தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் அவங்க எல்லாரும் வரட்டும் நம்ம இங்கயே ஜாலியா தீபாவளி கொண்டாடலாம் என்று சொல்ல அப்படி இல்ல சார் சீர்வரிசை கொடுத்துட்டு அவங்க உடனே போயிடுவாங்க என்று சொல்ல ஏன் போகணும் என்று கேட்கிறார் ஊர்ல எல்லாம் அப்படித்தான் பண்ணுவாங்க யார் இங்க தங்கி கொண்டாட மாட்டாங்க அது ஒரு வழக்கம் என்று சொல்லுகிறார் அப்படி இருந்தா என்ன நம்ம வழக்கத்தை மாத்துவோம் அதுவும் இல்லாம போன வருஷம் அப்படி பார்த்தா நீ தீபாவளிக்கு நம்ம அங்க தானே போயிருக்கணும் ஆனா அவங்க தானே இங்க வந்தாங்க ஜாலியா கொண்டாடனும்ல அதே மாதிரி இருக்கலாம் என்று சொல்லுகிறார் அப்ப சரிங்க சார் நான் போயிட்டு அவங்க வந்த உடனே உங்களை கூப்பிடுறேன் என சொல்லுகிறார் மறுபக்கம் சூர்யா ரூமில் இருக்க மேனேஜர் ஃபோன் போட்டு நீங்க டெல்லிக்கு போற வேலை இருக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ணனும் சார் நாளைக்கு பிளைட் புக் பண்ணிடவா என்று கேட்க நாளைக்கு நந்தினி வீட்டில் இருந்து வராங்க நம்ம டைம் சேஞ்ச் பண்ண முடியாதா என்று கேட்க இல்லை சார் நம்ம அந்த மீட்டிங்ல அட்டென்ட் பண்ண நிறைய கம்பெனிஸ் கூட நம்ம டீல் பண்ண முடியும் என்று சொல்ல சரிங்க மேனேஜர் நீங்க கொஞ்சம் லேட் நைட்ல பிளைட் புக் பண்ணுங்க நானே போறேன்னு சொல்லி போனை வைக்கிறார்.
அருணாச்சலமும் சுந்தரவளியும் பேசிக் கொண்டிருக்க நந்தினி வந்து குடும்பத்தினர் சீர் கொண்டு வரப் போகும் விஷயத்தை சொல்லுகின்றனர் உடனே அருணாச்சலம் சந்தோஷப்பட்டு நானும் அவங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுமா இந்த மாதிரி சீர் கொடுக்கிறது ரொம்ப நல்ல விஷயம் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க ஆமாம் அப்படியே மைசூர் பேலஸில் இருந்து லாரில கொண்டு வராங்க என்று சுந்தரவல்லி இளக்காரமாக பேசுகிறார் உடனே அருணாச்சலம் சீர் கொண்டு வருவதற்கு பணமும் பொருளும் தேவையில்ல அவங்க எடுத்துட்டு வர மனசு தான் காரணம் என்று சொல்லுகிறார் அவங்க எடுத்துட்டு வர சீர்வரிசையை நாம் வாங்குனா அவங்களும் எனக்கு சமமானவர்களாக மாட்டாங்களா நான் ஒருபோதும் இது சம்மதிக்க மாட்டேன் அந்த பிச்சைக்கார குடும்பம் வரட்டும்னு நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கிறேன் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூர்யா வருகிறார். கேப்பிங்க என்ன கேளுங்க நான் பாக்குறேன் என்ன டாடி இதெல்லாம் அவ மரியாதையா தன்மையாதான வராங்கன்னு சொல்ற எப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க பாருங்க என்று சொல்லுகிறார்.
அவங்க என்னோட மாமனார் குடும்பம் இந்த வீட்டோட சம்மந்தி அவங்க வரும்போது சம்பந்திக்கு என்ன மரியாதை கொடுக்கணும் அதை கொடுக்கணும் அப்படி இல்லன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது என்று சூர்யா வார்னிங் கொடுக்க சுந்தரவல்லி கோபப்படுகிறார் அப்படி அவர்களை வரவேற்க விருப்பம் இல்லன்னா போய் ரூம்குள்ள இருந்துக்கோங்க வெளியே வர தேவையில்லை என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக சென்று விடுகிறார். பிறகு டென்ஷனாக மேலே நடந்து கொண்டிருக்க மாதவி சுரேகா அசோகன் மூவரும் வருகின்றனர் என்னாச்சும்மா எதுக்கு டென்ஷனா இருக்கீங்க என்று கேட்க இப்ப என்னன்னு சொன்னா மட்டும் சரி பண்ணிடுவீங்களா என்று கோபப்படுகிறார் முதல்ல என்ன விஷயம் சொல்லுங்கம்மா என்று சொல்ல அந்த வேலைக்கார குடும்பம் வரும்போது மரியாதையாக நடத்தணுமா இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியாது நீ என்னையே மிரட்டி கிட்டு இருக்கான் என்று சொல்ல இந்த சூர்யா இப்பெல்லாம் ரொம்பதான்மா பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார்.
போன வாட்டி அவங்க அசிங்கப்படுத்தி அனுப்புவது எல்லாம் போதாதா இப்பயும் எந்த தைரியத்துல வராங்க என்று சொல்ல சுரேகா இப்போ அவங்க பொண்ணு வாழற வீடுன்றது அவங்க கன்ஃபார்ம் பண்ணிட்டு போறாங்க சூர்யாவும் மாமனாரா ஏத்துக்கிட்டான் என்று சொல்லுகிறார். அவங்க வரட்டும் அவங்களை எப்படி ஓட விட்றன்னு மட்டும் பாருங்க என்று மாதவி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் சிங்காரம் குடும்பத்தினருடன் வந்து இறங்க அருணாச்சலம் அவரை வரவேற்கிறார்.
பிறகு சத்தம் கேட்டு சுந்தரவல்லி கடுப்பாகிறார் நலம் விசாரித்துவிட்டு பிறகு நந்தினிக்கு முடியாமல் இருந்தபோது நீங்க ரொம்ப நல்லா பாத்துக்கிட்டிங்க ரொம்ப நன்றி ஐயா என்று சொல்ல அதுக்கு எல்லாம் எதுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் பிறகு நீங்க போய் உள்ள நந்தினி பாருங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி வெளியில் வருகிறார் பிறகு குடும்பத்தினர் மேலே ஏறி வர இவர்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர் சிங்காரமும் பாட்டியும் சுந்தரவல்லி மற்றும் மாதவி சுரேகா என அனைவரிடமும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீங்க கீழே இருப்பீங்கன்னு நினைச்சா மேல இருக்கீங்க என்று சொல்ல உடனே மாதவி அம்மாச்சியிடம் ஏய் நாங்க எப்பவுமே மேல தான் இருப்போம் என்று கோபப்பட உடனே புனிதா பெரியோர்களை போய் வா போன்னு சொல்றீங்க என்று சொல்ல ஏன் உங்களுக்கு பழசு எல்லாம் மறந்து போயிடுச்சா என்று மாதவி கோபப்படுகிறார் உடனே சிங்காரம் தெரியாமல் சொல்லிட்டேன் அம்மா என்று சொல்லுகிறார் உடனே நந்தினி வந்து அவர்களை நலம் விசாரிக்க இன்னும் கடுப்பாகின்றனர்.
பிறகு சூர்யா வந்து அனைவரிடமும் பேசி சந்தோஷப்படுகிறார் பிறகு ஸ்கூல்ல எப்படி போகுது என்று ரஞ்சிதாவிடம் கேட்க சூப்பரா போகுது சார் என்று சொல்லுகிறார் என இப்போது சார் என்று கூப்பிட்டு இருக்க அக்காவோட புருஷனை என்னன்னு கூப்பிடனும் நீங்க சொல்லுங்க அம்மாச்சி என்று சொல்ல அம்மாச்சி தயங்கிக்கொண்டே இருக்கிறார் உடனே பளிச்சுனு சொல்லுங்க என்று சொல்ல மாமான்னு சொல்லணும் என சொல்லுகிறார் உடனே ரஞ்சிதாவும் சரிங்க மாமா என்று சொல்ல புனிதாவிடமும் நீயும் மாமானு தான் சொல்லணும் என சொல்லுகிறார் இதை பார்த்து சுந்தரவல்லி டென்ஷன் ஆக உடனே சூர்யா இந்த வீட்டில சில கெட்ட ஆவிகள் இருக்கு என்று சொல்ல உடனே புனிதா புரிந்து கொண்டு அப்படியா மாமா பேய் பிசாசு எல்லாம் இருக்கா என்று மாதவியை பார்க்கிறார் அவர்கள் சொல்றதெல்லாம் கண்டுக்காதீங்க என்று சொல்ல மாதவி முறைக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update

