தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா ஷட்டில் முடி மாட்டிக் கொண்டிருப்பதால் சுந்தரவல்லியை வெறுப்பேத்த அலப்பறை செய்ய சுந்தரவல்லியும் கோபத்தில் சேரை தள்ளிவிட்டு சென்று விடுகிறார். பிறகு நந்தினி பொறுமையாக முடியை எடுத்து விட சூர்யா உன் முடி ரொம்ப முக்கியம் நந்தினி பத்திரமா பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு செல்ல மற்றவர்களும் கோபமாக சென்று விடுகின்றனர். விஜி வீட்டு வாசலில் ஆட்டோவில் வந்து நின்று விட்டு போன் போடுகிறார் நான் வந்துட்டேன் நந்தினி. நீ வரியா இல்ல நான் உள்ள வரட்டா என்று கேட்க உள்ள வந்தா லேட்டாயிடும் அக்கா நானே வரேன் என்று வேகவேகமாக வெளியில் வர அருணாச்சலம் எங்கம்மா போற என்று விசாரிக்கிறார்.
நந்தினி டீசி வாங்க போகும் விஷயத்தை சொல்ல அருணாச்சலம் கோபப்படுகிறார். அதற்கு நந்தினி எங்களை மாதிரி ஏழைகளுக்கு இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறதுக்கு தகுதி இல்லை என்று சொல்லுகிறார். இவங்க பேசுறது எல்லாம் வெச்சு இது மாதிரி பண்ணாத இங்க இருக்குறவங்களுக்கு யாருக்கும் மனுஷ தன்மை கிடையாது. இது படிப்பு விஷயம் நந்தினி அந்த சின்ன புள்ள மனசுல அந்த ஸ்கூல்ல படிக்க போற ஆசை வளர்ந்துட்டு இருக்கோம் அத கெடுக்காத, அந்த ஸ்கூல்ல சீட் கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அத கெட்டிமா புடிச்சுக்கணும் நீயே இப்படி பேசினா எப்படி என்று கேட்கிறார். எல்லாமே புரியுது ஐயா ஆனா எங்கள மாதிரி ஏழைகளுக்கு சுயமரியாதை தான் ரொம்ப முக்கியம் அதுக்காக படிக்காம வீட்ல இருந்தா கூட சரிதான் என்று சொல்லுகிறார். சரி இப்ப டிசி வாங்கிட்டு என்ன பண்ணப் போறேன் என்று கேட்க யாரோ கட்டியிருக்கிற பணத்தை எடுத்துக்கிட்டு வந்து நான் அம்மாகிட்ட கொடுக்க போறேன் என்று சொல்ல அப்படி கொடுத்தால் மட்டும் உன்னை எல்லாரும் நல்லவன்னு சொல்லிட போறாங்களா என்று கேட்க ஆனால் நந்தினி தயவு செஞ்சு என்னோட தன்மானத்தை தடுக்காதீங்க என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து விஜியுடன் செல்கிறார்.
இப்போ எதுக்கு அவசரப்பட்டு டிசி வாங்குற என்று கேட்க, அவங்க திரும்பத் திரும்ப என் மேல திருட்டு பழி சொல்லிக்கிட்டே இருக்காங்க அது என்ன ரொம்ப பாதிக்குது இப்போ என் தங்கச்சியும் சேர்த்து பாதிக்குது அது எப்படி விட முடியும் என்று கேட்கிறார். நீ எதுக்கு நந்தினி இவ்வளவு அதிகமா யோசிக்கிற இந்தப் பணம் வாங்க நீ எதுக்கு இவ்வளவு யோசிக்கிற அந்த வீட்ல இருக்குறவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, நீ தப்பு பண்ணாதபோ எதுக்கு உனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு என்று எவ்வளவு சொல்லியும் நந்தினி டீசி வாங்குவதில் உறுதியாக இருக்கிறார். இப்ப என்ன டிசி வாங்கியே ஆகணுமா என்று கேட்க, பணத்தையும் சேர்த்து தான் வாங்கணும் என்று சொல்லுகிறார். பணம் கொடுப்பாங்களான்னு தெரியல என விஜி சொல்ல டிசி வாங்கிட்டா பணத்தையும் சேர்த்து வாங்கி தான் ஆகணும் என்று நந்தினி உறுதியாக சொல்லிவிடுகிறார். புனிதா காய்கறிகளை வெட்டிக்கொண்டு இருக்க அம்மாச்சி எப்படி வெட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி விஜியுடன் வீட்டுக்கு வருகிறார். வந்தவுடன் ரஞ்சிதா எங்கே என்று கேட்ட அம்மாச்சி இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து சூர்யா சார் கூட்டிட்டு போனாரு என்று சொல்லுகிறார். இப்போதான் ரெண்டு நிமிஷம் ஆகுது என்று சொல்ல அம்மாச்சி உனக்குத் தெரியாதா என்று கேட்கிறார்.
