Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருணாச்சலம் கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 06-01-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் கல்யாணம் மற்றும் நந்தினி இடம் மாதவி ஓவராக பேசிக்கொண்டிருக்க சூர்யா வந்து என்ன விஷயம் என்று கேட்கிறார் உடனே கல்யாணம் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். நந்தினி சொன்னது கரெக்ட் தானே என்று சொல்ல மாதவி வாய மூடு கல்யாணம் என்று சொல்ல எது கல்யாணமா மாலை போட்டு இருக்கிறவங்களை மரியாதையா கூப்பிடனும் என்று சொல்லியும் அப்படி எல்லாம் கூப்பிட முடியாது என்று சொல்லி விடுகின்றனர். அப்படியா அப்படி சொன்னா இதுக்கு மேல அவங்களுக்கு எதுவும் செஞ்சு கொடுக்காதீங்க என்று சூர்யா சென்று விடுகிறார் உள்ளே வந்து சாப்பிட உட்கார சூர்யா கல்யாணத்தையும் சாப்பிட கூப்பிடுகிறார் அவர் மறுக்க அவரையும் கன்னிசாமி சொன்னா கேக்கணும் என்று சொல்லி சேர்ந்து உட்கார நந்தினி பரிமாறுகிறார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க மாதவி சுரேகா அசோகன் வந்து சாப்பாடு பரிமாற சொல்லுகின்றனர்.

உடனே கல்யாணத்தை உட்கார வைத்துவிட்டு சாப்பாடு வேணும்னா கீழ உட்காரு என்று சொல்ல அப்படியெல்லாம் முடியாது என்று சொல்ல அப்ப ரோட்ல போய் உட்காரு சாப்பாடு வேணும்னா கீழ உட்காரு என்று சொல்ல அசோகன் உட்கார போக மாதவி திட்டுகிறார். மீண்டும் கல்யாணம் என்று சொல்ல உனக்கு எத்தனை வாட்டி கல்யாணம் சாமின்னு சொல்ல சொல்லி இருக்கேன் மாலை போட்டு இருப்பதற்கு என்ன மரியாதை என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் வெளியில் வர சுந்தரவல்லி வந்து விடுகிறார். உடனே நடந்த விஷயத்தை ஒண்ணுக்கு ரெண்டாக சுந்தரவல்லி இடம் சொல்ல அவர் கோபமாக உள்ளே வருகிறார்.

உடனே கல்யாணத்திடம் பசங்க சாப்பாடு கேட்டா போட மாட்டேன்னு சொன்னியா என்று கேட்க சூர்யா கல்யாணத்தை அமைதியாக இருக்க சொல்லுகிறார். சுந்தரவல்லி கத்தி கொண்டே இருக்க அருணாச்சலம் வந்து உங்களுக்கு பசிச்சா நீங்களே எடுத்து போட்டு சாப்பிட வேண்டியது தானே என்று சொல்ல, அதுக்கு எதுக்கு நம்ம வீட்ல வேலைக்காரங்க இருக்காங்க சரி கல்யாணம் தானே மாலை போட்டு இருக்கான் இந்த எருமை மாடு என்ன பண்ணிக்கிட்டு இருக்கு என்று கேட்க எருமை மாடா இந்த வாயாலயே சொல்ல வைக்கிறேன் என்று முடிவு எடுக்கிறார்.

ரொம்ப பசிக்குது நம்ம ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிடலாம் என்று சுரேகா சொல்ல சுந்தரவல்லி வந்து ஏதாவது ஆர்டர் பண்ணினா கை, கால் உடைச்சிடுவேன் எதுவும் பண்ணக்கூடாது என்று சொல்ல,மாதவி சுரேகா அசோகன் மூவரும் செருப்பு கூட போடக்கூடாதுன்னு சொல்றாங்க என்று சொல்லுகிறார். செருப்பு விஷயம் கரெக்டுதான் அதை ஃபாலோ பண்ணி தான் ஆகணும் என்று சொல்ல, அந்த வேலைக்காரி சொல்றது தான் உங்களுக்கு சரின்னு படுதா என்று சொல்ல இது அவளுக்காக கிடையாது சூர்யாவுக்காக என்று சொல்லுகிறார். மத்தபடி எந்த வேலைக்காரி மரியாதை கிடையாது என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார். சூர்யா கட்டில் தூங்க போக நந்தினி பதற நீங்க தரையில தான் படுக்கணும் என்று சொல்ல எனக்கு பழக்கம் இல்லை என்று சொல்லுகிறார் அப்ப கூட பெட்ஷீட் தலகாணி இல்லாமல் வெறும் தரையில் தான் படுக்க வேண்டும் என்று நந்தினி சொல்லி விடுகிறார்.

எனக்கு அப்படி பழக்கம் இல்லை என்று சொல்ல வாழ கழட்டுனதுக்கு அப்புறம் நீங்க பெட்ல படுத்துக்கலாம் என்று சொல்ல, அட்லீஸ்ட் பில்லோ மட்டும் போட்டுக்கலாமா என்று கேட்க அது கூட போடக்கூடாது என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவும் படுக்க ஒத்துக்க நந்தினி வெளியில் படுக்கப் போகிறார் உடனே சூர்யா நந்தினியை கூப்பிட்டு உள்ளே படுக்கச் சொல்லுகிறார். சூர்யா நான் தான் வெறும் தரையில் படுத்துறேன்னா நீயாவது பாய் தலையணையில் படுக்கலாம்ல என்று சொல்ல நீங்களே படுக்கும்போது நான் எப்படி படுக்க முடியும் அதனால் தான் என்று சொல்ல சூர்யா சந்தோஷத்தையும் சிரிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி மாலை போட்டுக்கொண்டு இருக்க அருணாச்சலம் எப்படி நடந்தது என்று கேட்க சாமிதா குருசாமி வச்சு எனக்கு மாலை போட்டு விட்டுட்டாரு என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் காரில் நந்தினி சூர்யாவிடம் யாரும் யாரையும் மாற்ற முடியாது அவங்க குணம் வெளியே வருதுன்னு என்ன எடுத்துக்கலாம் என்று சொல்ல மறுப்பக்கம் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க சுரேகா நந்தினி என கூப்பிட உடனே சூர்யா நந்தினி சாமின்னு சொல்லணும் என்று சொல்லுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 06-01-25
moondru mudichu serial promo update 06-01-25