சூர்யாவுக்கு முருகர் மாலை போட்ட கல்யாணம்.. நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அனைவரும் கிப்ட் கொடுத்து முடித்த பிறகு சூர்யா அவருடைய கிப்ட் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். அதில் சூர்யா நந்தினி என அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படமாக இருக்க அதை பார்த்து சுந்தரவல்லி கடுப்பா இருக்கிறார். இந்த குடும்பம் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டாலும் அது மாதிரி இந்த போட்டோ இருக்கு என்று சொல்ல இதை நம்ம உடனே மாத்திடலாம் என்று முடிவு எடுக்க சுந்தரவல்லி சென்று விடுகிறார். எப்ப பாத்தாலும் நம்ப தான் தோத்துக்கிட்டே இருக்கோம். அந்த போட்டோ எப்படி எடுத்தாங்க என்று சொல்ல, அது AI முலையுமா இந்த மாதிரி பண்ண முடியும் என்று சொல்லி விளக்கம் கொடுக்கிறார். இவ்வளவு தூரம் பங்க்ஷனை அரேஞ்ச் பண்ணது நீங்க ஆனா இப்படி மனசாட்சியே இல்லாம நடந்துக்கிறாரே எந்த சூழ்நிலையிலும் இவங்க தான் முக்கியம்னு அவரு நினைக்கிறாரா என்று சுரேகா கேட்கிறார்.

பிறகு மூவரும் சேர்ந்து சுந்தரவல்லியை ஏத்தி விட முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். பிறகு சூர்யா போட்டோவை மாட்டிவிட்டு அருணாச்சலத்திடம் கேட்க சூப்பரா இருக்கு என்று சொல்லுகிறார். நீ நெனச்சதெல்லாம் சாதிக்கிற சூர்யா என்னால முடியல என்று சொல்ல அது என்னன்னு எனக்கு தெரியும் உங்க மனசுல ஒரு பேய் உட்கார்ந்து உங்களை செய்யவிடாமல் தடுத்து கிட்டு இருக்கு என்று சுந்தரவல்லி பற்றி சொல்லுகிறார். சுந்தரவல்லி கோவமா நடந்துக்கிறது தான் உனக்கு தெரியும் ஆனா அவளுக்குள்ள ஒரு நல்ல மனசுல இருக்கு அது சீக்கிரம் வெளியே வரும் என்று நம்புகிறேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன் நம்புகிறேன் வாழ்த்துக்கள் என்று சூர்யா சொல்லுகிறார். நான் அருணாச்சலமாக மாறினாலும் நந்தினி கண்டிப்பா சுந்தரவல்லியா மாற மாட்டான் என்று சொல்லி விட்டு மேலே சந்தோஷமாக பாட்டு பாடிக்கொண்டே வருகிறார்.

எல்லாமே பார்த்து பார்த்து பண்ணதா அவங்க தூர நிக்கும்போது எதுக்கு கேக் வெட்ட வச்சீங்க என்று கேட்கிறார். அவங்க எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பாங்க இது மட்டும் இல்லாம உங்க அம்மா எங்க வீட்ல உறுதியா ஏத்துக்கல நீங்க ஏன் இப்படி பண்ணிங்க என்று கேட்க அவங்க சொல்றதுக்காக நான் ஏன் போடக்கூடாது உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாம அவங்க புரிய வைக்க பார்த்தார்கள் இப்ப நான் உறுதியா எல்லாரு முன்னாடியும் நிரூபிச்சிட்டேன்ல நீ எதையும் பார்த்து கவலைப்படாத நீ போய் தூங்கு என்று சொல்கிறார். மறுநாள் காலையில் நந்தினி கீழே இறங்கி வர கல்யாணம் முருகருக்கு மாலை போட்டுக்கொண்டு வேண்டிக் கொண்டிருக்க நந்தினி வந்தது விசாரிக்கிறார்.

வழக்கமா நான் மாலை போடுறது தான் போன வருஷம் தான் போகல அதனால இந்த வருஷம் போட்டேன் இதோட 20 வருஷம் ஆயிடுச்சு என்று பேசிக்கொண்டிருக்க அருணாச்சலகம் சூர்யாவும் காபி கேட்கின்றனர். போட்டோ கிழிந்திருப்பதை பார்க்க அருணாச்சலம் மகிழ்ச்சியாக நிற்க சூரியா இப்படி யார் பண்ணது என்று நந்தினி இடம் கேட்கிறார். யார் இதை கிழிச்சது என்று தெரிஞ்சாகணும் என கத்திக்கொண்டிருக்க மாதவி சுரேகா அசோகன் மூவரும் வருகின்றனர். இது யாரோட வேலை என்று கேட்க மாதவியும் சுரேகாவும் எனக்கு தெரியாது என்று சொல்லிவிடுகின்றனர். நீங்கதான் கிழிச்சிருப்பீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க சுந்தரவல்லி வந்து நான் தான் கிழிச்சேன் என்று சொல்லுகிறார். உன்னால என்ன பண்ண முடியும் ஏன் இப்படி பண்ண என்று அருணாச்சலம் கேட்க சுந்தரவல்லி உங்க இஷ்டத்துக்கு நீங்க பண்ணுவீங்க நான் அமைதியா இருக்கணும் என்று உச்சகட்ட கோபம் அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சரக்கு ஊத்தி கொடுக்க சொல்லிக் கேட்க நந்தினி கல்யாணம் சூர்யாவுக்கு மாலை போட்டு விட முடிவு செய்கிறார் கண்ணை மூடி சொன்ன பிறகு சரக்கு ஊத்துறதுக்கு எதுக்கு கண்ணை மூட சொல்றீங்க என்று கேட்க விவேக் மூடு மச்சான் என சொல்ல கல்யாணம் கையில் மாலையுடன் தயாராக இருக்கிறார். என்ன ஸ்மெல்லே வரவில்லை என்று கேட்க அதெல்லாம் வரும் நீங்க முதல்ல ஷூவ கழடிட்டு கிழக்க பாத்து நில்லுங்க என்று கல்யாணம் சொல்ல இதுக்கு எதுக்கு ஷூவை கழட்டணும் கிழக்க நிக்கணும் என்று சொல்லுகிறார் அப்பதான் நீங்க நினைக்கிறதெல்லாம் நடக்கும் என்று சொன்னவுடன் சூர்யாவும் அதேபோல் நிற்க கொஞ்ச குனி என்று சொல்ல உடனே குனிந்த உடன் கல்யாணம் மாலையை போட்டு விடுகிறார் உடனே சூர்யா கண்விழித்து என்னை கழுத்தில் போடுறீங்க என்று கேட்டு மாலை பார்த்து யார் இது மாதிரி போட்டீங்க என்று கேட்கிறார். என் நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 02-01-26
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

25 minutes ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

4 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

4 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

7 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

7 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

7 hours ago