Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவள்ளி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 07-01-26

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும் அ, அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா காலையில் தூங்கி எழுந்திருக்க நந்தினி தூங்கிக் கொண்டு இருக்கிறார். சூர்யா குளித்துவிட்டு வர மறுபக்கம் கல்யாணம் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே நந்தினி எழுந்து கொள்ள நீங்க பொறுமையா குளிச்சிட்டு வாங்க நான் போய் பூஜை ரூம்ல சாமி கும்பிடறேன் என சொல்லிவிட்டு கீழே வருகிறார். உடனே கல்யாணத்திடம் வந்து நான் சொல்ற விஷயத்தை பர்ஃபெக்ட்டா பண்ணனும் என சொல்லி ஒரு விஷயத்தை சொல்லுகிறார். சரி நீங்க மேல போங்க நான் வரேன் என்று சொல்ல சூர்யா நந்தினி இடம் வந்து கண்ணை மூடச் சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து கல்யாணம் நந்தினிக்கு மாலை போட்டு விடுகிறார்.

என்ன சாமி இதெல்லாம் என்று கேட்க, இனிமேல் நீயும் இந்த வீட்ல சாமி என்னோட தாய்குலம் உங்களை எருமை என்று சொன்னாங்களா இதுக்கு மேல சாமி தான் சொல்லணும் என்று சொல்லுகிறார். சரி வாங்க நம்ம போய் பூஜை போடுவோம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார். நந்தினி மாலை போட்டு இருப்பதை பார்த்து அருணாச்சலம் என்னம்மா சொல்லாம கொள்ளாம மாலை போட்டு இருக்க என்று சொல்ல, ஏன் டாடி நந்தினி மாலை போடக்கூடாதா என்று கேட்க அதெல்லாம் நல்ல விஷயம் தாண்டா என்று சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்டு சுந்தரவல்லி கடுப்பாகி செல்ல நாங்கள் கோயிலுக்கு போயிட்டு வருவோம் என சூர்யா நந்தினியை அழைத்துச் செல்கிறார். அசோகன் பார்த்துவிட்டு மேலே வந்து மாதவி சுரேகாவிடம் விஷயத்தை சொல்லுகிறார். எதுக்காக இப்படி பண்ணி இருப்பான் என்று மாதவி யோசிக்க சுரேகா அவள சாமி என்று மரியாதையாக கூப்பிடனும் என்பதற்காக தான் இப்படி பண்ணி இருப்பான் என்று சொல்லுகிறார்.

சூர்யா காரின் ஜாலியாக பேசிக் கொண்டு வர நந்தினி எதுக்கு சாரி எல்லாம் தேவையில்லாம பிரச்சனை வரும் என்று சொல்ல, நீ எதை பத்தியும் கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லிவிட்டு நீ இல்ல நான் இப்படி மாறி இருக்க மாட்டேன் என்று சொல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார் எல்லார்கிட்டயும் ஒரு குணம் இருக்கு எவ்வளவு நாளா அது வெளிய வர சான்சே இல்ல இப்போ வந்திருக்கு அவ்வளவுதான் என்று சொல்கிறார். பானி பூரி சாப்பிடலாமா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் என்று நந்தினி சொல்லுகிறார். பிறகு இவர்கள் வீட்டுக்கு வர அனைவரும் சாப்பிடுகின்றனர்.

அருணாச்சலம் சாப்பிட கூப்பிட நாங்க அப்புறம் சாப்பிட்டுகிறோம் என்று சொல்லுகிறார். நீ இப்படி எல்லாம் இருக்கிறது எங்களால நம்ப முடியல என்று சொல்ல என்னாலயே நம்ப முடியல டாடி எல்லாத்துக்கும் காரணம் நந்தினி சாமிதான் அவங்களுக்கு தான் நீங்க நன்றி சொல்லணும் என்று சொல்லுகிறார். அதுவு இல்லாம நம்ம வீட்டுல கன்னி பூஜை பண்ணி அன்னதானம் போடணும் என்று நந்தினி சொல்ல சிறப்பா பண்ணிடலாம் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே சுரேகா நந்தினி சாம்பார் எடு என்று சொல்ல உடனே சூர்யா நந்தினி சாமின்னு சொல்லணும் என்று சொல்லுகிறார். இப்ப சொல்றியா சாம்பார மூஞ்சில ஊத்தவா என்று கேட்க சுரேகா நந்தினி சாமி என சொல்ல சூர்யா நந்தினியை அழைத்துக் கொண்டு மேலே சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் கன்னி பூஜை பாடலுடன் தொடங்க அங்கு கோவிலில் இருந்த பிச்சைக்காரர்கள் வர சுந்தரவல்லி அவர்களை துரத்த அவங்க எங்கேயும் போக மாட்டாங்க அவங்க எங்களோட கெஸ்ட் என்று சொல்லுகிறார்.

வேண்டாம் ஐயா என்று சொல்ல அருணாச்சலம் நிற்க வைத்து பாத பூஜை செய்கிறார் உடனே இதை பார்த்து சுந்தரவல்லி கோபத்தின் உச்சத்தில் இருக்க பிறகு சுந்தர வள்ளியையும் செய்ய சொல்கின்றனர். என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 07-01-26