தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் விஜிக்கு போன் போட்டு நந்தினி சூர்யா மாலை போட்ட விஷயத்தை சொல்லுகிறார். கன்னிசாமி மாலை போட்டதனால் வீட்ல கன்னி பூஜை ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் நீங்க கலந்துக்கணும் என்று சொல்ல என்னால வர முடியாத சூழ்நிலை நான் உங்க அண்ணனை வேணா அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லுகிறார். சரி என சொல்லிவிட்டு நந்தினி போனை வைக்க, பிறகு பூஜைக்கான ஏற்பாடுகள் பயங்கரமாக ரெடியாக மாலை போட்ட சாமிகளும் வந்து விடுகின்றனர். மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவள்ளியையும் மாதவி வரவில்லை என யோசித்து விட்டு வீட்டுக்குள் வந்து எதுக்கு பூஜைக்கு வராமல் இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கிறீங்க என்று கேட்க, இது நம்ம வீட்டு பூஜை நம்மதான் முன்னாடி இருக்கணும் என்று சொல்ல, எங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லுகின்றனர்.
உடனே சுந்தரவல்லி இடம் உனக்கும் சூர்யாவுக்கும் இருக்கிற மனஸ்தாபம் வேற ஆனா இப்போ அவன் நம்ம புள்ள முதல்முறையா மாலை போட்டு இருக்கான் அவனுக்காக நீ வேண்டிக்க வேண்டாமா என்று சொன்னவுடன் சுந்தரவல்லி அனைவரையும் பூஜைக்கு வருமாறு அழைத்துச் செல்கிறார். கொஞ்ச நேரத்தில் வழக்கமாக அருணாச்சலம் வீட்டிற்கு வரும் சாமியாரும் வந்துவிட பூஜையை ஆரம்பிக்க சொல்லுகிறார். நந்தினியும் விளக்கேற்றி பூஜையை ஆரம்பிக்க சாமியார் அம்சமா பண்ணிருக்கீங்க ஒரு பக்தி பாடலோட பூஜையை ஆரம்பித்து விடலாம் என்று சாமியார் சொல்ல, சூர்யா ஒரு முக்கியமான விஐபிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
யாராக இருக்கும் என்று அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்க, கோவிலில் பிச்சை எடுக்கும் போது இருந்தவர்கள் அனைவரும் வருகின்றனர் சூர்யா அவர்களை வரவேற்க, சுந்தரவல்லி அவர்களிடம் கோபமாக நடந்து கொண்டு வெளியில் போக சொல்ல அவங்க எங்கேயும் போக மாட்டாங்க அவங்க என்னோட கெஸ்ட் என்ன சொல்லுகிறார். உனக்கு அறிவு இருக்கா இல்லையா என்று கேட்க சூர்யா இல்லை என சொல்லுகிறார். இவங்க பணத்துல வேணா பெரிய ஆள் இல்லாம இருக்கலாம் ஆனா நல்ல குணம் நிறைய இருக்கு என்று சொல்லி அவர்களை உட்கார வைக்க சுந்தரவல்லி கடுப்பாகிறார். பிறகு பாடலுடன் கன்னி பூஜை தொடங்குகிறது. பாட்டு முடிந்த பிறகு சாமியார் உடம்பும் மனசும் சுத்தமா இருக்கணும் பயபக்தியா மலைக்கு போயிட்டு வந்தவுடன் மாலையை பாலில் போடும் வரை சுத்தபத்தமா இருக்கணும் என்று சொல்லி விட்டு அடுத்து பாத பூஜை செய்ய ஆரம்பிக்கலாம் என்று சொல்லி சூர்யாவையும் நந்தினியும் நிற்க சொல்ல முதலில் அருணாச்சலம் சூர்யாவுக்கு செய்கிறார்.
பிறகு நந்தினிக்கு செய்ய வர, தட்டிலிருந்து நந்தினி காலை கீழே எடுத்து விடுகிறார். உடனே சாமியார் அப்படி செய்யக்கூடாது என்று சொல்ல, அருணாச்சலமும் நிற்கச் சொல்லி அவருக்கு பாத பூஜை செய்வதை பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகிறார். உடனே சாமியார் சுந்தரவள்ளியையும் செய்யச் சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சாமியார் ஒருத்தருக்கு மட்டும் பாத பூஜை பண்ணிட்டு இன்னொருத்தருக்கு பண்ணாம போனா அது பாவம் இல்லையா என்று கேட்கிறார். எங்கள மாதிரி நீங்க அவ கால்ல விழல தான் ஆனா உங்களுக்கு புரிய வச்ச அல்ல என்று ஏத்தி விடுகின்றனர்.
நான் சொல்றதுக்கு எல்லாம் அர்த்தம் உனக்கு இப்ப புரியாது நீ ஒரு நாள் தகப்பனாகல அப்ப புரியும் இது எல்லாத்துக்கும் காரணம் நந்தினி சாமிதான் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


