தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர அருணாச்சலம் எதுக்குடா கொஞ்ச நாள் சுரேகாவுக்கு சரியாகுற வரைக்கும் குடிக்காமல் இருந்தால் என்ன என்று கேட்க சுந்தரவல்லி இப்பல்லாம் நீ கொஞ்சம் கொஞ்சமா அரக்கன மாறிக்கிட்டு வர கூட பொறந்த உன்னால உனக்கு எந்த பாசமும் கிடையாதா என்று கேட்க, என் சரக்கு என் உரிமை நான் குடிப்பேன் யாரும் என்னை கேட்க முடியாது என்று சொல்ல, அப்போ அந்த வேலைக்காரிக்கு மட்டும் பிச்சை எடுக்க எல்லாம் செய்வியா என்று கேட்க சூர்யா எதுவும் பேசாமல் மேலே சென்று விட நீங்க எதுவுமே கேட்க மாட்டீங்களா என்று சொல்ல உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி ரூமுக்கு சென்று விடுகிறார். சூர்யா ரூமுக்கு வந்து நந்தினி என கூப்பிடுகிறார். பிறகு நந்தினி பேப்பரில் சூர்யா சார் மன்னிச்சுடுங்க என எழுதி வச்சிருந்ததை பார்த்துவிட்டு கிளம்பி விட்டாளா என்று நினைத்து விட்டு பேப்பரை கீழே எடுத்துக் கொண்டு வந்து சுந்தரவல்லி அருணாச்சலம் மாதவியை கூப்பிட்டு இப்போ உங்க பொண்டாட்டிக்கு ரொம்ப சந்தோஷமா அவ மொத்தமா போயிட்டா அவ ஒரேடியா என்ன விட்டுட்டு போயிட்டா என்று சொல்லுகிறார். நாங்க இங்கேதான் இருக்கிறோம் எங்க கிட்ட சொல்லவே இல்லையே என்று சொல்ல சொன்னாதான் டாடி விடமாட்டார் அதனால் தான் சொல்லாம கொல்லாம கிளம்பிட்டா இப்ப சந்தோஷமா நிம்மதியா என்று கேட்கிறார்.
நான்தான் டாடி அவளை வீட்டை விட்டுப் போக சொன்ன என்று சொல்ல நீ எதுக்காகடா இது மாதிரி பண்ண என்று அருணாச்சலம் கேட்க அவ டெய்லியும் தினம் தினம் இந்த வீட்ல கொடுமையான அனுபவச்சுக்கிட்டு இருக்கா அது அவள் என்கிட்ட கூட சொல்றது கிடையாது எனக்கு ரொம்ப பாவமா இருக்கு என்னால் தானே அவளுக்கு இந்த நிலைமை அவ போய் சந்தோஷமா நிம்மதியா இருக்கட்டும் என்று கண்கலங்கி பேசுகிறார். அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவள் வாழட்டும் என்று சொல்ல உடனே அருணாச்சலம் கோபப்பட்டு ஒரு ஒரு வாட்டியும் அவளை நான் இருக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா நீ ஈசியா சொல்லிக்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார். என் பொண்டாட்டியே என் வாயாலேயே வீட்ட விட்டு அனுப்ப வச்சிட்டீங்க இல்ல இதுக்காகத்தானே ஆசைப்பட்டீங்க இப்ப சந்தோஷமா இருக்கா என்று சொல்லிவிட்டு நீங்க பண்ற எல்லா தப்பும் கண்டிப்பாக உங்க பக்கம் வந்து சேரும் என்று கோபமாக திட்டிவிட்டு சென்று விடுகிறார். பிறகு மொட்டை மாடியில் வந்து சூர்யா சிகரெட் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.
