தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாடியில் அசோகன் சரக்கு பாட்டில்களுடன் பேசிக்கொண்டு பிறகு குடிக்க ஆரம்பிக்கிறார். உடனே சூர்யா டென்ஷன் ஆகி மேலே வந்து நிற்க அசோகனை கவனித்து விடுகிறார். என்ன இதெல்லாம் என்று வந்து கேட்க எல்லாமே ஃபாரின் சரக்கு என்று சொல்ல என்ன திடீர்னு ஃபாரின் சரக்குக்கு மாறிட்ட என்று சூர்யா கேட்கிறார். உடனே கண்கலங்கி அழுது கொண்டே உங்க அக்கா என் மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறா எனக்கே தெரியாம பீரோல அடுக்கி வச்சிருக்கா என்று சொல்ல ஓ இது உடன்பிறப்போட வேலையா என்று சூர்யா தெரிந்து கொள்கிறார். அசோகனிடம் இதையெல்லாம் எங்க வாங்கினேன்னு உன் பொண்டாட்டி கிட்ட கேட்டு சொல்லுவா என்று அழைத்துச் செல்கிறார். சுந்தரவள்ளியும் மாதவியும் பேசிக் கொண்டிருக்கிறார் அருணாச்சலம் வருகிறார். என்ன விஷயம் என்று விசாரிச்சிட்டிங்களா என்று கேட்க சூர்யா பாட்டில்களை காணம் என்று நந்தினியை திட்டிக் கொண்டிருந்தான் என்று சொல்லுகிறார்.
அதுக்கு இந்த அளவுக்கு சண்டை போடணுமா என்று சுந்தரவல்லி கேட்கிறார். பாட்டிலை நந்தினி எடுத்து மறைச்சு வைக்கல, அவ என்கிட்ட பொய் சொல்ல மாட்டா என்று சொல்ல, சூர்யா அசோகனை அழைத்து வருகிறார். பிறகு அருணாச்சலத்தை கூப்பிட அனைவரும் வந்துவிடுகின்றனர். எதுக்குடா மாப்ள இப்படி குடிச்சிருக்காரு என்று கேட்க மாமா ஒரு முக்கியமான விஷயத்தை உங்க எல்லார்கிட்டயும் சொல்ல போறாரு என்று சொல்ல, அசோகன் மாதவி இடம் வந்து நீ வாங்கி வச்ச ஃபாரின் சரக்கு எங்க வாங்கினானு மாப்பிள கேட்கிறார் நீ சொல்லிடு அவரே நேரடியா வாங்கிபாரு என்று சொல்ல மாதவி அதிர்ச்சி அடைகிறார். என்னையும் மீறி பாரேன் சரக்கு வாங்குற அளவுக்கு நீங்க பெரிய ஆளா யார்கிட்ட வாங்கினீங்க என்று கேட்க மாதவி முழிக்கிறார். கூட பொறந்த தம்பிக்கு நீ இந்த ஹெல்ப் கூட பண்ண மாட்டியா சொல்லுமா மாதவி என்று அசோகன் சொல்லுகிறார்.
என்ன பதில் சொல்ல முடியலையா உன்னோட பிளான் என்னன்னு நான் சொல்லவா என்று சுந்தரவல்லி போட்ட திட்டத்தை சூர்யா அப்படியே சொல்லுகிறார். இந்தக் கேவலமான பொழப்புக்கு துப்பனும் போல இருக்கு, அந்தப் பொண்ணை எப்படி எல்லாம் டார்ச்சல் பண்ணலாம் என்றதை தவிர உங்களுக்கு வேற எதுவுமே யோசிக்க மாட்டீங்களா முதலில் என்னோட ரூமுக்கு வரத்துக்கு உனக்கு யார் உரிமை கொடுத்தது சொல்றியா இப்ப அறையவா என்று கையை ஓங்க அருணாச்சலம் அமைதியாக இருக்க சொல்லுகிறார். உடனே மாதவி என்னோட தம்பி ரூமுக்கு வர நான் யார்கிட்ட பர்மிஷன் கேட்கணும் என்று கேட்க என் பொண்டாட்டி நந்தினி கிட்ட கேட்கணும் நான் இருந்தா என்கிட்ட கேட்கணும் இல்லனா நான் நந்தினி கிட்ட கேட்டுட்டு தான் ரூமுக்கு வரணும் என்று சொல்லுகிறார். இப்பதான் நான் ஒத்துக்கிட்டன் இல்ல என்று சொல்ல அப்போ தப்ப ஒத்துக்கிட்டா அமைதியா விட்டுவிட வேண்டுமா என்று சூர்யா கேட்கிறார்.
குடிக்குறீங்கன்னு சரக்கு பாட்டில் எடுத்து வச்சு உன்னை திருத்தலான்னு பார்த்தேன் அதுக்கு போய் ஓவரா பேசுற என்று சொல்ல இந்த கதை எல்லாம் என்கிட்ட சொல்லாத நீ பாட்டில் எடுத்தது கான ரீசனே வேற எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை வர வைக்க தான் இப்படி நீ பண்ண என்று கேட்கிறார். இப்ப என்ன பண்ண சொல்ற என்று கேட்க சாரி கேட்கணும் என்று சொல்ல மாதவியும் சரி சாரி என சொல்லுகிறார் என்கிட்ட இல்ல நந்தினி கிட்ட சொல்லணும் என்று சொல்ல மாதவியும் இப்ப என்ன நான் சொல்லனுமா அவ கைய புடிச்சு சொல்லனுமா இல்ல கால புடிச்சு சொல்லனுமா என்று கேட்க சூர்யா நந்தினி கூப்பிடுகிறார். பிறகு நந்தினி வந்து நிற்க, மாதவி கையெடுத்து கும்பிட்டு மன்னிச்சிடு என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே சென்றுவிட அனைவரும் சென்ற பிறகு சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா எல்லாத்துக்கும் இவ அனுபவிப்பா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி கண்கலங்கி கொண்டே சுந்தரவல்லி இடம் அவ கிட்ட போய் என்னை மன்னிப்பு கேட்க வச்சிட்டானே என்று சொல்ல மறுப்பக்கம் நந்தினி கருப்பு சாமி போட்டோ முன் இவ கிட்ட எல்லாம் போய் மன்னிப்பு கேட்கிறோம் என்று அவங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்க சூர்யா வந்து நின்று இன்னுமா அவர்களை நல்லவங்க என்று நம்பிகிட்டு இருக்க என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
