Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாதவி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி செய்த வேலை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 06-11-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அசோகனை சூர்யா காலை வைக்கச் சொல்லுகிறார். பாதம் சரியாகப் பொருந்த அனைவரும் அதிர்ச்சி அடைய சூர்யா ஆக மொத்தம் இந்த ஈத்தர வேலையை நீதான பாத்த என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா பெல்ட் எடுத்துக் கொண்டு வந்து அசோகனை வெளுத்து வாங்குகிறார். வேறு வழி இல்லாமல் அசோகன் நான்தான் பண்ண இதுக்கும் வேற யாருக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லுகிறார். என்ன நடந்துச்சுன்னு சொல்லு என்று சொல்ல அசோகனும் நீ உன்னோட மாமனார் குடும்பத்து கூட தீபாவளி கொண்டாடுவது புடிக்கல அதனாலதான் என்னைய ஊத்திட்டு நடந்து வரும்போது விபூதிய தடவிட்டு வந்ததுனால இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல உடனே அருணாச்சலத்தை சூர்யா கூப்பிட்டு நடந்த விஷயத்தை சொல்லுகிறார். பிறகு இருவரும் மேலே வருகின்றனர்.

அருணாச்சலம் அசோகனிடம் எதுக்காக மாப்பிள்ளை இப்படி பண்ணிங்க என்று கேட்க உடனே சிங்காரம் நீங்கள் அப்படி பண்ணிங்க எதுக்கு சார் இப்படி பண்ணீங்க அது நான் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தேன் இப்படி பண்ணிட்டீங்களே ஏன் இப்படி பண்ணிங்க என்று கையைப் பிடித்து உலுக்க ஒரு வேலைக்காரன் என் புருஷன் கைய புடிக்கிறியா என்று சொல்லி மாதவி கன்னத்தில் அறைய உடனே பதிலுக்கு சூர்யா மாதவியை அரைகிறார். உன் புருஷன் என்ன கோல்ட் மெடல் வாங்கி தானா வீட்டுக்குள்ள ஒக்காந்துகிட்டு இருக்கானா புடவையில் எண்ணெய்ய ஊத்தணவ தானே அவர் வாங்கிட்டு வந்த புடவையை இப்படி பண்ணதுக்கு கைய பிடிச்சு தானே உலுக்குனாரு நானா இருந்தா செருப்பால அடிச்சிருப்பேன் அது என்ன எல்லாரும் வேலைக்காரன் வேலைக்காரன் என்று சொல்றீங்க இது மாதிரி ஒரு புத்தியுடன் இருப்பதற்கு வேலைக்காரங்களா இருக்கிறது எவ்வளவு மேல் என்று சொல்கிறார். இனிமேல் யாரும் வேலைக்காரங்கன்னு சொல்லக்கூடாது என்று சொல்ல சொன்னா என்னடா பண்ணுவ வேலை செய்றவங்கள வேலைக்காரங்க தான் சொல்ல முடியும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நான் பெத்த பொண்ணு என் கண்ணு முன்னாடியே அடிக்கிற கேக்குறதுக்கு ஆள் இல்லை என்று நினைத்தாயா அவ அம்மா நான் இருக்கேன் என்று சொல்லி சுந்தரவல்லி கோபத்தில் சூர்யாவை அடிக்க கை ஓங்க பதிலுக்கு சூர்யாவும் சுந்தரவல்லி கை ஓங்க அருணாச்சலம் சூர்யாவை தடுத்து நிறுத்துகிறார். எதுக்கு சுந்தரவல்லி இப்படி பேசிகிட்டு இருக்க என்று கேட்க இவ வந்து இந்த ஒன்னு இல்லாத குடும்பத்தை கூட்டிட்டு வந்து கூத்தடிச்சு கிட்டு இருப்பான் நான் பாத்துக்கிட்டு இருக்கணுமா என்று கேட்டுவிட்டு மாப்ள செய்தனா இத நான் செஞ்சி இருப்பேன் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். பாத்தீங்களா டாடி எப்படி பேசுறாங்கன்னு அதுவும் இல்லாம இந்த விஷயத்தை இவர் மட்டும்தான் பண்ணி இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா கண்டிப்பாக கிடையாது இவ சொல்லாம அவரு பண்ணி இருக்க மாட்டாரு என்று உறுதியாக சூர்யா சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் கோபப்பட்டு நல்ல நாள் அதுவும் எல்லார் வீட்டிலேயும் சந்தோஷமா இருப்பாங்க ஆனா இந்த வீட்ல மட்டும் தான் பிரச்சனை இருக்கு என்று சொல்லுகிறார் உடனே சிங்காரம் அழுது கொண்டே நந்தினி இடம் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்மா நீ அப்பவே கல்யாணம் ஆனது அப்பவே எனக்கு கூட்டிட்டு போய் இருப்பான்னு சொன்னேன் நான்தான் விட்டுட்டு போயிட்ட இவ்வளவு கொடுமையை நீ அனுபவிச்சுக்கிட்டு இருக்கியா என்று சொல்ல நந்தினி கண்கலங்குகிறார்.

