Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினி சொன்ன வார்த்தை,சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 05-09-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி கருப்பன் சாமி போட்டோ முன் நின்று என்ன இருந்தாலும் மாதவி அம்மாவுக்கு ரொம்ப அவமானம் ஆயிடுச்சு எந்த அக்காவா இருந்தாலும் தம்பி நல்லா இருக்கணும்னு தானே நினைப்பாங்க அதுக்காக தான் அவங்க சரக்கு பாட்டில் எடுத்து வச்சாங்க அதுக்காக எதுக்கு அவங்கள தண்டிச்ச, என்று பேசிக் கொண்டிருக்க சூர்யா வந்து இன்னுமா நீ அவங்கள நல்லவங்க நினைச்சுகிட்டு இருக்க, அவங்க சரக்கு பாட்டில் எடுத்து வச்சது என்ன திருத்த இல்ல உனக்கும் எனக்கும் சண்டை வர வைக்க உனக்கு இன்னுமே புரியலையா? அதுவும் இல்லாம நான் உன்னை திட்டிட்டேன் எக்ஸ்ட்ரீம் ப்ளீஸ் சாரி குட் நைட் என சொல்லிவிட்டு படுக்க போக, நந்தினி தூங்கி விட சூர்யாவுக்கு தூக்கம் வராமல் உட்கார்ந்து குடிக்கிறார். பிறகு நந்தினி பக்கத்தில் வந்து உட்கார்ந்து உன்னால எப்படி நந்தினி அமைதியா இருக்க முடியுது.இந்த வயசுல உனக்கு இவ்வளவு பக்குவம் இருக்கிறது ஆச்சரியமா இருக்கு இங்கே இருக்கிறவங்க எல்லாரும் உனக்கு துரோகம் பண்றாங்க.

அவங்களுக்கெல்லாம் முகம் சுளிக்காமல் சமைச்சு கொடுக்கிற ஆனா உன் இடத்துல நான் இருந்தா டக்குனு டென்ஷன் ஆயிடுவேன். அதனாலவோ என்னவோ என் கண்ணுக்கு நீ அழகான சிலையா தெரியுற, உன்னோட பொறுமையினாலும் நிதானத்தினாலும் என்னை ஜெயிச்சி இருக்க, அதே மாதிரி இந்த வீட்ல இருக்குற எல்லாருடைய மனசையும் நீ கண்டிப்பா ஜெயிப்ப இது நடக்குதா இல்லையா என்று மட்டும் பாரு குட் நைட் என சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். மறுபக்கம் மாதவி அழுது கொண்டிருக்க சுந்தரவல்லி சுரேகா இருவரும் வருகின்றனர். எதுக்கு அழுதுகிட்டு இருக்க என்று கேட்க எனக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா அவ என்ன மனசுல எவ்ளோ கேவலமா நினைச்சிருப்பா சாகுற வரைக்கும் எனக்கு இந்த அவமானம் போகவே போகாது என்று சொல்ல, இது உனக்கு மட்டும் கிடைச்சா அவமானம் இல்லை எனக்கும்தான் அவ கண்டிப்பா அழுவா அவள நான் அழ வைத்தேன் என சொல்லுகிறார் சுந்தரவல்லி.

எப்பவுமே அவதாமா ஜெயிச்சுக்கிட்டு இருக்கா என்று சொல்ல அவ அனைய போற விளக்கு அது பிரகாசமா எரிஞ்சுக்கிட்டு இருக்கா உன் தம்பியே அவள தலை முடியை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து வெளியில் தள்ளுவான் இது நடக்கும் நான் நடத்திக் காட்டுவேன் நீ அத நெனச்சும் வருத்தப்படாமல் போய் படு என்று சொல்லி அழைத்துச் செல்கிறார். மறுநாள் காலையில் சூர்யா சந்தோஷமாக மேனேஜரிடம் பேசிக் கொண்டு வர டாடி கிட்டயும் சொல்லுங்க என்று சொல்லி ஸ்பீக்கரில் போட மேனேஜர் எந்த வருஷமும் இல்லாம இந்த வருஷம் நம்ம கம்பெனிக்கு பிராபிட் டபுளா வந்திருக்கு 50 கோடி வரை நமக்கு அதிகமா வந்திருக்கு என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

உடனே மேனேஜர் நம்ம சின்ன முதலாளி அம்மா வந்த ராசி தான் என்று சொல்ல சூர்யா இன்னும் சந்தோஷப்பட்டு பேச சுந்தரவல்லி கடுப்பாகிறார். இந்த லாபத்துல தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று சொல்ல சுந்தரவல்லி அவங்களுக்கு தான் சம்பளம் எல்லாம் கரெக்டா போகுது இல்ல அதெல்லாம் தேவையில்லை என சொல்லுகிறார். அவங்களோட கஷ்டம் இல்லாம இந்த லாபம் வந்திருக்காது டே நைட் ஒர்க் பண்ணி இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது கொடுத்தே ஆகணும் என்று சொல்ல அருணாச்சலம் சரி அவங்களுக்கு போனஸ் கொடுத்து விடலாம் என்று சொல்ல ஓகே என சூர்யா சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்ப, எதிரில் மாதவி சுரேகா வர இதுங்க மூஞ்சிய பாத்துட்டு வேலைக்கு போனா போன காரியம் நடக்குமா என்று சொல்லுகிறார்.

உடனே மாதவி எங்களை பார்த்தால் என்ன ராசி இல்லன்னு சொல்றியா என்று கேட்க அதுதான் உண்மை என சூர்யா சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இடம் கம்ப்ளைன்ட் பண்ண உங்ககிட்ட பேசறதுக்கு எனக்கு டைம் இல்ல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என சொல்லிவிட்டு நந்தினியை கூப்பிடுகிறார். உடனே நந்தினியை இழுத்து வந்து கையில் பையை கொடுத்து நீ இப்போ என் கார்கிட்ட இந்த பேக்கை எடுத்துக்கிட்டு போ நான் எதிரில் வரும் போது சிரிச்சுக்கிட்டே என்னுடைய எதிர்ல நீ பேக் எடுத்துக்கிட்டு வரணும் என்று சொல்லி அனுப்ப நதினியும் அதே மாதிரி பண்ணுகிறார். எதுக்கு சார் திடீர்னு இப்படி பண்றீங்க என்று கேட்க எப்பவும் ஒரே மாதிரி இருக்க கூடாது. இது மாதிரியும் பண்ணனும் என்று சொல்ல நீங்க பாட்டு பண்ணிட்டு போயிடுவீங்க அவங்கதான் கடுப்பா வாங்க என்று சொல்ல ஆவரங்கள்ள அதுதான் வேண்டும் என சூர்யா சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் கொஞ்சி கொண்டிருக்க, மாதவியும் சுரேகாவும் கடுப்பாகின்றனர். பிறகு சுந்தரவல்லி சூர்யாவிடம் உன் கையாலே அவளை வெளியே தள்ள வைக்கிறேன் என மனதில் நினைக்கிறார். நந்தினி சூர்யாவிடம் நாம் மனசுல படுறது ஒன்னும் சொல்ற சரியா இருந்தா பண்ணுங்க என்று சொல்லி சூர்யாவிடம் ஒரு விஷயத்தை சொல்லுகிறார் உடனே சூர்யா. இதை உடனே பண்ணிடலாம் சூப்பர் என்று கொஞ்சுகிறார் உடனே இதை பார்த்து மாதவி கடுப்பாகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 05-09-25