Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினிக்கு கிடைத்த மாலை மரியாதை, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 06-09-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நீங்க ஏதாவது ஒரு மாதிரி பண்ணா தான் அவங்க டென்ஷன் ஆகுறாங்க என்று சொல்ல எனக்கு அது தான் வேண்டும் என சூர்யா சொல்லிவிட்டு காரில் ஏற பின்னால் மாதவி சுரேகா இருப்பத கவனித்த சூர்யா மீண்டும் நந்தினியை கூப்பிடுகிறார். நீ எதுக்கு நந்தினி ஒரே மாதிரி சாரி கட்டுகிறாய்? என்று பேச ஆரம்பிக்கிறார். உனக்கு நான் புதுசா வேற டிசைன்ல புடவை வாங்கவா என்று கேட்பேன் நந்தினி வேண்டாம் என சொல்லுகிறார். உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் சார் என்ன நந்தினி சொல்லுகிறார். என்ன விஷயம் நந்தினி என்று கேட்க நீங்க கம்பெனி லாபத்தில் வந்த பணத்துல அவங்களுக்கு பணம் கொடுக்கிறேன்னு சொன்னீங்க இல்ல அவங்களுக்கு அது சாதாரணமான செலவா தான் போகும். அவங்க இந்த காசை சேர்த்து வச்சா நல்லா இருக்கும் இல்ல என்று நந்தினி சொல்லிவிட்டு வேலை செய்ற கம்பெனி ஆட்களோட பசங்களோட பேர்ல பேங்க்ல டெபாசிட் பண்ணா அவங்களோட படிக்கும் கல்யாணத்துக்கும் உதவும் என்று சொல்ல உடனே சூர்யா நந்தினி கட்டிப்பிடித்து கொஞ்சி சூப்பர் ஐடியா நந்தினி என்று சொல்லுகிறார். நீ சொன்ன மாதிரியே பண்றோம் நந்தினி என சொல்லி கன்னத்தைக் கிள்ளி கொஞ்ச, மாதவி சுரேகா கடுப்பாகின்றனர் பிறகு சூர்யா சென்று விடுகிறார்.

உடனே மாதவி சுரேகா இருவரும் சுந்தரவல்லி இடம் வந்து கோபமாக பேசுகின்றனர் வர வர இந்த வீட்ல இருக்கவே புடிக்கல என்று சொல்ல சுந்தரவல்லி அமைதியாக இருக்கச் சொல்லுகிறார். இப்ப கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காருக்கு பக்கத்துல நின்னு ரெண்டு பேரும் கொஞ்சி கொஞ்சி பேசி சிரிச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல, சுந்தரவல்லி கடுப்பாகிறார். இன்னும் கொஞ்ச நாள் தான் எந்த கையால அவ கண்ணத்தை தட்டி நானோ அதை கையால அவளை அரைய வைக்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா கம்பெனிக்கு வந்து தொழிலாளர்களை சந்தித்து லாபம் வந்த விஷயத்தையும் எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என்ற விஷயத்தையும் சொல்லுகிறார். உங்க எல்லாருக்கும் ஏதாவது கிப்ட் பண்ணனும்னு தான் நெனச்சேன் ஆனா இப்போ உங்க எல்லாரோட குழந்தை பேர்லையும் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அவங்க பசங்க பேர்ல பிக்சட் அமௌன்ட்ல காசு போட்டு அதோட டாக்குமெண்ட் உங்க கையில கொடுக்கிறேன் என சொல்லி அனைவருக்கும் கொடுக்கிறார்.

பிறகு வேலை செய்பவர்கள் எங்க குழந்தைகளோட எதிர்காலத்த பத்தி யோசிச்சீங்கள ரொம்ப சந்தோஷம் சார், ரொம்ப நன்றி சார் என்று சொல்லுகின்றனர். நாங்களே இந்த வேலையை விட்டு போனாலும் இந்த பணம் எங்க குடும்பத்துக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும் என்று சொல்ல சூர்யா உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும் நாங்க முதல்ல பணமா கொடுக்கணும்னு தான் நினைச்சோம், ஆனா இந்த ஐடியாவை கொடுத்தது என்னோட வைஃப் நந்தினி தான் எங்களுக்கு இது தோணல, அவ சொன்னது அப்படியே நீங்க சொன்னீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று சொல்லுகிறார்.

நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் இன்னிக்கு என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்க என்ன விஷயம் என்று கேட்க ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு லேசா இருக்கிற மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். நம்ப நினைச்ச மாதிரியா வாழ்க்கை இருக்க போகுது என்று நந்தினி கேட்க இதே மாதிரியே எப்பவுமே சந்தோஷமா இருமா என்று கல்யாணம் சொல்ல இருவரும் சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர். பிறகு சூர்யா ரூமுக்கு வந்த சுந்தரவல்லி ரூமில் இருந்து ஒரு சட்டையை எடுத்து யோசித்துப் பார்க்கிறார். அப்போது கல்யாணம் அந்த சட்டையை துவக்க எடுத்துக் கொண்டு போகும்போது சூர்யா கவனித்து யாரைக் கேட்டு இந்த சட்டையை எடுத்த என்று கல்யாணத்தை அறைந்ததை நினைத்துப் பார்க்கிறார். இது வெறும் சட்ட கிடையாது என்னோட காதல் என்னோட உயிர், இதுல ஒரு பொண்ணோட உயிர் ஒட்டி இருக்கு இதை துவைக்க பார்த்தியா என்று சொல்ல கல்யாணம் மன்னிப்பு கேட்கிறார்.

சூர்யா எமோஷனலாக பேச சூர்யா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா இதுக்கு மேல இந்த தப்பு பண்ண மாட்டேன் என சொல்ல சூர்யாவும் சரி போ என அனுப்புகிறார். உடனே சுந்தரவல்லி இந்த சட்டையை வெச்சி நான் விளையாட போற விளையாட்டை உன்னால் தாங்கவே முடியாது என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து சுந்தரவல்லி மற்றும் அருணாச்சலத்திற்கு மாலை மரியாதை செய்து இந்த பிக்சட் டெபாசிட் விஷயம் சின்ன முதலாளியம்மா சொன்னதான சொன்னாரு என்று சொல்ல அருணாச்சலம் நந்தினியை கூப்பிடுகிறார். தொழிலாளர்கள் நந்தினிக்கு மாலை போட்டு மரியாதை செய்ய சுந்தரவல்லி கடுப்பாகிறார். பிறகு டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னாடி ஒரு பொண்ணு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க என்று சொல்ல உடனே ஆங்கர் உங்க அம்மா தானே என்று கேட்க இல்லை என்னோட மனைவி நந்தினி என்று சொல்லி போட்டோவை காட்ட வீட்டில் இருப்பவர்கள் பார்த்துவிட்டு கடுப்பாகின்றனர் நந்தினி கிச்சனில் இதை கவனித்து விட்டு மயங்கி விழுந்து விடுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 06-09-25
moondru mudichu serial promo update 06-09-25