Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ச்சனா போட்ட திட்டம்,சிக்கிய நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 01-05-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி விஜி உடன் வீட்டுக்கு வந்து குடும்பத்தில் இருப்பவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். அம்மாச்சி இவங்க யாரு என்று கேட்க சூர்யா சார் ஓட ஃப்ரெண்டோட சம்சாரம் என்று சொல்லுகிறார். பிறகு அனைவரும் உட்கார்ந்து பேச அம்மாச்சி குடிக்க என்ன வேண்டும் என்று கேட்கிறார். நான் சாப்பிட வந்து இருக்கேன் என்று விஜி சொல்ல, சாப்பாடு போடாம உங்களை யார் அனுப்ப போறா அதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் என்று சொல்ல நந்தினி டீ போட சொல்லுகிறார். புனிதா டீ போட நான் போகிறேன் என்று சொல்ல முகம் சோகமாக இருப்பதை பார்த்து ஏன் புனிதா சோகமா இருக்கா ஏதாவது இருக்கீங்களா என்று கேட்க அந்த வீட்டில் நடந்ததை நினைத்து யோசிச்சுக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார்.

உடனே சிங்காரம் நந்தினி பார்த்தவுடனே சண்டை போட்டுட்டு வந்துட்டதா பார்த்தேன் என்று சொல்ல அதற்கு விஜி நந்தினியை நினைச்சாலும் வர முடியாது சூர்யா அண்ணா விட மாட்டாரு அதையும் மீறி வந்தால் சூர்யா அண்ணனும் கூட வந்துருவாரு என்று சொல்லுகிறார். பிறகு ரஞ்சிதாவின் ஸ்கூல் விஷயம் பற்றி பேச விஜி எனக்கு தெரிஞ்ச ஒரு பெரிய ஸ்கூல் இருக்கு அதுல ரொம்ப பணக்கார பசங்க படிப்பாங்க என்று சொல்ல அதுல எப்படிம்மா நமக்கு கிடைக்கும் என்று அம்மாச்சி கேட்க அதுல கஷ்டப்படுற பேமிலிக்கு 20 சீட்டு ஒதுக்குவாங்க அதுல ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று சொல்லுகிறார். நந்தினியும் அந்த ஸ்கூல் பற்றிய விவரங்களை விஜியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். பிறகு நந்தினி வீட்டுக்கு வர அருணாச்சலம் அவரை கூப்பிட்டு வெளிய போயிட்டு வரியா அம்மா என்று கேட்க விஜி அக்கா அம்மாச்சி எல்லாம் பாக்கணும்னு சொன்னாங்க அதுக்குதான் என்று சொல்லுகிறார்.

உன் முகத்தில் இருக்கிற சந்தோஷம் இந்த வீட்ல இருக்கும்போதும் இருக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல உடனே நந்தினியின் முகம் மாறுகிறது. சரி அதை விடுமா வீட்ல இருக்குறவங்க எப்படி இருக்காங்க என்று சொல்ல ரஞ்சிதாவுக்கு டிசி வந்துடுச்சு அவளை ஸ்கூல்ல சேர்க்கணும் என்று சொல்ல, அதெல்லாம் நான் பாத்துக்குறேன்மா நான் சேர்த்து விடுகிறேன் என்று சொல்ல வேணாயா நீங்க ஏற்கனவே ரொம்ப உதவி பண்ணிட்டீங்க ஏற்கனவே விஜி அக்கா ஒரு ஸ்கூல் சொல்லி இருக்காங்க அங்க 20 பேருக்கு பிரியா அட்மிஷன் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்ல சரி நீ முடிவு பண்ணிட்ட என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

