தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி அழுது கொண்டிருக்க அம்மாச்சியும் சிங்காரமும் ஆறுதல் சொல்லுகின்றனர். இவ்வளவு சண்டை சச்சரவு தாண்டி புது டிரஸ் போட்டு தீபாவளி கொண்டாடலாம் என்று ஆசையாக இருந்தோம் ஆனா கடவுளுக்கே அது பொருகள என்று சொல்லி கண்கலங்க மாதவி மற்றும் அசோகன் இருவரும் பார்த்து ரசித்து விட்டு நந்தினியிடம் வந்து ஒன்றும் தெரியாதது போல் பேசுகின்றனர். சிங்காரம் விஷயத்தை சொல்ல இருவரும் வருத்தப்படுவது போல நடிக்கின்றனர். உடனே மாதவி அவங்க டிரஸ் எல்லாம் நல்லா தானே இருக்கு இவ்வளவு தூரம் வந்துட்டு தீபாவளி கொண்டாடாமல் இருந்தால் எப்படி அவங்க கூட சேர்ந்து கொண்டாடு என்று சொல்ல புனிதா மற்றும் ரஞ்சிதா இருவரும் அக்கா புது டிரஸ் போடாம எங்களுக்கு வேண்டாம் என சொல்லிவிட மாதவியும் அசோகனும் சந்தோஷமாக வந்து சுந்தரவல்லி இடம் பேசுகின்றனர்.
சுந்தரவல்லி கடுப்பில் பேச, மாதவி அவங்களை இந்த தீபாவளிக்கு என்ன பண்ணனும் அதை பண்ணிட்டோம் என்று சொல்ல சுந்தரவல்லி புரியவில்லை என்று சொல்லுகிறார். பிறகு மாதவி செய்த விஷயத்தை சுந்தரவல்லி இடம் சொல்ல, அவரும் சந்தோஷப்பட மாதவி இப்படி ஒரு நல்ல நாள்ல இது மாதிரி ஒரு விஷயம் நடந்தா அவங்களால மனசலவில் இருந்து வெளியே வர முடியாது என்று சொல்லிவிட்டு அசோகனை மேலே போய் என்ன பண்றாங்கன்னு பாருங்க என சொல்லி அனுப்புகிறார். மறுபக்கம் அருணாச்சலம் மற்றும் சூர்யா இருவரும் நடந்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்க ஏதாவது அவங்க கிட்ட சொல்லி சரி பண்ண பார்க்கலாம் என்று சொல்லி பேச போக அருணாச்சலம் சென்றுவிட அசோகன் சூர்யாவை நிறுத்தி என் டிரஸ் சூப்பரா இருக்கா மாப்ள என்று சொல்லிவிட்டு உன்னோட டிரஸ் போடலையா என்று கேட்க பிறகு ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்.
அசோகன் நான் போய் அந்த எலியை பாக்குறேன் என்று சொல்லி கிளம்ப சூர்யா கால் தடத்தை கவனித்து விடுகிறார். உடனே அசோகனும் இதை கவனித்து பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க மாதவியும் சுரேகாவும் வருகின்றனர். அவன்கிட்ட இப்போ நல்லா மாட்டிக்கிட்டேன் என்று சொல்ல என்ன ஆச்சு என்று கேட்க அசோகன் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். உடனே மாதவியும் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்க ஓ நீங்களும் இங்கதான் இருக்கீங்களா உங்களுக்கு ஒரு எலி மேஜிக் காட்டுறேன் வாங்க என மேலே கூப்பிடுகிறார்.சூர்யா சத்தம் கேட்டு நந்தினியின் குடும்பத்தினரும் வந்துவிடுகின்றனர். உடனே அசோகன் முழித்துக் கொண்டே இருக்க சூர்யா முறைத்துக் கொண்டு பார்க்கிறார்.
சூர்யா நந்தினியிடம் இது என்னன்னு தெரியுதா என்று கேட்க கால் அடித்தடம் என்று சொல்லுகிறார்.இது எங்கிருந்து வருது தெரியுமா பூஜை ரூமுக்குள் இருந்து என்று சொல்லுகிறார். இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா என்று கேட்க நந்தினி தெரியவில்லை என்று சொல்லுகிறார். நம்ப டிரஸ்ல வேணும்னே யாரும் என்னைய ஊத்தி இருக்காங்க என்று சொல்ல சிங்காரம் இப்படி கூட யாராவது பண்ணுவாங்களா என்று கேட்க இந்த வீட்டில் பண்ணுவாங்க என்று சொல்ல மாதவி அசோகன் முகம் மாறுகிறது. இத கண்டுபிடிக்கிறது ரொம்ப சிம்பிள் இந்த கால் தடம் மேல பாதம் வச்சு கண்டுபிடிச்சிடலாம் என்று சொல்ல உடனே மாதவி என்ன சூர்யா நினைச்சுக்கிட்டு இருக்க நீ அந்த எண்ணையை மிதிச்சுட்டு யார் நடந்து வந்திருந்தாலும் கால் தடம் வந்து இருப்போம் அதுக்காக அவங்க பண்ணாங்கன்னு தான் அர்த்தமா என்று கேட்க அதுக்காக நீ எதற்கு பதறுகிறாய்? என்று சூர்யா கேட்கிறார். இந்த காலடி தடம் இருக்கிறவங்க மட்டும்தான் அக்யூஸ்ட் கண்டுபிடிச்சிடலாமா என்று சொல்லி கல்யாணத்தை கூப்பிட்டு வைக்க சொல்ல அவர் இல்லை என தெரிய வருகிறது.
சுரேகாவை வைக்க சொல்ல அவரது கால் தடமும் இல்லை உடனே மாதவியை வைக்கச் சொல்ல மாதவி கால் தடம் வைப்பது போல அழித்து விடுகிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அசோகனை பெல்டால் அடிக்க சுந்தரவல்லி என் கண்ணு முன்னாடி அடிக்கிறியா கேக்குறதுக்கு ஆள் இல்லை என்று நினைத்தாயா என்று சொல்லி சூர்யாவை அடிக்க கை ஓங்க பதிலுக்கு சூர்யாவும் சுந்தரவல்லி அடிக்க கை ஓங்குகிறார் பிறகு நந்தினி வீட்டுக்கு போயிடலாமா என்று கூப்பிட நான் சாகுற வரைக்கும் அவர் கூட தான் பா இருப்ப என்று சொல்ல மாதவி சுந்தரவல்லி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