வேணாமா நம்ம போயிடலாம் கிளம்பு என்று சொல்ல அருணாச்சலம் என்ன பேசிக்கிட்டு இருக்க சிங்காரம் என்று கேட்கிறார். நானேதான் இங்கே விட்டுட்டு போன ஆனா ஒரு வருஷம் ஆயும் என் புள்ள இப்படியே தான் கஷ்டப்பட்டு இருக்கு இத என் புள்ள எப்படி ஐயா தாங்கும் நான் எப்படி தாங்குவேன் என்று அழுகிறார். உங்க ரெண்டு பேரும் நம்பி தான்யா இந்த வீட்ல விட்டுட்டு போன ஆனா நீங்க இருக்கும்போதே இவ்வளவு பிரச்சனை நடக்குது நாளைக்கு என் பிள்ளைக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா நான் என்ன பண்ணுவேன் என்று சொல்லிய கொல்லத்தான் நாங்க இங்க இருக்கோமா என்று சுந்தரவல்லி கேட்கிறார். உன் மனசுல இவ்வளவு வலி இருக்குன்னு எனக்கு தெரியுது. ஆனால் இப்பதான் அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்து இருக்கு அதை உடைக்க வேண்டாம் என்று சொல்ல சிங்காரம் கஷ்டப்பட்டு அழுகிறார். எல்லாத்தையும் விட என் புள்ளையோட உசுரு ரொம்ப முக்கியம் கெளம்புமா நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்ல நந்தினி கண்கலங்கி கொண்டு நான் இங்கதான் இருக்கப் போறேன் என்று சொல்லுகிறார். நான் அம்மா போட்டு இருந்தா போ அவரோட அந்தஸ்து கௌரவம் எல்லாத்தையும் விட்டுட்டு கோவில்ல போய் பிச்சை எடுத்தார் அந்த மனுஷனை விட்டு எப்படிப்பா வர முடியும். நான் சாகுற நிலைமையில் இருந்தாப்போ எனக்கு மறு பிறவி கொடுத்த சாமி அவரை விட்டு என்னால எங்கேயும் வர முடியாது ஆனா சாகுற வரைக்கும் அவர் கூடத்தான் இருப்பேன். அவரை விட்டு என்னால் வர முடியாது என்று சொல்ல சுந்தரவள்ளியும் அருணாச்சலமும் சென்று விடுகின்றனர். ரூமுக்கு வந்த அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் மாப்பிள்ளை பண்ணது அசிங்கமா இல்லையா என்று கேட்க அதைவிட இங்க நடக்கிறது எல்லாம் உங்களுக்கு அசிங்கமாகவே தெரியலையா என்று கேட்கிறார். இப்போ நீ மாப்பிள்ளை செஞ்சது சரின்னு சொல்றியா என்று கேட்க ஆமா தப்பு இல்ல என்று சொல்லுகிறார். இப்படி செய்யறது உனக்கு தப்பு இல்லன்னு தெரியலையா என்று கோபப்பட்டு அருணாச்சலம் கேட்கிறார்.

இந்த வீட்டுக்கு அவங்க வந்த அசிங்கப்படுவாங்கன்னு மனசுல பதிஞ்சி இருக்கு இல்ல அதுதான் வேண்டுமென்று சுந்தரவல்லி சொல்ல அருணாச்சலம் சென்று விடுகிறார். ரூமில் நந்தினியும் குடும்பத்தினரும் இருக்க சூர்யா வந்தவுடன் நந்தினி எதுக்காக இப்படி பண்ணீங்க சார் தப்பு என்று சொல்ல, சூர்யா நான் பண்ணது கரெக்டு தான் விட்டா செருப்பால் அடிச்சிருக்கணும் என்று சொல்ல அவர் உங்க அக்காவோட புருஷன் அவர் இந்த வீட்ல இருக்கும்போது அவர் மனசுல இருக்காது என்று சொல்ல இது அவர் மட்டும் தனியா பண்ணி இருக்க மாட்டாரு சொல்லிக் கொடுத்து தான் பண்ணி இருக்காரு என்று சொல்ல இந்த வீட்ல நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் நான்தான் காரணமோ என்று தோணுது. நான் இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து இந்த வீட்டோட நிம்மதி போய்டுச்சு என்று சொல்லுகிறார். உடனே சிங்காரத்தை நந்தினி நீ எதுக்குப்பா உடனே அப்படி பண்ண நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே என்று சொல்ல அதுதான் எனக்கே புரியல மா என்னையும் மீறி அப்படி நடந்துடுச்சு என்று சொல்ல உடனே சூர்யா நீ அவரை எதுக்கு கேட்டுகிட்டு இருக்க மான ரோஷம் இருக்கிற யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணியிருப்பாங்க என்று சொல்ல இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் இதுக்கு மேல அந்த குடும்பம் எப்படி புது டிரஸ் போட்டு தீபாவளி கொண்டாடும் என்று கேட்க மறுபக்கம் சூர்யா நந்தினி குடும்பத்தினர் அனைவரும் புது டிரஸ் போட்டு தீபாவளியை கொண்டாடுகின்றனர். உடனே மாதவி வேணும்னே வெறுப்பேத்தறதுக்கு பண்ற மாதிரி இருக்கு என்று சொல்ல சூர்யா பெரிய சரத்தை வைக்கிறார். உடனே அதை மத்தாப்பு போடுவது போல போட பட்டாசு வெடித்து சிதற நந்தினி பதறுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 06-11-25
moondru mudichu serial promo update 06-11-25