நந்தினி இவருக்கு எதுக்கு தேவையில்லாத வேலை இவர் எதுக்கு ரஞ்சிதாவை கூட்டிட்டு போகணும் என்று கேட்கிறார்.ரஞ்சிதாவுக்கு டிசி வாங்க போகும் விஷயத்தை சொல்ல புனிதா எதற்கு என்று கேட்கிறார் அவங்க வீட்ல இருக்குறவங்க பணத்தை கட்டிட்டு நம்ம மேல திருட்டுப்பழி போடுறாங்க என்று சொல்ல, விஜி நடந்த விஷயங்களை சொல்லுகிறார். அப்போ டிசி வாங்க தான் போறீங்களா என்று கேட்க பின்ன இவ்வளவு நடந்தும் அங்கு படிக்க வைக்கணுமா என்று பேசிவிட்டு நந்தினி வீட்டில் இருந்து வெளியில் வந்து விடுகிறார். மறுபக்கம் சூர்யா பிரின்ஸ்பல் சந்தித்து ரஞ்சிதாவின் அக்கா டீசி வாங்க போகும் முடிவில் இருக்கா என்று சொல்ல அதுக்கு நாங்க என்ன பண்ணனும் என்று கேட்க, சூர்யா அதெல்லாம் திருப்பி தர முடியாது, ஆல்ரெடி கிளாஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சு பணமும் தர முடியாது என்று நீங்க சொல்லிடனும் என்று சொல்ல பிரின்ஸிபாலும் சம்மதித்து விடுகிறார். சூர்யா ரஞ்சிதாவிடம் இங்கு நடந்தது எல்லாம் உங்க அக்கா கிட்ட சொல்லக்கூடாது என சொல்லி அழைத்து வர நந்தினி வந்துவிடுகிறார்.
சூர்யா ரஞ்சிதாவுடன் ஸ்கூல் நல்லா இருக்கா உனக்கு ஓகேவா என்று பேசிக்கொண்டே வர நந்தினி விஜியுடன் எதிரில் வந்து நிற்கிறார். என்ன விஜி என்ன இந்த பக்கம் என்று கேட்க நந்தினி கூப்பிட்டான்னு வந்தேன்னா என்று சொல்லுகிறார். உடனே நந்தினி சூர்யாவை முறைத்துப் பார்க்க எதுக்கு இப்படி பாக்குற என்று சூர்யா கேட்கிறார் நான் வீட்டுக்கு போயிட்டு தான் வந்தேன் என்று சொல்ல அப்படியா அம்மாச்சி வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்க நீங்க எதுக்கு ரஞ்சிதாவை இங்க கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்கிறார் ரஞ்சிதா படிக்கப்போற ஸ்கூல் எப்படி இருக்குன்னு சுத்தி பாத்துட்டு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கலான்னு கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். நீங்க எதுக்கு அவளை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வரணும் என்று கேட்க சூர்யா விஜியிடம் என்ன உன் பிரண்டு இப்படி பேசிக்கிட்டு இருக்கா என்று கேட்க விடு நந்தினி என்று விஜி சொல்லுகிறார். உடனே வாங்க அக்கா என்று சொல்லி ரஞ்சிதாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு பிரின்சிபல் ரூமுக்கு போகிறார் உடனே சூர்யா ஏற்கனவே சென்டிமென்ட் பேசுவா ஏதாவது பேசி குழந்தை படிப்பு கெடுத்துருவாளோ என்று யோசித்து விட்டு பின்னாலையே செல்கிறார். நந்தினி உள்ளே வர பிரின்ஸிபில் அழைத்து உட்காரச் சொல்லுகிறார் இருக்கட்டும் மேடம் ஏதோ ஒரு வேகத்துல என் தங்கச்சி இந்த ஸ்கூல்ல சேர்த்துட்டேன் ஆனா இவ்வளவு பெரிய ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கிற அளவுக்கு வசதியும் இல்லை தகுதியும் இல்லை என்று சொல்லுகிறார். பிரின்ஸ்பல் அதுதான் சேர்ந்தாச்சு என்று சொல்ல சேர்ந்தாலும் இதுக்கப்புறம் வர செலவை எப்படி சமாளிக்க போறேன்னு தெரிஞ்சா தல சுத்துது என்று சொல்லுகிறார். அதுதான் ஃப்ரீயா படிக்க போறாளே என்று சொல்ல யாரோ கொடுக்கிற காசில என் தங்கச்சியை படிக்க வேணாம் நீங்க டிசி கொடுத்துட முடியுமா என்று கேட்க சூர்யா உள்ளே கதவு பின் ஒளிந்து கொண்டு வேண்டாம் என கையசைக்க பிரின்ஸ்பல் பார்த்து விட விஜியும் கவனித்து விடுகிறார்.
