தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நான் சொல்ற விஷயத்தை நீங்க ரெண்டு பேரும் பண்ணுங்க என்று சொல்லி ஒரு விஷயத்தை சொல்லுகிறார்.உடனே மாதவி சுரேகா சந்தோஷப்பட்டு இப்பவே பண்ணிடுறோம் என சொல்லி கிளம்புகின்றனர். பிறகு நந்தினி கிச்சனுக்கு வந்து, கல்யாணத்திடம் சாவி எங்க இருந்தது என்று கேட்க இங்கேதான் என்று சொல்ல நான் முதல்ல இங்க வைக்கவே இல்ல, மறந்து வெச்சிருக்கலாமே என்று கேட்க நான் நிஜமாவே இங்கு சாவி வைக்கல நான் நேரா ரூம்ல தான் எடுத்துக்கிட்டு போய் வச்ச நான் என்னைக்காவது இங்க சாவியை வச்சிருக்கேன் நான் இங்க சாவி வைக்கல உறுதியா சொல்றேன் என சொல்லுகிறார். நந்தினி சமைத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் மாதவி சூர்யா ரூமில் இருக்கும் சரக்கு பாட்டில்களை மாதவி ரூமில் எடுத்துக்கொண்டு போய் மறைத்து வைக்கிறார். பிறகு சுந்தரவல்லிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரி எடுத்து வச்சுட்டேன் என சொல்ல, நீ சொன்னது செஞ்சுட்ட இப்ப அவன் வீட்டுக்கு வந்து பாட்டில் இல்லனா நேரா நந்தினியை கூப்பிட்டு சண்டை போடுவான் இது போதும் என சொல்லுகிறார்.
சூர்யா வீட்டுக்கு வர, காரில் வந்து இறங்கியவுடன் போன் பண்ணுகிறார் என்னடா கோச்சிக்கிட்டியா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார். நீ கேட்ட சரக்கு உன்னோட பிராண்ட் இங்க கிடைக்கல சாரி மச்சான் என்று சொல்ல நான் கோச்சுக்கலாம் இல்ல நீ விடு என்று சொல்லுகிறார். நான் வீட்டுக்கு வந்துட்டேன் இல்ல நீங்க என்னோட பிராண்ட் நிறைய வெச்சிருக்கேன் நீ தூங்கு நான் பாத்துக்குறேன் என போனை வைக்கிறாய். பிறகு சூர்யா மேலே போக மாதவி இது மாதிரி சின்ன சின்னதா பண்றத விட பெருசா ஏதாவது பண்ணலாம் இல்ல என்ற சுந்தரவல்லி இடம் கேட்க இப்போதைக்கு அவங்களுக்குள்ள மனஸ்தாபம் வரணும், அது ஒரு நாள் பெருசா வெடிக்கும் போது அதுக்கு மேல நம்ம ஒரு வெடிகுண்டை போட்டா பெருசா வெடிக்கும் என சொல்லுகிறார் பிறகு என்ன நடக்கப் போகிறது என்று இருவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்க சூர்யா ரூமுக்கு வந்து எப்ப பார்த்தாலும் வேலையே தான் செஞ்சுகிட்டு இருப்பியா என்று சொல்லிவிட்டு சரக்கு பாட்டில் எடுக்க வர அங்கு எதுவுமே இல்லாமல் இருக்கிறது.
உடனே நந்தினி இடம் எங்க சரக்கு பாட்டில் என்று கேட்க, நான் வந்தப்பவே பார்த்தேன் சரக்கு பாட்டில் இல்லை என்று சொல்ல கண்டிப்பா நீதான் எடுத்திருப்ப உன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த வீட்ல சரக்கு பாட்டில் மேல கை வைக்க தைரியம் இல்ல எனக்கு இப்பவே சரக்கு வந்தாகணும் என்று கோபப்படுகிறார். உங்களோட பாட்டிலை இதுக்கு முன்னாடி நான் மறைச்சு வச்சது உண்மைதான் அதுக்கப்புறம் உங்க கிட்ட நான் ஏதாவது குடிக்கிறது பத்தி பேசி இருக்கேனா நான் எதையும் எடுக்கல என்று சொல்ல சூர்யா கடுப்பாகி நந்தினியை திட்டுகிறார். இந்த ரூம்ல இருக்கிறது நீயும் நானும் மட்டும்தான் இதை நீதான் செஞ்சிருக்க, நீ எதுவும் தெரியாத மாதிரி டிராமா போடாத என்று திட்டிக் கொண்டே இருக்க அருணாச்சலம் சத்தம் கேட்டு என்னாச்சு என்று சுந்தரவல்லி இடம் கேட்கிறார். நாங்க எதுக்கு கேட்கணும் நீங்களே போய் கேளுங்க என்று சொல்ல, நீங்க எல்லாம் என்ன ஜென்மம் என சொல்லிவிட்டு அருணாச்சலம் மேலே வருகிறார்.
என்னோட சரக்கு எல்லாத்தையும் இவன் மறைத்து வைத்துவிட்டு எடுக்கவே இல்லன்னு சொல்லி சத்தியம் பண்றா என்று சொல்லி கோபமாக கத்த இதுதான் உன் பிரச்சனையா என்று கேட்க சூர்யா பதட்டப்பட்டு கோபப்பட்டு பேசிக்கொண்டே இருக்க அருணாச்சலம் சரக்கு பாட்டில் தானே இப்ப எடுத்து வச்சிருந்தா கூட இப்ப என்ன என்று கேட்கிறார். ஒரு நாள் குடிக்காமல் இருந்திருந்தால் குடியா முழுகி போயிடும் என்று கேட்க சத்தியமா நான் எடுக்கவே இல்லை ஐயா என்று சொல்ல அவ சொல்றது பொய் நம்பாதீங்க என்று சூர்யா சொல்லுகிறார். நந்தினி பொய் சொல்ல மாட்டா, என்று சொல்ல சூர்யா மீண்டும் சரக்கு சரக்கு என்று கத்திக் கொண்டே இருக்கும் ஒருநாள் சரக்கு இல்லன்னா செத்தா போயிடுவ என்று அருணாச்சலம் கோபப்பட்டு திட்ட, சூர்யா நான் தூங்க மாட்டேன் என கோபமாக ரூமை விட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கமா அசோகன் ரூமில் இருக்கும் சரக்கு பாட்டில்களை மொட்டை மாடியில் அடுக்கி வைத்து விட்டு சரக்கு பாட்டில்களுடன் பேசிக் கொண்டிருக்க சூர்யா கோபமாக மேலே வந்து தம் அடித்துக் கொண்டிருக்க, அசோகன் சரக்கு பாட்டில்களுடன் உட்கார்ந்து கொண்டிருப்பதை சூர்யா கவனித்து விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அசோகன் ஆள் சூர்யாவிற்கு சரக்கு பாட்டில்களை ஒலித்து வைத்தது மாதவி தான் என தெரியவர பிறகு சூர்யா மாதவி இடம் மன்னிப்பு கேட்க சொல்லுகிறார் நான் உன்னோட நல்லதுக்காக தான் பண்ணேன் என சொல்ல ஆமாமா ரொம்ப நல்லவங்க தான் என்று சொல்லுகிறார் உடனே மாதவியும் மன்னிப்பு கேட்க என்கிட்ட இல்ல நந்தினி கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று சூர்யா சொன்ன உடனே மாதவி தயங்க சூர்யா நந்தினி கூப்பிடுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