மினிஸ்டர் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அர்ச்சனா வந்து உட்கார மினிஸ்டர் ஏதாவது பேசணுமா என்று கேட்க ஆமாம்பா எனக்கு ஒரு உதவி பண்ணனும் என்று சொல்லுகிறார். என்ன விஷயம் என்று கேட்க எனக்கு ஸ்கூல்ல சீட்டு வாங்கி கொடுக்கணும் என்று கேட்க எம்.பி ,எம்.எல்.ஏ சீட்டு கூட கிடைச்சுடும் ஆனால் ஸ்கூல்ல சீட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் என சொல்லுகிறார். நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது எனக்கு ஒரு சீட்டு கன்ஃபார்மா கிடைக்கணும் என்று சொல்லுகிறார்.சரிமா நான் பாத்துக்கிறேன் என்று சொல்ல அப்புறம் இன்னொரு விஷயம் டாடி நீங்கதான் வாங்கி கொடுத்தீங்கன்னு உள்ள சேர்க்க போறவங்களுக்கு தெரியக்கூடாது என்று சொல்ல அஞ்சு ரூபாய்க்கு பண்ணாலே 50 ரூபாய் விளம்பரம் பண்றவன் நான் ஆனா என்கிட்ட வந்து எதுவுமே சொல்ல கூடாதுன்னு சொன்னா எப்படிமா என்று கேட்க இப்போ பப்ளிசிட்டியோட பழிவாங்குவது தான் ரொம்ப முக்கியம் அந்த சீட்டு வச்சு ஒரு பாடம் எடுக்கப் போறேன் அதுக்கான ரிசல்ட் வரும்போது உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் என்று சொல்ல சரிமா கண்டிப்பா வாங்கி தரேன் என்று சொல்லுகிறார் உடனே அர்ச்சனா அப்பனா அப்பா தான் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றே சூர்யா வம்பு இழுக்க, எதுக்கு எப்ப பார்த்தாலும் கருப்பசாமி என்று அவரை போட்டு டார்ச்சர் பண்ற என்று கேட்க நான் என் தங்கச்சிக்கு சீட்டு கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். இது சின்ன விஷயம் இதுக்கு போய் சாமி கிட்ட வேண்டிக்கிட்டு இருக்க என்று சொல்ல ஏற்கனவே நானும் ஹெல்ப் பண்றேன் டாடி ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டாரு அப்புறம் என்ன என்று கேட்கிறார்.

உடனே கருப்பசாமி இடம் சூர்யா சார் சொல்ற மாதிரி எல்லாம் நடக்க வேண்டாம் இவங்க நல்லதும் பண்ணுவாங்க கூடவே பிரச்சனையும் எடுத்துட்டு வந்து விட்ருவாங்க என்று சொல்லி நைசாக வேண்டிக் கொள்கிறார். அப்போ உன் தங்கச்சிக்கு கருப்பசாமி தான் சீட்டு வாங்கி தரப் போறாரா என்று கேட்க ஆமா அவர் நினைச்சா தான் முடியும் என்று சொல்லி வழி விடுங்க சார் நான் போகணும் என்று சொல்ல, சூர்யாவும் வழிவிட கால் தடுமாறி கீழே விழப்போக சூர்யா நந்தினியை தாங்கி பிடிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். கொஞ்ச நேரத்தில் நந்தினி ரூமில் இருந்து சென்று விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க சூர்யா வந்து தலை வலிக்குது நந்தினி கொஞ்சம் டீ போட்டு கொடு என்று சொல்ல சரி நீங்க ரூமுக்கு போங்க நான் போட்டு தரேன் என்று சொல்ல இல்ல நந்தினி நான் இங்கேயே இருக்க நீ போட்டு கொடு என்று கிச்சனில் உட்கார்ந்து கொள்ள நந்தினியும் டீ போட்டு கொடுக்க சூர்யா சூப்பராக இருக்கு என்று சொல்லி குடிக்கிறார்.

அந்த நேரம் பார்த்து நந்தினிக்கு போன் வர, ரொம்ப சந்தோஷமாக பேசிவிட்டு இப்பவே கூட்டிட்டு வந்துடறேன் என சொல்லி போனை வைத்துவிட்டு சந்தோஷத்தில் துள்ளி குதிக்க சூர்யா என்னாச்சு நந்தினி என்று கேட்கிறார். எனக்கு யார் போன் பண்ணாங்க தெரியுமா ரஞ்சித்தாவ ஒரு ஸ்கூல்ல சேர்க்கப் போறேன்னு சொன்ன இல்ல என்று ஆரம்பிக்க இப்ப என்ன சீட்டு கிடைச்சிடுச்சுன்னு போன் பண்ணாங்களா என்று கேட்க உங்களுக்கு எப்படி தெரியும் என்று நந்தினி கேட்க கருப்பசாமி சொன்னாரு என்று சொல்ல இப்பவாவது அவருடைய சக்தியை புரிஞ்சுக்கோங்க என்று சொல்லுகிறார். உடனே நீ கருப்பசாமிக்கு ஆர்டர் போடுற ஆளாச்சே உன் பேச்சை கேக்காம இருக்க முடியுமா என்று சொல்ல, சரிங்க சார் எனக்கு வேலை இருக்கு என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.

ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு நந்தினி ஸ்கூலுக்கு வர இது ரொம்ப பெரிய ஸ்கூல் மாதிரி இருக்குகா என்று சொல்ல, பெரிய ஸ்கூல் மட்டுமில்ல நல்ல ஸ்கூலும் சொல்லி இருக்காங்க என்று சொல்ல ரஞ்சிதாவின் முகம் மாறுகிறது என்னாச்சி ரஞ்சிதா என்று கேட்க பெரிய ஸ்கூல்ன்னா நிறைய ஃபீஸ் கட்ட வேண்டியதாக இருக்குமே என்று சொல்ல, அப்படி இல்ல ரஞ்சிதா நம்ம வீட்டுக்கு விஜயா அக்கா வந்தாங்களா அவங்க நல்லா படிக்கிற 20 பசங்களுக்கு ஃப்ரீ சீட்டு கொடுக்கறதா சொல்லி இருந்தாங்க வா பாத்துக்கலாம் என்று சொல்லி பிரின்சிபல் வந்து சந்திக்கின்றனர். பிரின்சிபல் டிசியை பார்த்துவிட்டு இந்த பொண்ணுக்கு ஸ்கூல்ல சீட்டு கிடைச்சிடுச்சு என்று சொல்லி மத்த டீடைல் எல்லாம் வெளியே போய் பேசிக்கோங்க என்று சொல்ல நந்தினி எவ்வளவு பீஸ் கட்ற மாதிரி இருக்கும் என்று கேட்க பீஸ் எல்லாம் இல்ல உங்க தங்கச்சி ப்ரீயா பிளஸ் டூ வரைக்கும் படிச்சுக்கலாம் என்று சொல்ல நந்தினி சந்தோஷத்தில் கருப்பசாமியை கும்பிட்டு விட்டு என் தங்கச்சி ரொம்ப நல்லா படிப்பா இந்த ஸ்கூலுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பா என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி சுந்தரவல்லி இடம் அவளுக்கு எப்படி அந்த ஸ்கூல்ல சீட்டு கிடைத்தது எப்படி பீஸ் கட்டிருப்பா என்று கேட்க மறுப்பக்கம் அர்ச்சனா மினிஸ்டரிடம் நான் ஒரு வார்த்தை சொன்னதுக்காக என்ன எதுன்னு கேட்காம அந்த ஸ்கூல்ல சீட்டு வாங்கி கொடுத்தீங்க இல்ல அதுதான் என்று சொல்கிறார்.

பிறகு வீட்டில் அனைவரும் உட்கார்ந்திருக்க அங்கு ஒருவர் ஸ்கூல்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு அட்மிஷன்காக இரண்டு லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்திருக்காங்க என்று சொல்ல, நந்தினி அதிர்ச்சி அடைந்து ஐயோ நான் இல்ல இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நந்தினி சொல்ல சுந்தரவல்லி கழுத்தைப் பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 01-05-25