தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் விஜி நந்தினியை படுக்கச் சொல்லி விட்டு அவரும் ரூமில் படுத்துக்கொள்ள சூர்யா வெளியில் படுத்துக்கொள்ள செல்கிறார். மறுநாள் காலையில் வீட்டில் சூர்யா அம்மன் துதி பாடும் சத்தம் கேட்டு அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சூர்யா காலையில் குளித்து பட்டை போட்டு நந்தினியின் தலைப்பக்கம் உட்கார்ந்து கண்ணை மூடி மந்திரம் சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் ரூமுக்கு வந்து சூர்யாவை பார்த்து சந்தோஷப்பட நந்தினியும் சூர்யாவை பார்க்கிறார். விஜி நீங்க எப்படி அண்ணா இப்படி பாடுறீங்க என்று ஆச்சரியமாக கேட்க, நந்தினியும் நீங்க அடி மனசுல இருந்து எப்படி பாடுனீங்க என்று கேட்க உனக்கு சரியாக நைட்டோட நைட்டா ரெடி பண்ணிட்டேன் என சொல்லுகிறார். நீ சொன்ன பாட்ட போன்ல போட்டு பார்த்தேன் அப்புறம் மனப்பாடம் பண்ணிட்டேன் என சொல்லுகிறார்.
உங்கள மாதிரி ஒரு ஆள் பக்கத்தில் இருக்கும் போது நந்தினிக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பா.நந்தினி வரத்துக்கு முன்னாடியும் இப்ப நீங்க இருக்கிறதுக்கும் ரொம்ப பெரிய மாற்றம் இருக்கு என்று சொல்லிவிட்டு நந்தினி இடம் நீ ரொம்ப குடுத்து வச்சவ நந்தினி என்று சொல்லுகிறார். அருணாச்சலமும் சூர்யாவை பாராட்டி விட்டுச் செல்கிறார். டைனிங் டேபிளில் சுந்தரவல்லி மாதவி சுரேஷ் அசோகன் உட்கார்ந்து சூர்யாவை பற்றி பேசுகின்றனர். ஆரம்பத்தில் நந்தினியை பொண்டாட்டின்னு சொல்லும்போது அம்மாவை வெறுப்பேத்த தான் சொல்றான்னு நினைச்சேன் ஆனா இன்னைக்கு பாடுன பாட்ட பார்த்தா உண்மையான அன்பு வந்து இருக்கும்னு தோணுது என்று சொல்ல அப்போ வீட்டை விட்டு துரத்துவது ஈசி இல்லைன்னு சொல்றியா என்று மாதவி சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் கல்யாணம் இவர்களுக்கு சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறுகிறார். சுரேகா ஒரே வாய் எடுத்து வைத்துவிட்டு துப்பி விட்டு என்ன சாப்பாடு மண்ணு மாதிரி இருக்கு என்று கேட்க மாதவியும் திட்டுகிறார். சுந்தரவல்லி என்ன பண்ணி இருக்க என்று கோபப்பட, நந்தினி அம்மாவுக்கு அம்மா போட்டிருக்கிறதுனால உப்பு புளி அதிகமா சேர்க்கக்கூடாது என்று சொல்லுகிறார். யாரைக் கேட்டு இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க நாங்க இப்படி எல்லாம் சாப்பிடணுமா என்று கோபப்படுகிறார். ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போய் தாளித்து எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அம்மா போட்ட வீட்ல தாலிக்கக் கூடாது என அந்த பாவத்தை பண்ண சொல்லாதீங்க என்று சொன்ன மாதவி கோபப்பட்டு போய் தாலித்து எடுத்துக் கொண்டு வா என கிச்சனுக்கு அனுப்புகிறார்.
கல்யாணமும் குழம்பு தாலிக்க அதில் பல்லி வந்து விழுந்து விடுகிறது. இதனை பதறிப்போய் கல்யாணம் அனைவரையும் கூப்பிட்டு காட்ட அவர்கள் பார்த்துவிட்டு அருவருப்பாக இருப்பதால் சென்று விடுகின்றனர்.நந்தினிக்கு விஜிக்கு கஞ்சி காய்த்து ஊட்டி விடுகிறார். கொஞ்ச நேரத்தில் சூர்யா வர எனக்கு இன்னைக்கு கொஞ்சம் முக்கியமான மீட்டிங் ஆபீஸ்ல இருக்கு இல்லனா நான் இருப்பேன் விஜி என்று சொல்ல இருக்கட்டும் நான் தான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு இதே மாதிரி சாப்பிட்டா சீக்கிரமா சரியாயிடும் என விஜி சொல்லுகிறார். எப்போ அக்கா சரியாகும் என நந்தினி கேட்க சீக்கிரமே குணமாயிடும் நந்தினி என்று சொல்லுகிறார்.
நந்தினி நீங்க கிளம்புங்க சார் அதுதான் அக்கா இருக்காங்கல்ல என்று சொல்ல சூர்யாவும் சரியென சொல்லுகிறார். எங்க வீட்ல இருக்குறவங்க யாராவது ஏதாவது சொன்னா நந்தினி மாதிரி நீயும் மறைக்காத உடனே எனக்கு போன் பண்ணி சொல்லு என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விடுகிறார். சுரேகா சந்தோஷமாக மாதவி ரூமுக்கு சிக்கன் பட்டர் நான் வந்து கிட்டு இருக்கு, சிக்கன் தந்தூரி என லிஸ்ட் பெருசாக சொல்ல மாதவி அசோகன் என இருவரும் சந்தோஷப்படுகின்றனர். உடனே சுரேகா பல்லி தானா விழுந்ததா இல்ல அந்த கல்யாணமே எடுத்து போட்டுட்டு வேணும்னு சொல்றானான்னு தெரியல என்று சொல்லுகிறார். நான் ஆர்டர் பண்ணதெல்லாம் வரட்டும் அந்தக் கல்யாணம் முன்னாடியே வச்சு சாப்பிட்டு வெறுப்பேத்தணும் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