அப்போது நந்தினி மொட்டை மாடியில் உட்கார்ந்து இருப்பதை கவனித்து கூப்பிடுகிறார். நீ என்ன இங்க இருக்க ஊருக்கு போகலையா என்று கேட்கிறார். போகலாமென்று தான் இருந்தேன் ஆனா நீங்க அந்த பேப்பரை திருப்பி பாக்கலையா என்று கேட்க பேப்பரை திருப்பி பார்க்க அதில் எனக்கு இப்போதைக்கு ஊருக்கு போக விருப்பமில்லை என்று எழுதியிருப்பதை கவனித்து நீ வேற இதை எழுதி வச்சதை பார்த்து நான் தாய்க்குலத்து கிட்ட போய் சண்டை போட்டுட்டேன் என்று சொல்லுகிறார் உடனே நந்தினி எனக்கு தெரியும் சார் இதுதான் பண்ணி இருப்பிங்கன்னு என்று சொல்லுகிறார். இதையெல்லாம் மாதவி கவனித்துக்கொண்டு இருக்கிறார். நீங்க சும்மா இருந்தாலும் பரவால்ல கூட்டிட்டு போய் நம்ம கல்யாணத்தை பதிவு பண்ணிட்டீங்க என்று சொல்லுகிறார். ஊர் உலகத்தோட பார்வையில இல்லனாலும் சட்டப்படி புருஷன் பொண்டாட்டி இது எப்படி மாறும் என்று கேட்க இதில் இப்படி ஒரு சட்ட சிக்கல் இருக்கா என்று கேட்கிறார். நீங்க கம்பெனி வரைக்கும் இப்படி தான் சொல்லி வச்சிருக்கீங்க இப்ப எல்லார்கிட்டயும் நான் என்ன சொல்றது என்று கேட்கிறார். அப்போ இதுக்கு மேல போக மாட்டியா என்று கேட்க அது எப்படி சார் போக முடியும் என்று சொல்ல அருணாச்சலம் சூப்பர்மா என்று பாராட்டுகிறார். நீ இந்த வீட்டோட மருமகமா இவ சொன்னா இல்ல சுந்தரவல்லி சொன்னா கூட நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது இது என்னோட வீடு நான் எங்கேயும் போக மாட்டேன் என்று ஸ்ட்ராங்கா சொல்லணும் என்று சொல்ல நந்தினியும் சரியென சொல்லுகிறார். சரி வாங்க மேடம் போகலாம் என சூர்யா பேக்கை எடுத்துக்கொண்டு அழைத்து வருகிறார். பிறகு மாதவி வந்து சுந்தரவல்லி இடம் நந்தினி பேசியதையெல்லாம் சொல்லுகிறார்.
இன்னைக்கு சூர்யாவே ஊருக்கு போன சொல்லியும் அவ முடியாமல் முடியாது என்று சொல்லிட்டா. விட்டா நம்ம எதுவுமே இல்லாம ஆகிடுவா போல என்று சொல்ல பாத்துக்கலாம் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். பிறகு ரூமில் சூர்யா குடிக்க போக நந்தினி ஓடிவந்து குடிக்காதீர்கள் என்று சொல்லுகிறார். இப்போ இவ்வளவு நாள் குடிக்காமல் இருந்துட்டு இப்ப குடிச்சீங்கன்னா பழைய மாதிரி ஆரம்பிச்சிடுவீங்க என்று சொல்ல அதில் உனக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார். என்ன குடிக்க வேணாம்னு சொல்றதுக்கு நீ யாரு என்று கேட்க நான் உங்க பொண்டாட்டி என்ன நந்தினி சொல்ல சூர்யா நந்தினியை பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நான் குடிக்கிறதை தடுக்கிறதுக்கு நீ யாருன்னு கேட்டீங்க இல்ல நான் உங்களோட பொண்டாட்டி என்று சொல்லுகிறார் மறுபக்கம் அருணாச்சலம் இனிமேல் சூர்யாவை விட்டுப் போகக்கூடாது என்று சொல்ல போக மாட்டேன் என நந்தினி சொல்லுகிறார். சூர்யா நந்தினி இடம் வக்கீல் மாதிரி கிராஸ் கொஸ்டின் எல்லாம் கேட்காதே என்று கேட்க நான் வக்கீல் மாதிரியும் கேட்பேன் ஜட்ஜ் மாதிரியும் கேட்பேன் என்று சூர்யாவை மிரட்டி எடுக்கிறார் நந்தினி. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
