நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதிலில் அசந்து நின்ற நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு சுந்தரவல்லி பாத பூஜை செய்துவிட்டு சென்றுவிட சாமியார் நந்தினிக்கும் செய்ய சொல்லுகிறார். சுந்தரவல்லி செய்ய விடாமல் உடனே மாதவி நான் பண்றேன்னு வந்து சூர்யாவுக்கும் நந்தினிக்கும் பாத பூஜை செய்கிறார். உடனே அசோகன் சுரேகா என இருவரும் வைத்து முடிக்க பிறகு அனைவரையும் உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றனர். அனைவரும் சாப்பிட்ட பிறகு சாமியார் சூர்யாவை புகழ்ந்து அருணாச்சலத்திடம் பேசுகிறார். உடனே பிச்சைக்காரர்களில் ஒருவர் எங்களையெல்லாம் மனுஷனா கூட யாரும் மதிக்க மாட்டாங்க ஆனா இவ்வளவு பெரிய பங்களா குள்ள கூட்டிட்டு வந்து விதவிதமா சாப்பாடு போட்டு இருக்கீங்க நீங்களும் உங்க குடும்பமும் நூறு வருஷத்துக்கு தாண்டி சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்தி விட்டு அனைவரும் செல்கின்றனர்.

வீட்டுக்குள் வந்த மாதவி சுரேகா அசோகன் மூவரும் நந்தினிக்கு பாத பூஜை செய்தது குறித்து எரிச்சலாக இருந்ததாக பேசிக்கொள்கின்றனர். இது எல்லாமே அவளோட திட்டம் தான் என்று சுரேகா சொல்லுகிறார். மாதவி நாங்க மட்டும் பேசிக்கிட்டு இருக்கும் நீங்க அமைதியா இருக்கீங்க என்று கேட்க கொஞ்ச நேரம் பேசாம அமைதியா இருங்க என்று சத்தம் போடுகிறார். மறுபக்கம் அருணாச்சலம் கண் கலங்கி கொண்டு இருக்க சூர்யாவும் நந்தினியும் வருகின்றனர். என்னாச்சு டாடி என்று கேட்க உன்ன நெனச்சி எனக்கு ஆனந்த கண்ணீர் என்று சொல்லுகிறார். யாருன்னு தெரியாதவங்க எல்லாம் வந்து தங்கமான புள்ளைய பெத்து இருக்கீங்க ன்னு சொல்லும்போது மனசெல்லாம் பூறிச்சு போச்சு இதுக்காக நான் எவ்வளவு நாளா ஏங்கிட்டு இருந்தேன் தெரியுமா என்று கேட்கிறார்.

இந்த சாதாரண விஷயத்துக்காக எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க என்று கேட்க, நான் பணம் புகழால் சம்பாதிக்காத சந்தோஷத்த அந்த வார்த்தை எனக்கு கொடுத்திருக்கு. உனக்கு இப்ப புரியாது நீ அப்பா வாழும்போது புரியும் என்று சொல்லி விடுகிறார் சரிங்க டாடி நாங்க நாளைக்கா பழனி போலாம்னு முடிவு எடுத்திருக்கும் பொங்கல்லாம் வருதில்ல அடுத்த வருஷம் வேணா பொறுமையா 48 நாள் விரதம் பாலோ பண்ணிக்கலாம் என்று நந்தினி சொன்னதாக சொல்லுகிறார். சரி காலையில பார்க்கலாம் என்று சொல்ல நீங்க அசந்து தூங்குவீங்க நாங்க கிளம்புகிறோம் என்று சொல்ல உங்கள வழி அனுப்புறத விட எனக்கென்ன தூக்கம் நீங்க போய் படுங்க என்று சொல்லி அனுப்புகிறார். உடனே விடியற்காலையில் நந்தினி கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய கல்யாணம் பூஜை செய்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுகிறேன் என்று சொல்லுகிறார்.

உடனே கல்யாணம் வந்து என்னை எழுப்பிருக்கலாமே என்று சொல்ல, கல்யாணத்துடன் நீங்க பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாங்க என்று சொல்லுகிறார். பிறகு கல்யாணம் தீபாரதனை செய்து பூஜையை முடிக்கிறார். பூஜை முடிந்து மூவரும் கிளம்ப அருணாச்சலம் அவரை வழி அனுப்புகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நான் பாட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன் என்னட பதிலே சொல்லாம நின்னுக்கிட்டு இருக்க கல்யாணம் என்று கேட்க பதிலுக்கு அசோகனை பார்த்து கல்யாணம் என்னடா என கேட்கிறார். சுரேகா மாதவி இடம் அவளை இப்போ என்ன பண்ண போற என்று கேட்க, சூர்யா மட்டும் வெளியே போகட்டும் அவளுக்கு இருக்கு என்று சொல்லுகிறார். மார்கழி மாசத்தில் ரொம்ப குளிரும் என்று சொல்ல எனக்கு குளிர நா நந்தினி நந்தினி உன் பேர தான் சொல்லுவேன் என நந்தினி காதில் வந்து சூர்யா சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 09-01-25
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 day ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 day ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 day ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago