நந்தினியை திட்டிய சுந்தரவல்லி, மாதவி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மூவரும் ஆர்டரை அனுப்பி விட்டு உள்ளே வர நந்தினி நான் முகம் கழுவி விட்டு கிளம்புறேன் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து விஜி என்னங்க நந்தினி இப்படி சொல்றா என்று சொல்ல, பரவால்ல விடு அவங்க தங்கச்சியோட படிப்பு தானே சொல்றா என்று சொல்ல உடனே விஜி அருணாச்சலம் ஐயா கல்யாணத்தோட ரிஜிஸ்ட்ரேஷன்காக எல்லாரும் கேட்டாரு அதுவே அவளுக்கு தெரியாம நம்ம வாங்கி கொடுத்திருக்கோம் அதுவே எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. நம்ம ஏதாவது அந்த பொண்ணுக்கு துரோகம் பண்றோமா என்று கேட்க உடனே அவரது கணவர் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்னு தானே நம்ம அப்படி பண்றோம் தப்பில்ல விடு பார்த்துக்கலாம் என்று சொல்கிறார்.உடனே நந்தினி வர நான் கிளம்புகிறேன்கா என்று சொல்ல ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி நந்தினிக்கு பணம் கொடுக்கிறார். வேண்டாம்னா சும்மா தான் வந்தேன் என்று சொல்ல இன்னிலிருந்து நம்ம வேலை ஆரம்பிச்சதா இருக்கட்டும் போயிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

வரும் வழியில் நந்தினி நல்லவேளை புனிதா ஓட படிப்பு செலவுக்கு ஒரு வழி பண்ணியாச்சு என்று யோசித்துக் கொண்டே வருகிறார். வரும் வழியில் பட்டுக்கோட்டை இளநீர் என்று எழுதி இருக்கும் இளநீர் கடையை பார்த்து கடைக்காரர் விசாரிக்கிறார். நீ இளநீர் வாங்க வந்தியா ஊர விசாரிக்க வந்தியா என்று கேட்கிறார். இளநீரை வாங்கலையா என்று கேட்க எவ்வளவு என்று கேட்க 60 ரூபாய் என்று சொல்லுகிறார். இவ்வளவு அதிகமா சொல்றீங்க என்று கேட்டு வாங்காமல் சென்று விடுகிறார்.

உடனே சூர்யா நந்தினி என கூப்பிட கேட்காமல் நந்தினி வர காரில் வந்து நந்தினியை கூப்பிடுகிறார். இளநீர் கடையில நின்னுக்கிட்டு இருந்த அப்புறம் எதுக்கு வந்துட்ட என்று கேட்கிறார். அவரு ஒரு இளநீர் அறுபது ரூபாய் சொல்றாரு அதுவும் பட்டுக்கோட்டை இளநீர் என்று சொல்லி ஏமாத்துறாரு என்று சொல்லி நான் கிளம்புறேன் என்று சொல்லுகிறார். உடனே நந்தினியை நிறுத்தி இது ஒரிஜினல் பட்டுக்கோட்டை இளநீர் குடி என்று சொல்லுகிறார். உடனே நந்தினி எப்பவுமே மத்தவங்களோட விருப்பத்தை கேட்கவே மாட்டீங்களா என்று கோபப்படுகிறார். பிறகு நந்தினியை சமாதானப்படுத்தி ஒரு வழியாக குடிக்க வைக்கிறார். நந்தினி ஒரு வாய் குடித்த உடனே இது ஒன்னும் பட்டுக்கோட்டை இளநீர் கிடையாது என்று சொல்லுகிறார். எப்படி சொல்ற என்று கேட்க டேஸ்ட் வச்சே சொல்லிடுவேன் என்று சொல்லுகிறார். அப்போ இது எந்த ஊரு இளநீர் என்று கேட்க பொள்ளாச்சி என்று சொல்ல சூர்யா வியந்து பார்க்கிறார். பிறகு இருவரும் காரில் வீட்டுக்கு கிளம்புகின்றனர்.

அருணாச்சலம் பூஜை அறையில் பத்திரிக்கையை வைத்து விட்டு சூர்யாவின் வாழ்க்கை நல்லா இருக்கணும் ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் என்று கடவுளிடம் வேண்டுகிறார். நல்லபடியா இந்த ரெஜிஸ்ட்ரேஷன் முடியனும். முக்கியமா இந்த விஷயம் சுந்தரவல்லிக்கு தெரிந்து விடக்கூடாது என்று சொல்லி கண்ணை திறக்க சுந்தரவல்லி எதிரில் வந்து நிற்கிறார். என்ன பத்திரிகை வைத்த சாமி கும்பிடறீங்க என்று கேட்க, அது பிரண்டோட பையனுக்கு கல்யாணம் அதுக்காக கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி சாமி கும்பிட்டு விட்டு பத்திரிக்கையை கையில் எடுத்து பிரிக்கிறார். அந்த நேரம் பார்த்து அம்மா என்று சுரேகா கத்த சுந்தரவல்லி அதை கொடுத்துவிட்டு ஓடி வருகிறார். பிறகு பார்த்தால் சுரேகா வழுக்கி கீழே விழுந்து விடுகிறார். பிறகு சுரேகாவை திட்டிவிட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார். அருணாச்சலம் எப்படிம்மா இருக்கு ஹாஸ்பிடல் போலாமா என்று கேட்க, இல்லப்பா இப்ப பரவாயில்ல என்று சொல்லிவிட , அருணாச்சலம் கிளம்பும்போது பைலில் இருந்த கல்யாண பத்திரிக்கை கீழே விழுகிறது. சத்தம் கேட்டு வந்த மாதவியும், அசோகனும் சுரேகாவை விசாரித்துவிட்டு பத்திரிக்கையை கவனிக்கின்றனர். பத்திரிக்கையை எடுத்து மாதவி படித்து டென்ஷன் ஆகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினியும் சூர்யாவும் வர 3 இடியட்ஸ் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். என்ன பத்திரிக்கை அது என்று கேட்க மாதவி என் பிரண்டோட கல்யாண பத்திரிக்கை என்று சொல்லுகிறார். சரி என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விடுகிறார்.

இவனோட கல்யாணத்துக்கு அர்ச்சனா பேர் போட்டு தான் பத்திரிக்கை அடிச்சாங்க இவ பேர் போட்டு பத்திரிக்கை அடிச்சது யாரு இதையெல்லாம் பண்றது யாரு என்று யோசிக்கிறார்.

சுரேகா எனக்கு என்னமோ அப்பா,சூர்யா,நந்தினி இவங்க மூணு பேரும் ஏதோ ஒரு பிளான் பண்றாங்க என்று சொல்லுகிறார். இத பத்தி முதல்ல நம்ம தெளிவா தெரிஞ்சுக்கலாம் அதுவரைக்கும் அமைதியாகவே இருங்க என்று சொல்லி, சுரேகாவிற்கு ஒத்தடம் கொடுக்க வெண்ணீர் எடுத்து வர சொல்லுகின்றனர். மறுபக்கம் நந்தினி ரூமில் இன்னைக்கு சம்பாதித்த காசை வைத்து கடவுளிடம் நன்றி சொல்லி இது மாதிரி நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொல்லி, வேண்டிக் கொள்ள சூர்யா இன்னிக்கு என்ன புலம்பிக்கிட்டு இருக்க என்று கேட்க, நான் நார்மலா தான் இருக்கேன் என்று சொல்ல அப்படி இருந்தா இவ்ளோ பொறுமையா பதில் சொல்ல மாட்டியே நீங்க எதுக்கு கேக்குறீங்க உங்களுக்கு என்ன உரிமையா இருக்கு என்று தானே பேசுவ என்று சொல்லுகிறார். நந்தினி சொல்ல மறுத்தும் வலுக்கட்டாயமாக என்ன விஷயம் என்று சூர்யா கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவிடம் நந்தினி நேத்து நீங்க தூங்குற வரைக்கும் பார்த்த நீங்க குடிக்கவே இல்லையே என்று கேட்கிறார் காரணம் நீதான் என்று சூர்யா சொல்லுகிறார்.

மறுபக்கம் மாதவி இந்த பத்திரிக்கையை அப்பா தான் அடிச்சிருப்பாருன்னு எனக்கு தோணுது என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி இடம் நந்தினி எதையோ கொடுக்க போக உனக்கு எத்தனை வாட்டி சொல்ற இந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு என் எதிரில் வந்து நிற்காத என்று சொல்ல, சூர்யா பார்த்துவிடுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

moondru mudichu serial promo 24-12-2024 (2)
jothika lakshu

Recent Posts

அஜித் 64 படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய அஜித்..!

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…

1 hour ago

குஷி படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்போகும் விஜயின் ஹிட் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…

1 hour ago

ஜனநாயகன் படம் எப்படி இருக்கும்..H.வினோத் கொடுத்த தரமான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

6 hours ago

வருத்தப்பட்ட கிரிஷ் பாட்டி, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…

8 hours ago

சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி, வலியில் துடிக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

9 hours ago

மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள்..!

மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

23 hours ago