Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கல்யாணம் கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

Moondru Mudichu Serial Promo Update 05-08-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் இங்கிலீஷ் பேசுனதுனால சுந்தரவல்லி அம்மா என்ன பளார்னு அறைஞ்சிட்டாங்க என்று சொல்ல நான் வேற ஏற்பாடு பண்ணுகிறேன் என சொல்லி விட்டு கன்னியப்பனுக்கு போன் போட்டு இங்கிலீஷ் மாஸ்டர் வேணும்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். உங்களுக்கு என்ன இங்கிலீஷ் மாஸ்டர் தான நான் தேடி கண்டுபிடிச்சுட்டு போன் பண்றேன்னு சொல்ல, சூர்யா புதுசா ஒரு மாஸ்டர் வருவார் அவர் வந்தவுடன் என்ன கூப்பிடு என்று சொல்லுகிறார். பிறகு கிச்சனுக்கு வந்த கல்யாணம் இங்கிலீஷ் மாஸ்டர் சூர்யா வர சொன்ன விஷயத்தை நந்தினியுடன் சொல்ல என்னை நைட் எல்லாம் ஏபிசிடி சொல்ல சொல்லி படுத்தி எடுத்துட்டாரு இப்போ இது வேறயா என்று சொல்லுகிறார். இதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்க என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து இங்கிலீஷில் பேசிக்கொண்டு ஒரு நபர் வருகிறார்.

கல்யாணம் அவரை வரவேற்று உள்ளே அழைத்து வர சூர்யா அவரை உட்கார வைத்து விட்டு, நந்தினியை கூப்பிட்டு அறிமுகப்படுத்துகிறார். உடனே கல்யாணத்திடம் இப்போ பாடம் நடத்த போறாங்க புக்கு பேனா எதுவும் இல்லையா எடுத்துட்டு வா என்று சொல்லி சொல்லுகிறார். உடனே அவரிடம் நிறைய ஓம் ஒர்க் குடுங்க என்று சொல்ல, எனக்கு அடுப்பு பாத்திரம் இருந்தா போதும் என்று சொல்ல நீங்க ஏன் அடுப்பு கேட்குறீங்க என்று சொன்னால் நீங்கதான் கன்னியப்பன் கிட்ட இங்கிலீஷ் தெரிஞ்ச மாஸ்டர் கேட்டீங்களா அதனால நான் சமைக்க வந்திருக்கேன் என்று சொல்ல சூர்யா கடுப்பாகி இப்போதைக்கு உங்களோட சேவை எங்களுக்கு தேவையில்லை தேவைப்படும்போது கூப்பிடுகிறேன் என சொல்லிவிட்டு சென்றுவிட நந்தினி சிரிக்கிறார்.

மாதவி இடம் சுரேகா அவளை ஆரம்பத்திலேயே அடித்து துரத்தி இருக்கலாம் ஆனா இப்போ அவளே ஆபத்தா வந்து நிக்கிறா. சூர்யா நந்தினிய கூட்டிட்டு போய் கையெழுத்து போடவிடாம ஏதாவது பண்ணனும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்க அசோகன் வருகிறார். நான் ஒரு செம்மையான ஒரு திட்டம் போட்டு இருக்கேன் என சொல்லி எலி பிடிக்கிற கட்டையை எடுத்துக் கொண்டு வந்து அதில் நந்தினி கையை வைத்து நசுக்கிடலாம் என்று சொல்ல மாதவி கூப்பிட்டு தலையில் கொட்டுகிறார். சுரேகா அக்காவுடன் அதிகமா கோவமா இருக்கேன் போயிடுங்க என்று சொல்லுகிறார். உடனே சுரேகா மாதவி என்கிட்ட ஒரு பிளான் இருக்கு அது சரியா இருக்கா பாரு என சொல்லி திட்டத்தை சொல்ல மாதவியும் சந்தோஷப்படுகிறார்.

