற கல்யாணம் சொல்ல சூர்யா மட்டும் இறங்கி வருவதை பார்த்து அருணாச்சலம் கூப்பிடுகிறார். என்னடா நந்தினி வருவா என்று சொன்ன, நீ மட்டும் தனியா வந்து இருக்க என்று சொல்ல அட போங்க டாடி எல்லா பிளானும் சொதப்பிடிச்சு என்று நடந்ததை சொல்ல, அடப்போடா நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா என்று சொல்ல கரெக்டு தான் டாடி அந்த கன்னியப்பன் இப்படி சொதப்புவான் என்று நான் நினைக்கல என்று சொல்லுகிறார். அவன் கிட்ட இப்படி ஒரு முக்கியமான வேலையை கொடுத்திருக்கக் கூடாது என்று அருணாச்சலம் சொல்ல, அவன் ரொம்ப நம்பிக்கையான ஆளுன்னு தான் நினைச்சேன் அப்படி இருந்தும் மிஸ் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் நந்தினி எங்க வீட்டுக்கு போயிட்டாளா என்று கேட்க, ஆமா அவ ஆட்டோவில் ஏறி போயிட்டா இவ்வளவு கஷ்டப்பட்டு வேஸ்ட்டா போயிடுச்சு என்னைக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியுமோ அன்னைக்கு தான் இந்த வீட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டு போயிட்டா டாடி ஏற்கனவே அவ நம்ம மூலமா எந்த உதவியும் வேணாம்னு இருந்தா ஆனா இப்ப நீ தான் பண்ணனு தெரிஞ்சிருச்சு இன்னும் பத்து மடங்கு உஷாரா இருப்பா என்ன பண்றதுன்னு புரியல என்று அருணாச்சலம் டென்ஷன் ஆக வேற ஏதாவது யோசிப்போம் என சூர்யா சென்று விடுகிறார். நந்தினி வந்தவுடன் அனைவரும் என்னாச்சு என்று விசாரிக்க அம்மாச்சியிடம் தண்ணி கொடு என்று சொல்லிவிட்டு அமைதியாக சென்று உட்கார்ந்து விடுகிறார்.

என்ன எல்லாரும் நம்ப வச்சு ஏமாத்துறாங்க யார்கிட்ட சொல்லி அழறதே தெரியல என்று சொல்ல, என் பேத்தி எப்படி மனசு உடைஞ்சு வந்திருக்கா என்னாச்சு என்று கேட்க, நந்தினி நம்ம வீட்டுக்கு தேடி வந்து பணம் கொடுத்த ஆள் வேறு யாரும் இல்லை சூர்யா சாருக்கு தெரிஞ்சவர் தான் என்று நடந்த விஷயங்களை அழுது கொண்டு குடும்பத்தாரிடம் சொல்லுகிறார். நீ கஷ்டப்படக்கூடாதுன்னு தானே தம்பி இப்படி பண்ணி இருக்காரு என்று சொல்ல எதுக்கு அந்த பணத்தை வாங்கி அவங்க கிட்ட கொடுத்துட்டு அது ஒரு நாள் தெரிஞ்சு அதுக்கு ஒரு தடவை அசிங்கப்படவா என்று கோவப்படுகிறார். கடைசியா என்ன ஆச்சு என்று கேட்க அவர்கிட்ட அந்த பணத்தை கொடுத்துட்டு திரும்பி வந்துட்டேன் அந்தக் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் நான் போகமாட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து நந்தினியின் மாமா சந்தோஷமான செய்தி என குதித்துக் கொண்டு சந்தோஷமாக பேசுகிறார்.

என்ன விஷயம் என்று சிங்காரம் கேட்க, ஒரு செக்யூரிட்டி ஆபீஸ்ல உனக்கு வேலை கேட்டு வச்சிருந்தேன் அவங்க நாளைக்கே உன்ன வேலைக்கு வர சொல்லிட்டாங்க என்று சொன்ன சிங்காரம் சந்தோஷப்படுகிறார். புனிதா எந்த மாதிரி வேலை என்று கேட்க, முதலாளி வரும்போது கேட்ட திறக்கணும், போகும்போது மூடனும் வரும்போது போகும்போது சல்யூட் அடிக்கணும் அவ்வளவுதான் என்று சொல்லி நாளைக்கு ரெடியா இருங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சுந்தரவல்லி நந்தினி வெளியில் போன சந்தோஷத்தில் அனைவருக்கும் குலோப்ஜாம் வாங்கி கொடுத்து சாப்பிடுகின்றனர். அவ திரும்பி வரமாட்டா அல்ல என்ற சுரேகா சொல்ல அசோகன் 2 லட்சம் ஆச்சே எப்படி ரெடி பண்ண முடியும் என்று கேட்கிறார். சுந்தரவள்ளியும் அது எப்படி வர முடியும் அவளே திருடி அவளே கெட்ட பெயர் வாங்கி அவளே போய்ட்டா அவ்வளவுதான் என சொல்லுகிறார். ஆனா ஒரு விஷயமா பிரச்சனை வந்தா அவ ஓடிடா பின்னாலே சூர்யாவும் ஓடிறான் ஆனா இது அப்படியே விடக்கூடாது என்ற மாதவி சொல்லுகிறார். தயவு செஞ்சு இந்த பேச்சை விடுங்க நான் இப்பதான் ஜாலியா என்ஜாய் பண்ணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன் என்று சொல்லி சந்தோஷமாக சிரிக்க சூர்யா வந்தவுடன் மாதவி குலோப்ஜாம் சாப்பிடு என கூப்பிடு எதுவும் பேசாமல் வெளியில் அருணாச்சலத்திடம் வந்து உட்கார்ந்து பேசுகிறார். என்ன டாடி ஒரே சிரிப்பா சந்தோஷமா இருக்கு இல்ல என்று கேட்க நந்தினி இல்லாததுதான் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி ரேணுகாவுடன் சொல்லி அவங்க ரெண்டு பேருக்கும் ஸ்வீட் கூட என்று சொல்ல அருணாச்சலம் வெறுப்பேத்தறாங்கலாமா என்று சொல்லி ரேணுகாவை அனுப்புகிறார். நந்தினியை திருட்டுப்பழி சொல்லி இந்த வீட்டை விட்டு துரத்திட்டு இவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்க இப்பவே இவங்க சந்தோஷத்துல மண்ணள்ளி போடுறேன் என உள்ளே வருகிறார்.

