Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா கேட்ட கேள்வி, அருணாச்சலம் சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 08-08-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நீ வேணா எனக்கு ட்ரிம் பண்ணி விடு என சொல்ல, நந்தினியும் கத்தரிக்கோலை வாங்கி கட் பண்ணி விடுகிறார். இது மாதிரி இருக்கிறத விட மீசையை முறுக்கி கட்டபொம்மன் போல் விட்டால் இன்னும் சூப்பரா இருக்கும் என்று சொல்ல சூர்யாவும் முறுக்கி விட்டு சூப்பராக இருக்கு என்று சொல்லுகிறார். மறுபக்கம் மாதவி கிச்சனுக்கு வந்து பாத்திரம் ஒன்றை எடுத்து கேஸ் அடுப்பில் வைத்து சூடு பண்ணி விட்டு யாருக்கும் தெரியாமல் சென்று விடுகிறார். பிறகு நந்தினி கூப்பிட்டு எனக்கு கிரீன் டீ வேண்டும் போட்டு தருகிறாயா என்று கேட்டு விட்டு மேலே நின்று நந்தினி பாத்திரத்தில் கை வைக்கிறாரா என்பதை கவனிக்க நந்தினியும் கை வைத்து விடுகிறார். நந்தினி வலியில் துடிக்க இதனைப் பார்த்து மாதவி சந்தோஷப்பட சத்தம் கேட்டு கல்யாணம் சூர்யா என அனைவரும் வந்து விடுகின்றனர்.

பிறகு கல்யாணம் வாழை மட்டையை பிழிந்து நந்தினி கையில் விடுகிறார். எப்படி இப்படி நடந்தது என்று கேட்க, கல்யாணம் பாத்திரத்தை யாரோ அடுப்பு மேல வச்சு சூடு பண்ணி இருக்காங்க என்று சொல்ல இந்த பாத்திரத்தில் நீங்கள் சூடு பண்ணுவீங்களா என்று சூர்யா கேட்க, இந்த பாத்திரத்தில் பண்ண மாட்டோம் என கல்யாணம் சொல்ல அப்போ வேற யாரோ இதை பண்ணி இருக்காங்க என்று சூர்யா சொல்ல உன் பொண்டாட்டிக்கு ஜலதோஷம் பிடிச்சா கூட இந்த வீட்ல இருக்குறவங்க தான் பொறுப்பா என்று கேட்கிறார். உடனே நந்தினி நான் தான் தெரியாம சூடு பண்ணி அந்த பாத்திரத்தில் கை வச்சிட்டு என சொல்ல சூர்யா நம்ப மறுக்கிறார்.

நான் கண்டிப்பா இதை கண்டுபிடிப்பேன்னு சொல்ல அருணாச்சலம் முதலில் ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போ என்று சொல்ல சூர்யாவும் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட நந்தினி வேண்டாம் என சொல்லுகிறார். உடனே ரூமுக்கு வந்த மாதவி சுரேகா இருவரும் சந்தோஷத்தில் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அசோகன் வந்து இதுதான் நீங்க போட்ட பிளானா என்று கேட்கிறார். அவளுக்கு இது நல்லா வேணும் எவ்வளவு திமிர் இருந்தால் அம்மா கையெழுத்து போடுற இடத்துல இவ போடுவா இவளும் அம்மாவும் ஒண்ணா, குறைந்தது மூணு மாசத்துக்கு இவளால கையெழுத்து போட முடியாது. உடனே சுரேகா சூர்யா வேற யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி இருக்கான் என்று சொல்ல அதெல்லாம் அம்மா இருக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது என்று மாதவி சொல்லுகிறார்.

பிறகு சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு நந்தினி கையை சுட்டுக்கிட்ட விஷயத்தில் என்ன நடந்தது என்று உண்மையை சொல்லு. எனக்கு எந்த உண்மையையும் தெரியாது ஆனா உங்க மனசுல ஒரு குழப்பம் இருக்கிற மாதிரி என் மனசுலையும் ஒரு குழப்பம் இருக்கு மாதவி அம்மா காபி கேட்டு இருக்காங்க அதுக்காக சுடுதண்ணி வைக்கப் போகும்போது கை சுட்டு விட்டது என்று சொல்ல அப்போ ஆல்ரெடி நந்தினி கிச்சனுக்கு போகப் போற விஷயத்தை யாரோ தெரிஞ்சுக்கிட்டு தான் இதை பண்ணி இருக்காங்க அப்படித்தானே என்று கேட்க கல்யாணமும் அப்படித்தான் நினைக்கிறேன் என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாம நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்த ரெண்டு பாத்திரத்தையும் நான் கீழே வச்சுட்டு போன அதுக்குள்ளே நந்தினி கத்தும்போது வந்து பார்த்தால் கேஸ் அடுப்பு மேல இருக்கு என்று சொல்ல அப்ப இது சந்தேகமே இல்லை யாரோ பண்ணி இருக்காங்க என்று சொல்லுகிறார்.

எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு என்று சொல்ல, என்னது என்ற சூர்யா கேட்டவுடன் மாதவி தேங்காய் சட்னி கேட்ட விஷயத்தையும், மிக்ஸியில் அசோகனுக்கு கை அடிபட்ட விஷயத்தையும் சொல்லுகிறார். அதுவே எனக்கு தெரிஞ்சு நந்தினிக்கு போட்ட பிளான் மாதிரி தெரிஞ்சது என்று சொல்ல, பிறகு வெளியில அசோகன் சார் அடிபட்டதுக்கும் நந்தினிக்கு வச்ச குறி மாதிரி தான் தெரியுது என்று சொல்ல அவ்வளவுதானா வேற ஏதாவது நடந்ததா என்று கேட்க எதுவும் இல்லை என சொல்ல சரி நீ போ என சொல்லி அனுப்பி வைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அசோகனை குடிக்க அழைத்துச் சென்று எவ்வளவு ஸ்டார் ஹோட்டல்ல போய் குடிச்சாலும் இயற்கையோடு கலந்து அடிக்கிற மாதிரி வருமா என கேட்கிறார். பிறகு வீட்டுக்கு வந்து சூர்யா அனைவரிடமும் இந்த கிப்ட் யாருக்குனு தெரியுமா என்று கேட்க அருணாச்சலம் யாருக்கு என்று கேட்கிறார்.

உடனே சூர்யா சொம்பை எடுத்து காட்ட மாதவி போச்சு மாட்னோம் என நினைக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 08-08-25