இந்த கவனித்த பிரின்சிபல் நீங்க கட்டாத காச நீங்க எப்படி திருப்பி கேட்க முடியும் என்று சொல்ல நந்தினி அப்ப யார் கட்டினாங்களோ அவங்ககிட்ட கொடுத்துடுங்க என்று சொல்லுகிறார். அது மாதிரி ரூல்ஸ் எல்லாம் இங்க இல்ல, அப்போ பீஸ் மட்டும் கொடுத்து விடுங்க என்று சொல்ல, என்னம்மா இது வேணாம் இத குடுங்க அது வேணாம் அது குடுங்கன்னு பேசிகிட்டு இருக்க இந்த இடத்துல சீட் கிடைக்காம எவ்வளவு பேர் தவம் இருக்கிறார்கள் தெரியுமா? எதுக்காக இந்த ஸ்கூல்ல படிக்க கூடாதுன்னு நினைக்கிறீங்க ஒரு காரணத்தை சொல்லுங்க என்று சொல்ல நந்தினி இந்த பள்ளிக்கூடத்துல படிக்க என் தங்கச்சி கொடுத்து வச்சிருக்கணும் ஆனா யாரோ ஒருத்தர் என் தங்கச்சிக்காக பணம் கொடுத்து இருக்காங்க அதுல தான் பிரச்சனை என்று சொல்ல, நீங்க எங்க தங்கச்சிக்கு டிசி கொடுத்துருங்க பணத்தையும் கொடுத்ததுங்க என்று சொல்ல பிரின்ஸ்பல் பணமும் இல்ல டிசியும் இல்லை என்று சொல்லி கிளம்பச் சொல்ல நந்தினி கெஞ்சுகிறார். ஆனால் பிரின்ஸ்பல் இதுக்கு மேல உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல தயவு செஞ்சு கிளம்புங்க என்று சொல்ல சூர்யா வெளியில் வந்துவிட விஜியும் நந்தினையை அழைத்து சென்று விடுகிறார். நந்தினி விஜியிடம் பணத்தை தர முடியாதுன்னு சொன்னா என்ன காரணம் என்று சொல்ல பேசாம ரஞ்சிதாவே இங்கேயே படிக்க வச்சுடு என்று சொல்ல என்னக்கா நீங்க நடந்ததெல்லாம் சொல்லவே அப்படி சொல்றீங்க என்று கேட்க, நானும் முதல்ல வாங்கிடலாம்னு தான் நினைச்சேன் ஆனா இவங்க பேசுனதெல்லாம் பாக்கும்போது கண்டிப்பா டிசி வாங்க முடியாது என்று சொல்ல சூர்யாவும் ஏன் நந்தினி இப்படி பண்ணிக்கிட்டு இருக்க இப்போ டிசி வாங்கி என்ன பண்ண போற திரும்பவும் ஊர்ல எடுத்துனு போய் விடப் போறியா என்று கேட்க நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் உங்க வீட்ல இருந்து கட்டி இருக்கிற பணத்தை உங்க அம்மா கிட்ட திருப்பி கொடுக்காம அந்த வீட்ல நான் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று நந்தினி சொல்ல மறுப்பக்கம் சூர்யா குடித்து விட்டு அருணாச்சலத்திடம் இந்த வீட்ல இருக்குற ரொம்ப அவளை திருடினு சொன்னாங்க அந்த திருட்டுப் பழியை போகாம அவ இந்த வீட்ல காலடி எடுத்து வைக்க மாட்டேன்னு உறுதியா இருக்கா என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி அவ இந்த பணத்தை திருப்பி கொடுக்கப் போறதோ இல்ல இந்த வீட்டுக்குள்ள வரப்போவதும் இல்லை என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யாவை திரும்பி வருவா நான் கொண்டு வருவேன் என சொல்லுகிறார். என நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