ஆனால் எதுவும் பேசாமல் வெளியில் சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி குடும்பத்தினருடன் இருக்க அம்மாச்சி உங்களுக்கு வேலை செட் ஆகுமா தம்பி என்று கேட்க அதெல்லாம் பாத்துக்கலாம் என்று சிங்காரம் சொல்கிறார். உடனே புனிதாவும் கொஞ்சம் நாளில் நானும் வேலைக்கு போயிட்டா இந்த குடும்பத்தோட கஷ்டம் குறையும் என்று சொல்ல நந்தினி புனிதாவை படிக்கச் சொல்லுகிறார். ஆனால் அம்மாச்சி புனித சொல்றது சரிதானே என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து சூர்யா வந்து நந்தினியை வீட்டுக்கு கூப்பிட நந்தினி வரமுடியாது என்று சொல்லுகிறார். டாடி ஒரு பக்கம் ஆப்செட் இருக்காரு, ஆனா இன்னொரு பக்கம் மத்தவங்க எல்லாம் தலைகால் புரியாமல் இருக்காங்க அதனால நீ வந்து தான் ஆகணும் என்று சொல்ல என்னால் இப்போதைக்கு வர முடியாது அந்த பணத்தை கொடுக்காமல் நான் வரமாட்டேன் நீங்க என்ன தர்மசங்கடம் படுத்தாதீங்க நீங்க கிளம்புங்க என்று சொல்லுகிறார். நான் கூடிய சீக்கிரமே அந்த பணத்தை ரெடி பண்ணி விடுவேன் என்று சொல்ல அப்ப இவ்வளவு தூரம் தேடி வரேன் எனக்கு மரியாதை இல்லையா என்று கேட்கிறார். உடனே சிங்காரத்திடம் உங்களுக்கில்லாத மரியாதையா என்று கேட்க அப்போ உங்க பொண்ணு அனுப்பி வைங்க என்று சொல்ல நந்தினி நீங்க அமைதியா இருங்கப்பா என்று சொல்லுகிறார்.

எதுக்கு சும்மா வம்பு பண்றீங்க எனக்கே தெரியாம அந்த கன்னியப்பன் வச்சு பணம் கொடுக்கணும்னு நினைச்சீங்க அது தெரிஞ்ச உடனே இப்ப நேரா வந்து கூப்பிட்டு இருக்கீங்க நான் அந்த பணத்தை ரெடி பண்ணி கொடுத்துட்டு தான் வருவேன் என்று சொல்ல அப்போ நீ வரலைன்னா நானும் போக மாட்டேன் அந்த வாசல்லயே தான் இருப்பேன் என்று சொல்லி வெளியில் வந்து உட்கார குடும்பத்தினர் அனைவரும் வந்து இப்படி வாசல்ல வந்து உட்கார்ந்தா நல்லாவா இருக்கு என்ற அம்மாச்சி கேட்க, ஆமா நல்லா இல்ல உங்க பேத்திய வீட்டுக்கு வர சொல்லுங்க என்று சொல்ல இப்படி இருந்தா எப்படி சார் இங்க எல்லாம் கொசு கடிக்கும் என்று சொல்ல கடிக்கட்டும் உனக்கு என்ன அத பத்தி கவலை என்று கேட்கிறார். பிறகு குடும்பத்தினரை நந்தினி உள்ளே அனுப்ப நீங்க போங்க நான் பேசுகிறேன் என்று சொல்லி உள்ளே போக சூர்யா கொசுக்கடியால் தூங்க முடியாமல் இருக்க நந்தினி தூங்காமல் சூர்யாவிற்கு விசிறி கொண்டு இருக்கிறார். உள்ளே அம்மாச்சி பாத்தியாடி உங்க அக்காவ புடிக்கலைன்னு சொல்லிட்டு கை வலிக்க வலிக்க விசிறி கிட்டு இருக்காபாரு என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி வீட்டுக்கு வந்து சூர்யா மற்றும் அருணாச்சலத்திடம் நீங்க ரெண்டு பேரும் கூப்பிடுறீங்க நான் வந்துட்டா அவங்க என் மேல சொல்ற பழி உண்மையாகிடும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் விஜியும் நந்தினி சென்று ஒரு பெண்மணியிடம் கடன் கேட்கின்றனர்.

இவங்க பேசுனது உங்களுக்கு தப்பா தெரியுது நம்ம வீட்ல ஒரு திருடி இருந்திருக்கா அவ 2 லட்சத்தை எடுத்துட்டு போயிருக்கா அது தப்பா தெரியலையா என்று கேட்க நந்தினி ரஞ்சிதாவுடன் வந்து நிற்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 10-05-25
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

13 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

13 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

15 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

17 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

17 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

17 hours ago