சூர்யா ரூமில் யோசித்துக் கொண்டிருக்க அந்த இங்கிலீஷ் மாஸ்டரை ஏன் வேண்டாம் சொன்னீங்க என நந்தினி சூர்யாவை வெறுப்பேத்தி சிரிக்கிறார். உடனே கன்னியப்பனுக்கு போன் போட்டா எடுக்காமல் இருப்பதால் அவரை திட்டி வாய்ஸ் நோட் அனுப்புகிறார். எதுக்கு இதையெல்லாம் தேவையில்லாம பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல உன்னை இங்கிலீஷ் பேச விடாம விட மாட்டேன் என சொல்லுகிறார். எனக்கு இங்கிலீஷ் சுட்டு போட்டாலும் வராது என்று நந்தினி சொல்ல, நீ இங்கிலீஷ் கத்துக்கணும் நாளைக்கு ஒரு மாஸ்டர் வரார் நீ அவர்கிட்ட ஈசியா கத்துக்கலாம் என்று சொல்ல மறுபடியும் முதல்ல இருந்தா என்று நந்தினி கேட்டுவிட்டு தூங்கச் செல்கிறார். மறுநாள் காலையில் கல்யாணம் கிச்சனில் வேலை பார்க்க நந்தினி வருகிறார்.

நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த சுரேகா, அவ கிச்சனில் இருக்கா இப்பதான் சரியான நேரம் அவ மிக்ஸி அரைக்கும் போது நான் பவர் ஆஃப் பண்ணிடுவேன் ஆனா நீ உடனே எனக்கு சட்னி வேணும்னு சொல்லு அவ அம்மில அரைப்பா அந்த நேரம் பார்த்து நீ ஒரு தும்மல் மட்டும் தும்மனா அவ மிக்ஸியில் கை வைக்கும் போது நான் ஸ்விட்ச் போடுறேன் கை மாட்டிகிட்டு சிதறிடும் என சொல்லுகிறார். கல்யாணமும் நான் மளிகை கடைக்கு போயிட்டு வரேன் என்று கிளம்ப மாதிரி கிச்சனுக்கு வருகிறார். சாப்பாடு ரெடியா என்று கேட்க ரெடியாயிடுச்சுமா பொங்கலும் சாம்பாரும் ரெடி என்று சொல்ல எனக்கு சட்னி வேணும் தேங்காய் சட்னி பண்ணி கொடு நான் சாப்பிட்டு போறேன் என சொல்ல நந்தினி மிக்ஸியில் எடுத்து போட்டு அரைக்க உடனே சுரேகா கரண்ட் ஆஃப் பண்ணவுடன் நந்தினி அம்மியில் அரைத்து தரேன் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி சுந்தரவல்லி இடம் ஓடி வந்து பதட்டமாக நிற்க என்னாச்சு என்று கேட்க இதுவரைக்கும் ஆகல இதுக்கு மேல என்ன ஆகும்னு தெரியல என்று சொல்லுகிறார்.கல்யாணம் சுந்தரவல்லி இடம் சின்னையா இங்க உட்காரலைன்னா ஒரு மாசம் சம்பளம் கட் பண்ணிடுவேன் என சொல்ல சம்பளம் கொடுக்கறது நானா அவனா என்று கேட்கிறார்.

கல்யாணம் எழுந்திருக்கும் போது சூர்யா குரல் கொடுத்து வாத்தியார் கெட்டப்பில் வந்து நிற்கிறார் நான் இன்னைக்கு உங்களுக்கு ஆங்கில பாடம் எடுக்க போகிறேன் என சொல்லுகிறார். உடனே நந்தினி இதுக்கு தான் வர சொல்லிருந்தீங்கன்னா நான் அப்பவே போய் இருப்பேன் என்று சொன்ன ஸ்கூல் என்றால் ஒரு டிசிப்ளின் வேணும் என சூர்யா சொல்லுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 05-08-25
Moondru Mudichu Serial Promo Update 05-08-25